பரதநாட்டிய அரங்கேற்றம் பற்றிய அறிமுகம்

0
5244

 

 

 பரதநாட்டிய அரங்கேற்றம்           பற்றிய அறிமுகம்

ஆட்டுவித்தால் ஆரொருவர் ஆடாதாரே ”  

                                 நடனமணி முதன் முதலில் ஒரு முழு நேர நாட்டிய நிகழ்ச்சிக்குத் தேவையான நடன உருப்படிகளை நன்றாக தெளிவுபடக் கற்றுக்கொண்டு செய்கின்ற நிகழ்ச்சியை அரங்கேற்றம் என்பார்கள்.பயிற்சி முடிந்த ஒரு மார்க்கம் (அலாரிப்பு முதல் தில்லானா வரை) அல்லது இரண்டு மார்க்கங்கள் முடிந்த பின் முதன் முதலில் நாட்டியம் ஆட அரங்கம் என்கின்ற மேடை ஏறுதலையே( அரங்கு ஏற்றம்) அரங்கேற்றம் என்பார்கள். அரங்கேற்றம் சுமார் எட்டு முதல் பத்து உருப்படிகளை பெற்றிருந்தல் வேண்டும். 

                     ” ரங்கப்பிரவேசம் “ என்பது இதன் சமஸ்கிருத சொல்லாகும். நல்ல அவைத்தலைவரும்,ரசிகரும் உள்ள அரங்கில் முதலில் அரங்கேற நல்ல நாள் குறித்து செயல் புரிய வேண்டும். அதற்கு முன் சலங்கை பூஜை செய்வது என்று ஒரு மரபு இருந்து வருகிறது.சலங்கையை முதன் முதலில் பூஜையில் வைத்து கட்டிக் கொள்ள வேண்டும். 

                     அரங்கேற்றம் அவையோருக்கு புதிய நடனக் கலைஞரை அறிமுகமாக்கும் விழா. அத்தோடு மாணவி குருவிற்கும்,பக்க வாத்திய கலைஞர்களுக்கும் தன் மரியாதையை உணர்த்தும் வகையில் புத்தாடைகளும் பொன்னும் வழங்கி வணங்க வேண்டிய விழாவாகும். அரங்கேற்றம் என்பது கலை வாழ்வின் புனிதமான தொடக்கமாகும். 

 

 

 

 

 

 

 

 

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments