0 இடுகைகள்
தௌபீக் முஹம்மது நவீத் ஆகிய நான் புல்மோட்டை பிரதேசத்தை பிறப்பிடமாக கொண்டேன் தற்போது இலங்கை சமுத்திரவியல் பல்கலைகழகத்தில் கல்வி கற்று வருகின்றேன் பாடசாலை காலத்தில் கலை இலக்கியத்தில் கொண்ட ஈடுபாடு வளர்ந்ததும் எழுத்துலகில் முழுமையாக மூழ்கச் செய்தது உயர்தரம் கற்கும் காலத்தில்(2019ம் ஆண்டு) "ஈரம் காயாத எழுத்துக்கள்" எனும் கவிதை நூலையும் எழுதி வெளியிட்டு இருந்தேன். "புல்மோட்டையூரான்" எனும் புனைப் பெயரில் கவிதைகள் கட்டுரைகள் மற்றும் சிறுகதைகளை பத்திரிகைகள் மற்றும் சஞ்சிகைகளில் எழுதி வருகிறேன்.
கலை மற்றும் இலக்கியத்தை பாதுகாக்கும் நோக்கில் எமது ஊரில் (புல்மோட்டையில்) "புல்மோட்டை கலை இலக்கிய மன்றம்" என்ற ஒன்றை ஆரம்பித்து அதனை பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் கீழ் பதிவு செய்து மன்றத்தின் தலைவர் என்ற வகையில் பல்வேறுபட்ட கலை இலக்கிய செயற்பாடுகளை நடாத்தி வருகின்றேன்.
இனி வரும் காலங்களிலும் சிறப்பாக முன்னெடுத்துச் செல்வேன்.
தௌபீக் முஹம்மது நவீத்
(புல்மோட்டையூரான்)