பணம் மட்டும் போதுமா?

1
1120
IMG-20210223-WA0036-760dc945
நிலையற்ற வாழ்க்கை

 

 

 

வறுமைக்காலம் வந்தபோது
purse இல் காசு தீர்ந்து போகும்
வந்த அன்பும் தூர்ந்து போகும்
சொந்தபந்தம் தூரப்போகும்

கோடிக்காசில் கோட்டை கட்டி
படம் போட்ட மனிதரெல்லாம்
வாடகைக்காணி தேடி
நாட்கணக்கில் அலைவதுண்டு
கொட்டில் கட்டி குடியிருக்க…

அப்பன் காசில் வாழும் போது
காசைப்பற்றிப் புரிவதில்லை
கண்டபடி செலவழித்து
காலம் கொஞ்சம் போன பின்னர்
கடன் அடைக்க வழியின்றி
கைகூப்பி நிற்கையிலே
கடவுள் வந்தும் என்ன பலன்

இருக்கும் போது ஆட வைக்கும்
இழந்தபோது பைத்தியத்தில் பாடவைக்கும்
வசதி வந்தால் ஆடுவதும்
வறுமை வந்தால் வாடுவதும்
புத்திகெட்ட மனிதர்களின்
மானங்கெட்ட செயலொன்றோ

காசின் மீது ஆசைகொண்டு
தேடி வந்த சொந்தமெல்லாம்
அரைகுறையில் போவதுண்டு
மதி இருந்தால் நிதி எதற்கு
விதியில் பிழைசொல்லி விடை வருமோ
கதியைக்கொஞ்சம் குறைத்துவிட்டு
திசையைமாற்றித் திருப்பி விடு
நதியைப்போல ஓடும் போது
வழியில் சில வளைவு வரும்
வளைவுகளில் வளையாமல்
வலிகளை சுமக்காமல்
வாழ்வதிலே அர்த்தமில்லை

ஏழையனைக் காதலித்தால்
பணக்கஷ்டம் வந்து போகும்
மனக்கஷ்டம் வருவதுண்டோ
மனதைக்கொஞ்சம் மாற்றிவிடு
கஷ்டப்பட்ட மனிதன் உன்னை
இஷ்டப்படி வாழவைப்பான்

தீராத நோய் ஒன்று
திடீரென்று வந்துவிட்டால்
கோடிப்பணம் கிடந்தென்ன
செலவழித்தும் பயன் என்ன
இருப்பதைக் கொடுத்துவிட்டு
இன்பமாக வாழ்ந்துவிடு
பணம் உன்னை வாழவைக்கும்-பண்பு
உலகம் உன்னை வாழ்த்த வைக்கும்
ஒன்றை மட்டும் சொல்லிவிடு
நிம்மதியாய் வாழ்ந்திட
பணம் மட்டும் போதுமா!!!

 

 

 

 

 

5 1 vote
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
1 கருத்து
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Gobikrishna D
3 years ago
இதை மதிப்பிடுங்கள் :
     

So true…