சமூக மாற்றத்தில் பெண்கள்

0
738
IMG_20210308_131150-4a04f65a
நாள்தோரும் சிறந்திட நல்லதொரு நிகழ்வு நடந்திட வேண்டும்.அந்நிகழ்வுக்கொரு காரண கர்த்தா இருந்தாக வேண்டும்.சமூகம் வேண்டும் நல்லவற்றை நிகழ்த்திட மங்கையவளால் நிச்சயமாக முடியும்.
ஆரம்பந்தொட்டு இன்று வரை எதிர்ப்புக்கு என்றும் பழகிப்போனவர்களாக பெண்களைக் குறித்துக்காட்டுவது தவறாக மாட்டாது.அதனை விபரிக்குமளவுக்கு அதன் கருத்தை அறியாதவர்கள் இங்கு யாரும் இல்லை எனலாம்.எனின் சமூக மாற்றத்திற்கும் பெண்ணிற்கும் இணைப்பை ஏற்படுத்திப் பேசுவது சாத்தியமான விடயமா என்ற சிந்தனை எழுவது நியாயம்தான்.
சமூகம் என்பது தனியன்கள் இல்லாமல் உருப்பெறுவதில்லை.ஆக, ஒவ்வொரு தனிமனிதனும் உருப்பெற்று சமூகத்தினுள் தடம் பதிப்பது குடும்பத்திலிருந்துதான்.இதுதான் முக்கிய புள்ளியாகும்.குடும்பம் எனும் போது அங்கு ஒவ்வொரு பிள்ளையுடனும் அதீத நேரத்தை செலவு செய்வது ஒரு தாயாகிய பெண்.
ஆக,சமூக மாற்றத்திற்கு ஒரு பெண் காரணமாகிவிட முடியுமா?என சிந்திக்கும் பெண்கள் தாமாகக் கீறிக்கொண்ட  தமது குறுகிய வட்டத்தில் இருந்து வெளியே வர வேண்டும்.அதாவது மாற்றம் எனும் போது உடனடியாக சமூகத்தில் நுழைந்து அங்கு உள்ளவர்களின் நடத்தைகளை மாற்றுவது என்பதல்ல.
சமூக மாற்றத்தின் ஆணிவேர் ஒரு வீடு.நேராக சொல்வதாயின் ஆணிவேர் ஒரு பெண்தான்.ஒரு குழந்தை அழகிய முறையில் வளர்க்கப்பட்டால் அந்த சொத்து முழு சமூகத்திற்கும் பயனளிப்பதாக அமைகிறது.அதே மாற்றமான முறையில் வளர்க்கப்பட்டால் முழு சமூகத்திற்கும் பெரியதொரு ஆபத்தைக் கொண்டு வந்து சேர்க்க அதே குழந்தை காரணமாகிவிடும்.
அத்தோடு எமது பெண் சமூகம் கல்வியில் அதீத கவனம் செலுத்துவது கட்டாயமாகிறது.கற்காதவர்கள் என்ன எதிர்காலத்தில் உணவில்லாமல் மரணிக்கவா போகின்றார்கள் என்று கேட்கலாம்.ஒரு பெண் தொழில் செய்வதும் இல்லாததும் அவளது தனிப்பட்ட விருப்பம்.மார்க்க வரையறையைப் பேணி சமூக நலனுக்காக அவள் உழைக்கப் புறப்பட்டால்,அவளுக்கென்ற இலட்சியத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க எவருக்கும் அதிகாரமில்லை.
ஒரு பிரச்சினை என்று வந்தால் மட்டுமேஆளுமை ஆளுமை என்று தேடி அலைந்துகொண்டிருக்கும் எமது சமுதாயம் அவதிப்பட்டுக்கொண்டிருப்பதெல்லாம் அடிப்படையில் விழுந்த கோணல்தான்.
ஒரு விடயத்தை எமது சமூகம் நன்கு புரிய வேண்டும். கல்வி கற்க வேண்டும் என்பது தொழில் உலகத்துக்காக மட்டுமல்ல,மாறாக அடுத்த சந்ததிகள் எதிர்காலத்தில் இன்னும் பல சவால்களுக்கு முகங்கொடுக்க வேண்டி இருக்கும்.ஆக அதனை  எதிர்கொள்ளக்கூடிய  எதிர்கால சமூகம் உருவாக்கப்பட வேண்டும் எனில்,
ஒரு பெண் கட்டாயம் ஆளுமை உள்ளவளாக இருக்க வேண்டும்.
ஒவ்வொரு வீட்டிலும் அப்படிப்பட்ட பெண் ஆளுமைகள் தமது பிள்ளைகளை அழகிய முறையில் வளர்த்தால் எதிர்காலத்தில் உயர்ந்த விழுமியமிக்க ஆண்,பெண்களை உருவாக்கலாம்.அதாவது இங்கு ஒரு விடயம் மறுதலிக்க முடியாது,அதாவது கற்றவர்களிலும் பண்பாடற்ற சிலர் இருக்கின்றனர்.அதற்குத்தான் ஒழுக்கமுடன் சேர்ந்த கல்வியைப் பெற வேண்டும்.
எனின்,தமது பிள்ளைகளை அழகிய பண்புகளுடன் வளர்த்தெடுக்க வேண்டும்.ஏனெனில் பண்பாட்டின் பரிமாற்றம் தான் அவன் மீதான  நல்லெண்ணத்தையோ தீய எண்ணத்தையோ சமூகத்தில் விதைக்கக் காரணமாகிறது.அந்த நல்லெண்ணங்கள் தான் சமூகத்தில் அவனுக்குரிய சிறந்த அங்கீகாரத்தைப் பெற்றுக்கொடுக்கிறது.
எனவே சமூக மாற்றத்தை நோக்கி ஒழுக்கமுடானான கல்வியுடன் எமது பெண் தலைமுறைகளை உருவாக்க உறுதிபூணுவோமாக!
#Binth Fauzar
0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments