“ஒரு பொம்பளையின் யோகியம்… பாத்தியா???

0
357

தேவடிய – இந்த வார்த்தையின் உண்மையான அர்த்தம் நீங்கள் அறிந்திருக்கிவாய்ப்புண்டா??

நான் அறிந்த தமிழ் ஆசிரியர் இதை மாணவர்களுக்கு தெளிவுபடுத்துகையில்..

“சைவத்தின் தேவன் சிவனுக்கும் ; சிவனின் தொண்டர்களுக்கும் தொண்டாற்றும் அடியவர்கள்” என்பதே அதன் பொருள் !!!

இப்படி ஒரு உன்னதமான தமிழ்ச்சொல் , ஏச்ச சொல்லாக மருவிய காரணம் என்ன?? என்றேன்.

வேற என்ன எல்லாம் நம்ம ” தமிழ் பற்றுதான்” என எள்ளி நகையாடினார்.

கதைக்குள் செல்வோம்,

90களின் பிற்ப்பகுதி

அந்த ஒற்றை வீட்டை நான் அடிக்கடி கடக்க நேரிடும்.
நான்கு சுவரும் , மேற்கூறையும் சிதிலமடைந்த தோற்றம் கொண்ட அந்த வீடு.தென்னை தட்டின் வெய்ப்பால் ஒரு குளியல் மறைவிடம்.

அந்த ஒற்றை வீட்டில் , ஒற்றை பெண்மணி ஒருவர் வசித்து வந்தார்.

30ஐ கடந்தவர்.
கூலித்தொழிலாளி.

குடியை முதல் மனைவியாக கொண்ட கணவன் விட்டு விலகிச்சென்றான், எங்கோ காணாத தேசம் காண!! பிள்ளைகள் இல்லை.

நான் அந்த பெண்ணை கண்டபோதேல்லாம் அவர் ஊமை என நினைத்தடுண்டு.
ஏனென்றால் பெரும்பாலும் ஆவர் பேசி கேட்டவரும் இல்லை,கண்டவருமில்லை.

அடுத்து என்ன ??
ஊராரின் பாரர்வை.
இவரை பற்றி நன்கு அறிந்தவர்களின் பார்வை மரியாதை கலந்த கணிவுடனும்,பச்சதாபத்துடனும் பட்டன.
அவை பெரும்பாலும் பெண்களின் பார்வை!!

எனினும்..
கணவனை பிரிந்தவர், ஒற்றை வாழ்க்கை, ஆதரிக்க எவரும் இல்லை. வேறென்ன சில ஆண்களின் பார்வையும்,நடவடிக்கையும் அந்த “ஏச்ச சொல்லின்” வண்ணத்தையும் , வர்ணனையையும் அந்த பெண் மீது பூசி இருந்தது.

இதையெல்லாம் அந்த பெண்மணி பொருட்படுத்தியதாக தெரியவில்லை.
சிதிலமடைந்து,தாழ்ப்பாள் கூட சரி இல்லாத அந்த வீட்டில் தன் தன்னம்பிக்கை சிறிதும் சிதலடையாமல் வாழ்ந்து கொண்டிருந்தார்.

2000தின் முற்பகுதி

ஒரு நாள் அந்த கணவர் ஊர் திரும்பினார்!!
தோற்றத்திலும், உடல்மொழியிலும், வயதுமூப்பிலும் தன் மனைவி குடி இருக்கும் வீட்டை விட சிதிலமடைந்த தோற்றம் கொண்டிருந்தார்.

அந்த “பெண்னை” ஒதுக்கிய உற்றமும் சுற்றமும் அந்த “ஆண்னை” தெருவில் இருந்தபடியே, கண்ணீராலும் தழுவல்களினாலும் வரவேற்றனர்.

இது நடந்தேறியது அந்த பெண்ணின் வீட்டின் முன்பு.
ஊர் கூடி இந்த காட்சியை கண்டுகளித்தபோது,எதையுமே பொருட்படுத்தாத அந்த பெண்மணி தன் வீட்டின் வெளியே பாத்திரங்களை கழுவிக்கொண்டிருந்தார்.
காட்சியும் முடிந்தது !!

செமஸ்டர் தேர்வு விடுமுறையில் வீடு வந்தேன். பரஸ்பரங்களும்,உபசரிப்புகளும் நடந்தேறியது.

ஒரு மாலை நேரம், நானும் என் அம்மாவும் எங்கள் ஊரில் உள்ள கோவிலுக்கு சென்றோம்.
கோவில் பூட்டபட்டிருக்க..அம்மா “போய் சாவி வாங்கிட்டு வா” என அருகில் இருந்த கட்டளைக்காரரின் வீட்டை கை காட்டினார்.
நான் சென்று குரல் எழுப்புகையில்.அந்த வீட்டின் அருகில் இருந்த கூட்டு குடிதன வாளகத்தில் இருந்து ஒரு உருவம் வெளியே வந்து கோவிலின் சாவியை என் கையில் கொடுத்தது.

அது வேறு யாரும் இல்லை நான் முன் கூறிய பெண்மணிதான்!! பேச வார்தையுன்றி உங்களை போல திகைத்து நின்றேன்.

அம்மா தூரத்தில் இருந்து குரல் எழுப்ப விரைந்து சென்று கோவிலின் பூட்டை நீக்கி; கதவை திறந்து எங்கள் வழிபாட்டினை தொடங்கினோம்.
முடித்துவிட்டு வெளியே வரும் தருவாயில் அந்த பெண் தானே வந்து சாவியை பெற்றுக்கொண்டார்.

“வரேன் அக்கா” என கூறி அம்மா என்னை கூட்டி கொண்டு நடந்தார்.

ஆச்சரியங்கள் மூளையை மொய்க்க,
“அந்த அக்கா எப்படிம்மா இங்க?? என ஒற்றை கேள்வியை முன் வைத்தேன் என் அம்மாவிடம்.

அவரின் பதிலை விவரிக்கிறேன்.

கண்ணீர் மல்க கட்டி தழுவி அந்த பெண்ணின் கணவரை வரவேற்ற அவரது சுற்றமும் நட்பும், அவரை தங்கள் வீட்டினுள் தஞ்சம் புக “மறுத்தனர்”
எங்கு செல்வது என தெரியாமல் அவர் வந்து சேர்ந்து தன் மனைவி குடியிருந்த அந்த சிதலமைடைந்த வீட்டிற்க்கு. அவரை வீட்டினுள் தஞ்சம் புக அனுமதித்த அந்த பெண்மணி, மறுகணமே அந்த வீட்டை விட்டு வெளியேறினார்.

தனக்கென ஒரு வீட்டில் வாடகைக்கு குடியேறினார்.
தன் அன்றாட வாழ்கையை எப்பொழுதும் போல தொடர்ந்தார்.

அவர் குடியேறிய வீடு,நான் முன் கூறிய அந்த கோவில் கட்டளைக்காரருக்கு சொந்தமான ஒரு கூட்டுக்குடித்தன வீடு!

சரி அந்த கோவில் சாவி??
இருங்க சொல்றேன்..

கோவிலின் தினசரி சுத்தபத்த பராமரிப்பு பணியை செய்ய இந்த பெண்மணியை பணி அமர்த்தி இருக்கிறார்கள் கோவில் நிர்வாகிகள்.

அவர் தன் கூலி தொழிலையும் தொடர!!
அவர் இருந்த வீட்டிற்கு வாடகை வசூலிக்கப்படவில்லை.

அம்மா இந்த நிகழ்வுகளை விவரிகையில்
“திடீர்னு யார் மனசுல என்ன தோணுச்சு,தெரியல அந்த அக்கா கிட்ட கோவில் மோரவாசல் செய்யர வேலைய ஒப்படைசங்க.
இப்ப கோவில்லோட லட்சணமே வேற மாறி இருக்கு.
என் வயசுக்கு இந்த கோவில் இப்படி சுத்தமா நான் பாத்தது இல்ல!!
இது எல்லாம் அந்த அக்காவோட பக்குவம்!!!

மேலும் தொடர்கையில்..

“ஒரு பொம்பள யோகிமானவளா இருந்தானா , அவள ஆண்டவன் எங்க எப்படி கொண்டு வந்து வெச்சி இருக்கான் பாத்தியா???

“இனி எவனுக்கும் அவ நிரூபிக்க தேவையில்லை அவ நடத்தைய..

என முடித்தார்!!!

அம்மா இதை சொல்லி முடிக்க அவரது நடையில் “பெருமையும்” பேச்சில் “கர்வமும்” தென்பட்டது.

இப்போது மேலும் சிதிலமடைந்த அந்த வீட்டில் அந்த பெண்ணின் கணவன் இருமல் சத்தம் ஓங்கி ஒலித்தது.

“தேவிடியா” என வண்ணம் பூசி வர்ணனை செய்யப்படவள்,

“தேவனுக்கு அடியாள்” என மருவிய தருணம்!!!

– தினேஷ் ஜாக்குலின்

முந்தைய கட்டுரைநீயில்லாத நாட்களில்
அடுத்த கட்டுரை” முதல் வணக்கம் “
தினேஷ் ஜாக்குலின்
"கொரோனா டயரீஸ்" வானொலி காலத்தில் பிறந்த நாம் இன்று காணொளி காலத்தை கடந்து கொண்டு இருக்கின்றோம் இயற்கை ஒரு சிறந்த ஆசானாய் நம் முன் மீண்டும் ஒரு விஸ்வரூபம் எடுத்து பாடங்கள் கற்றுக்கொடுத்து கொண்டு இருக்கிறது….ஒரு நுண் கிருமியின் வாயிலாக!! "மாற்றம் ஒன்றுதான் மாறாதது – மகனே" நோடிபொழுதும் சக மனிதனையும், மனிதத்தையும் மதிகாதவனாய் சுற்றித்திரிந்து வந்தோம். ஆனால் நாம் மறந்த மனிதத்தையும் ; சகமனிதனையும் உற்று நோக்க வைத்திருக்கிறது இந்த கிருமி. அதுவும் அது கடக இயலாத முககவசத்தையும் தாண்டி. அப்படி பல மனிதர்களை நாம் கண்டிருப்போம்,அவர்களை பற்றி கேட்டிருப்போம்,சிந்தித்திருபோம். அவ்வாறு நான் கண்டும்,கேட்டும்,சிந்தித்த மனிதர்களை பற்றிய தொகுப்பு தான் இந்த "கொரோனா டியரிஸ்" இதற்கு ஏன் இந்த பெயர் ?? என்ன காரணம்?? என கேட்கலாம்… இந்த "லாக் டவுன் " காலத்தில் தான் நான் கடந்த அத்தகைய மனிதர்களை எண்ணத்தில் அசைபோடவைத்து , உள்ளதில் பசை போடவைத்தது இந்த "கொரோனா" இனி பக்கங்கள் விரியும்,என் எண்ண ஓட்டத்தில் ஆனால் உங்கள் காட்சி மற்றும் குரல் மொழியில்.. – தினேஷ் ஜாக்குலின்-
0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments