நான் ஒண்ணும் அவ்ளோ மோசம் இல்லிங்க by 2020

1
484

2020 ஒரு மோசமான வருசம் எண்டு திரும்புற பக்கமெல்லாம் சவுண்டு கேக்குது. என்னைப் பொறுத்தவரை அவ்ளோ மோசமான வருசம் எண்டெல்லாம் சொல்ல தேவையில்லை. ஏனென்டா உலகத்துக்கு பல முக்கிய படிப்பினைகளை தந்திட்டு தானே போயிருக்கு.

அதுகளை சும்மா பாப்பம்.

இந்தக் காலத்து மனுசர் என்னையும் சேர்த்து தான் தங்கள மிஞ்ச ஒண்டும் இல்ல எண்ட நினைப்பில தானே 2020ல காலடி எடு‌த்து வச்சம். 2020 முடிய முதலே அது பிழை எண்டு விளங்கீட்டு பாத்தியளோ. கொரோனா, வெள்ளம், சூறாவளி எண்டு இயற்கைய மிஞ்ச ஒண்ணும் இல்ல எண்டு சொல்லிப் போட்டுது பாத்தியளோ. அடுத்து இந்த lockdown க்க கட்டுக்கட்டா காசிருந்தும் காணிக்குள்ள கீரைக்கட்டு வச்சிருந்தவன் அளவுக்கு ருசியாய சாப்பிடேலாம போச்சு பாத்தியளோ. விவசாயம் எவளவு முக்கியம் எண்டதையும் காட்டிப் போட்டுது பாத்தியளோ.

ஒரு ஆத்திரஅவசரம் எண்டாக்கூட பக்கத்து வீட்ட எட்டிப் பாக்காத சனத்துக்கு பக்கத்து வீட்டுக்காரன் அரிசி குடுத்த கதையும் நடந்து தான் இருக்கு. அயல் சனத்தோடையும் கொஞ்சம் பழகோனும் எண்டத இத விட வேற வழில வடிவாச் சொல்லேலாது. அட பக்கத்து வீட்ட விடப்பா. இந்த வேலைக்குப் போற சனத்துக்கு தன்ர வீட்டையும் ஆக்கள் இருக்கெண்டு தெரிய வந்திருக்கும். மனுசனுக்கு இப்ப தான் மனுசிக்கு சமைக்கத் தெரியுமோ இல்லையோ எண்டு தெரிய வந்திருக்கும். மனுசிக்கு மனுசன் என்ன வேலை செய்யுது எண்டு தெரிய வந்திருக்கும். ரெண்டுமே வேலைக்கு போறதுகள் எண்டா தங்கட பிள்ளையள் என்ன செய்யுது எண்டு தெரிய வந்திருக்கும். இன்னும் சிலருக்கோ தங்களுக்கு பிள்ளை இருக்கு எண்டு தெரிய வந்திருக்கும். இப்பிடியா குடும்பங்களுக்க உறவைப் பத்தி சொல்லிப போட்டுது பாத்தியளோ..

இன்னும் சிலர் வீட்டுக்க சும்மா இருக்க ஏலாம புத்தகங்கள வாசிச்சவங்கள் எண்டது ஒரு நல்ல விசயம் தானே(நானும் கொஞ்ச புத்தகம் வாசிச்சனான்🙈🙈) இப்பிடியா கொஞ்சப் பேர நூல்களை நோக்கி திருப்பினது சந்தோசமான விசயம் பாத்தியளோ..

தொழில்நுட்ப வசதிகள் எல்லா இடமும் இருக்கு தானே எண்டு கன பேர் நினைச்சுக் கொண்டிருந்தவை முக்கியமா பொறுப்பில இருக்கிற கன பேர். அப்பிடி எல்லா இடங்களிலும் தொழில்நுட்ப வசதிகள் இல்ல எண்டு வெளிச்சம் போட்டு காட்டிட்டு பாத்தியளோ. அந்த வசதியள செய்து குடுக்க பல இடங்களில கடல் கடந்த சொந்தங்கள் முன்வாறது சந்தோசம் தானே. இந்த வழியிலையாவது இந்த தொழில்நுட்ப இடைவெளி குறைக்கப்படும் பாத்தியளோ..

சில உறவுகளை சில சந்தோசங்களை  இழந்தாலும் பல புதிய உறவுகளையும் பல படிப்பினைகளையும் தந்தது மட்டுமில்லாம இயற்கைய விஞ்ச ஏதுமில்லை எண்டதையும் மூத்தகுடிகள் எதையும் காரணம் இல்லாம செய்யேல எண்டதையும் ஞாபகப்படுத்தி விட்டுச் சென்ற 2020 “எந்தத் தீமைக்குள்ளும் சிறு நன்மை உண்டு” எண்டு ஏதோ ஒரு பாட்டில வந்தத உண்மையாக்கிட்டு.

  • நான்_ஒண்ணும்_அவளோ_கெட்டவன்_இல்ல_சார்

-By 2020

5 1 vote
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
1 கருத்து
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Gobikrishna D
3 years ago
இதை மதிப்பிடுங்கள் :
     

True ji…