பச்சைபூக்கோசு – Broccoli

0
742

 

 

 

பச்சை பூக்கோசு (Broccoli) என்பது பிரேசிகேசியே (Brassicaceae)  குடும்பத்தைச் சேர்ந்த,  பிரேசிகா ஒலிரேசியா இத்தாலிகா (Brassica oleracea Italica) என்னும் அறிவியல்  பெயருள்ள,  உண்ணக்கூடிய மலர்க்கொத்துக்களை உருவாக்கும் இத்தாலியைத் தாயகமாகக்கொண்ட தாவரமாகும் 

புரோக்கலி என்ற  பெயர், முட்டைக்கோசின் பூக்கும் பகுதியைக் குறிப்பிடும்   இத்தாலியச் சொல்லான ப்ரோக்கோலோ (Broccolo) விலிருந்து வந்தது. பச்சைப்பூக்கோசினை, முட்டைக்கோசிலிருந்து  தோட்டக்கலைத்துறை  வல்லுநர்களான  பழங்கால இத்தாலியைச் சேர்ந்த  எட்ருஸ்கன்ஸ்  (Etruscans) உருவாக்கினர்.

வியாபாரரீதியாக 1500லேயே பூக்கொசு (cauliflower) விளைவிக்கப்பட்டதிற்கும் தாமஸ் ஜெஃப்ரசன் என்னும் தோட்டக்கலை ஆர்வலர் 1700ல் பூக்கோசின் விதைகளில் ஆய்வுகளை செய்ததற்கும்   சான்றுகள்  கிடைத்துள்ளன. அமெரிக்காவில் 1806 ஆம் ஆண்டில் அதற்கு பச்சை ப்ரோக்கோலி என்று பெயரிடப்பட்டு அது ஒரு காய்கறியாக முதன் முதலில் அறியப்பட்டது. பின்னர்  அமெரிக்காவில் இத்தாலியர்கள் குடியேற்றத்திற்குப் பின்னர் 1920ல்   புரொக்கலி  சாகுபடி செய்யப்பட்டது

கடந்த 30 வருடங்களாக  உலகின் மிகபிரபலமானதும் மதிப்பு மிக்கதுமான  காய்கறிகளில் ஒன்றாகிவிட்ட புரோக்கலி ஒரு பளபளப்பான, 80-130 செ மீ வளரக்கூடிய ஆண்டுக்கு ஒருமுறை/ இருமுறை பூத்துக்காய்க்கும் தாவரமாகும். கிளைகளில்லா ஆணிவேரும், மெழுகுபோன்ற வழவழப்பான தண்டும் கெட்டியான கரும்பச்சைநிற,  எதிரடுக்கிலமைந்த அகன்ற  இலைகளையும் கொண்டது,  கூட்டல் குறியைப்போல இருக்கும் பூக்கள் மே –ஆகஸ்டில் மலரும்.  மெல்லிய நீளமான கனிகளில் 20-60 விதைகள் இருக்கும். இவை நல்ல சூரிய ஒளி விழும் நிலங்களில் சிறிதளவு அமிலத்தன்மை உடைய செழிப்பான மண்ணில் மிக நன்றாக வளரும். ப்ரோக்கோலியின் தலைப்பகுதி, பச்சை நிறத்தில், அடர்த்தியாக, தடித்த தண்டில் இருந்து சிறியமரம் போன்ற தோற்றத்தில் சீரான கிளைபரப்பிய குருத்துக்களோடு பெருந்திரளான இலைகளால் சூழப்பட்டிருக்கும்.  

புரோக்கலியில் பொதுவாக மூன்று  வகைகள் இருக்கின்றன.

 மிகவும் பிரபலமான வகை பிரிட்டனில்  காலப்ரெஸ் என்றும் வட அமெரிக்காவில் எளிமையாக “ப்ரோக்கோலி” என்றும் அழைக்கப்படுகிறது. இது பெரிதான (10 இருந்து 20 செமீ வரை) பச்சைத் தலைப்பகுதிகள் மற்றும் தடிமனான தண்டுகள் உடையது. இது இத்தாலியில் காலப்ரியா எனப்படுகிறது. இது குளிர் பருவ வருடாந்திரப் பயிர் ஆகும்.

ரோமன்ஸ்கோ ப்ரோக்கலி அதன் தலைப்பகுதியில் வெளிப்படையான ஃபிராக்டல் தோற்றத்தைக் கொண்டுள்ளது. மேலும் இது மஞ்சள்-பச்சை நிறங்களில் இருக்கும்.இதன் தோற்றத்தை கவனிக்கையில் மனிதனால் கணிக்கமுடியாத இயற்கையின் அற்புதத்தைக்காணலாம்.

19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் அமெரிக்காவில் அடர் ஊதா பூக்கோசு அறிமுகமானது. ஊதா புரோக்கலி தெற்கு இத்தாலி, ஸ்பெயின் மற்றும் லண்டனில்  விற்பனை செய்யப்படுகின்றது. இது காலிஃபிளவர் போன்ற தலைப்பகுதி வடிவத்தைக் கொண்டதுதான். ஆனால் பூ மொட்டுகளின் முனைகளில் ஊதா நிறத்தைக் கொண்டிருக்கும் ஊதாபோக்கோசின் பூக்கள் இலைகள் மற்றும் தண்டுகள் ஆகிய அனைத்துமே உண்ணத்தகுந்தவை

ப்ரோக்கோலியில்  வைட்டமின்கள் , C, K மற்றும் A, D, B2, நார்சத்துக்களும்,   டையின்டோலிமீத்தேன் மற்றும்   செலினியம் போன்ற புற்றுநோய்க்கு எதிரான ஆற்றல்மிக்க பல்வேறு ஊட்டச்சத்துள்ள பொருட்களும் அடங்கியுள்ளன.

இதனை நீராவியில் சமைத்தோ அல்லது பச்சையாகவோ உண்ணுவதால் இதயநோய்களைத் தடுக்கலாம்,  உயர்ரத்த அழுத்தத்தைக் குறைக்கலாம் எலும்புகள் வலுவாகும். நோயெதிர்ப்புச்சக்தியும் அதிகமாகும்.   ப்ரோக்கோலியின் நன்மைகள் இதனை பத்து நிமிடங்களுக்கும் மேலாக வேகவைப்பதன்மூலமாக அதிகளவில் குறைகின்றது.

 வடஅமெரிக்காவில், கலிஃபோர்னியாவில் முதன்மையாகவும்   அடுத்தபடியாக சீனா மற்றும் இந்தியாவில்  அதிகளவிலும்  புரோக்கலி விளைவிக்கப்படுகின்றது.

 

 

 

 

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments