சாளரம்

0
846
IMG_20201203_223022-f24d5acd

புதிதாய் பூத்ததொரு சாளரம்
ஏன் இத்தனை பிம்பங்கள்
பிரம்மையாகக் கூட இருக்கலாம்
இல்லை இது என்னறைதான்

சூரியனைக் காணவில்லை
வெண்பனி ஓயவில்லை
இடைக்கிடை சிறு சலனம்
திடீரென மௌனம்

மீண்டும் பார்க்கிறேன்
தூரமாக அதே மரங்கள்
சிறகு விரிக்கும் பட்ஷிகள்
ஆனால் ஒரு பாதை தானே

சகதியின் மேலாக இருகிச்
செல்லும் ரயர்கள்
கனதியாக ஒன்றுமில்லை
புதிதாக எதுவுமில்லை

சிதறிய நீர்த்துளிகள் அங்கு
மழை பொழிந்திருக்க வேண்டும்
உணர்ந்துகொண்டேன் அது
உடைந்து போன கண்ணாடி

மீண்டும் மௌனம்.

_நாஓஷி_

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments