ஊனம்

0
1588
கரமில்லை
காலில்லை
அதுவல்ல ஊனம்…
 
பார்வையில்லை
கேள்வியில்லை
அதுவுமல்ல ஊனம்…
 
எது ஊனம்….?
 
நெஞ்சில் ஈரமில்லை…
நெருங்கிய உறவுமில்லை….
நாவில் உண்மையில்லை…
நடத்தையில் நேர்மையில்லை…
அது ஊனம்…
 
பணக்காரன், ஆனால் 
கொடுக்காதவன்….
யாவும் உடையவன், ஆனால் 
பொறாமை கொண்டவன்….
அவன் ஊனம்…
 
திறமையிருந்தும்
வெளிப்படுத்த தெரியாதவன்…
அன்பிருந்தும்
அடையத் தெரியாதவன்…
அவன் ஊனம்…
 
இருப்பது கொண்டு
திருப்தி அடையாதவன்…
ஒப்புமை கொண்டு
தாழ்வு மனம் கொண்டவன்…
அவன் ஊனம்…
 
தேடலில்லாமல்
அடைவை கேட்பவன்…
முயற்சியில்லாமல்
வெற்றி கேட்பவன்…
அவன் ஊனம்…
 
ஊனம் வெல்லலாம்…
முயற்சி கொள்வதால்…
 
 
0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments