நிறத்தைக் கொண்டு நேசிக்க வேண்டாம்.
நிறத்தில் எந்த பேதமும் இல்லை அதை நாம் யோசிக்க வேண்டும்.
கருப்பு நிறத்தை கொண்டோர் பல சாதனைகளைப் புரிந்துள்ளார்கள்.
கருப்பு என்பது தாழ்வு இல்லை.
கருமேகம் கருப்பென்று மழையை வெறுப்பது உண்டா???
தேகம் கருப்பென்று வெண்மனதை வெறுப்பது சரியா???
கடைசியில் கட்டையில்வெந்து சாம்பலான கருப்பை வெறுப்பு சரியா???
நிலக்கரியும் கருப்பென்று மின்சாரம்
தேவை இல்லை என்பது சரியா???
இருள் கூட கருப்பு தான்
இரவு என்ற வரவைத் தருகிறது.
நம் நிழல்கூட கருப்பு தான்…..
கண்ணுக்கு அழகு தரும் மை கூட கருப்பு தான்….
கருப்பு நிறம், சிலருக்கு
மனதில் மறைத்து வைக்கப்பட்ட
வடு சிலருக்கோ அன்பின் ஆலயம்….
எது
எப்படியாயினும்
நிறங்களில் கருப்பின்றி நிகழாது பிறப்பும்
இறப்பும் கூட….
கருப்பு இல்லாத
இடம் எப்போதும் வெளுப்புதான்….
கருப்பை நேசி வெறுப்பைக் காட்டாதே…!!!