நம் பண்டைய விவசாயப் பழமொழிகள்…

0
1225

தவளை கத்தினால் மழை

அந்தி ஈசல் பூத்தால் 
அடை மழைக்கு அச்சாராம்

தும்பி பறந்தால் தூரத்தில் மழை

எறும்பு ஏறில் பெரும் புயல்

மார்கழி மழை மண்ணுக்கு உதவாது

தை மழை நெய் மழை

மாசிப் பனி மச்சையும் துளைக்கும்

தையும் மாசியும் வீடு மேய்த்து உறங்கு

புற்று கண்டு கிணறு வெட்டு

வெள்ளமே ஆனாலும் 
பள்ளத்தே பயிர் செய்

காணி தேடினும் கரிசல் மண் தேடு

களர் கெட பிரண்டையைப் புதை

கெட்ட நிலத்துக்கு எட்டு வன்னி 
கெட்ட குடும்பத்துக்கு எட்டு வெள்ளாடு

நன்னிலம் கொழுஞ்சி 
நடுநிலம் கரந்தை 
கடை நிலம் எருக்கு

நீரும் நிலமும் இருந்தாலும் 
பருவம் பார்த்து பயிர் செய்

ஆடிப்பட்டம் பயிர் செய்

விண் பொய்த்தால் மண் பொய்க்கும்

மழையடி புஞ்சை
மதகடி நஞ்சை

களரை நம்பி கெட்டவனும் இல்லை மணலை நம்பி வாழ்ந்தவனும் இல்லை

உழவில்லாத நிலமும் 
மிளகில்லாத கறியும் வழ வழ

அகல உழவதை விட 
ஆழ உழுவது மேல்

புஞ்சைக்கு நாலு உழவு 
நஞ்சைக்கு ஏழு உழவு

குப்பை இல்லாத வெள்ளாமை சப்பை

ஆடு பயிர் காட்டும் 
ஆவாரை கதிர் கட்டும்

கூளம் பரப்பி கோமியம் சேர்

ஆற்று வண்டல் தேற்றும் பயிரை

நிலத்தில் எடுத்த பூண்டு 
நிலத்தில் மடிய வேண்டும்

காய்ச்சலும் பாய்ச்சலும் வேண்டும்

தேங்கி கெட்டது நிலம் 
தேங்காமல் கெட்டது குளம்

கோரையை கொல்ல கொள்ளுப் பயிர் விதை

சொத்தைப் போல் 
விதையை பேண வேண்டும்

விதை பாதி வேலை பாதி

காய்த்த வித்திற்கு பழுது இல்லை

பாரில் போட்டாலும் பட்டத்தில் போடு

கோப்பு தப்பினால் 
குப்பையும் பயிராகாது

ஆடி ஐந்தில் விதைத்த விதையும் புரட்டாசி பதினைந்தில் நட்ட நடவும் பெரியோர்கள் வைத்த தனம்

கலக்க விதைத்தால்
களஞ்சியம் நிறையும்.
அடர விதைத்தால் போர் உயரும்

வாழ்க வையகம்! வாழ்க வையகம்! 
வாழ்க வளமுடன்! 
எல்லா உயிர்களும் இன்பமாக வாழ்ந்தால் மட்டுமே நாம் நலமோடு வாழ இயலும்.

யாரையும் நம்பாதீர்கள்.

உழவே தலை.

தனி மனித மாற்றமே நம் சமுதாயத்தின் மாற்றம்.

நீர் இன்றி அமையாது உலகு.

“என் மக்கள்”
கடல் மலை மேகம்தான் எங்கள் கூட்டம்.

கடைசி மரமும் வெட்டி உண்டு
கடைசி மரமும் விஷம் ஏறிக்
கடைசி மீனும் பிடி பட
அப்போதுதான் உறைக்கும் – இனி
பணத்தைச் சாப்பிட முடியாது என்பது!!

ஆறும் குளமும் மாசு அடைந்தால்
சோறும் நீறும் எப்படி கிடைக்கும்!.

நீர் நிலைகளை காப்போம்.
இணைவோம்.

நம் மூத்த முன்னோர் சொல்மிக்க மந்திரமில்லை.

மேழிச் செல்வம் கோழை படாது.

 
0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments