AWS VS GOOGLE CLOUD PLATFORM VS MICROSOFT AZURE

0
640

இன்று, மேகக்கணிமையின் (Cloud Computing) வளர்ச்சியால், இணையசெயலிகள் / சேவைகளை (Web Applications / Services) உருவாக்கும் பலருக்கும் அதை எங்கிருந்து இயக்குவது என்ற அடிப்படைச் சிக்கல் இருப்பதில்லை. தமக்கென சொந்தமாக வன்பொருள்களும் (Hardware), நினைவகங்களும் (Storage), நிரந்தரமான தடையற்ற இணைய இணைப்பும் இல்லாமலேயே, நம்மால் செயலிகளையும், சேவைகளையும் வழங்கமுடிகிறது. அமேசான், கூகுள் கிளவுட் ப்ளட்பார்ம், மைக்ரோசாஃப்ட் உள்ளிட்ட பல முன்னனி நிறுவனங்கள் மேகக்கணிமைக்கான கட்டமைப்பை ஒரு சேவையாக வழங்குகின்றன. இவற்றை சேவை வழங்குநர்கள் (Service Providers) என அழைக்கிறோம்.

கார், சைக்கிள் போன்றவற்றை வாடகைக்கு எடுத்து பயன்படுத்துவதுபோல, நமக்குத்தேவையான நேரத்திற்கு மட்டும், தேவையான அளவுக்கு கணினிவளங்களை நம்மால் பெற்று பயன்படுத்திக்கொள்ளமுடிகிறது. தேவை முடிந்தவுடன் அதை திருப்பிக்கொடுத்துவிட முடிகிறது. சொந்தமாக தரவுநிலையங்களைக் (Data Center) கட்டமைத்து பராமரிப்பதற்குத் தேவைப்படும் இடம், பொருள், பலதரப்பட்ட வன்பொருள்களைக் கையாளக்கூடிய அறிவு மற்றும் அவற்றுக்காகும் செலவுகளுடன் ஒப்பிடும்போது, அதைக்காட்டிலும், மேகக்கணிமையைப் பயன்படுத்துவது எளிமையானதாகிறது. மேலும், உலகில் பல இடங்களில் தரவுநிலையங்களை வழங்குவதன்மூலம், இயற்கைப்பேரிடர்களின் போது கூட, நமது செயலிகளும், சேவைகளும் பாதிக்கப்படாமல், இச்சேவை வழங்குநர்கள் கவனித்துக்கொள்கின்றன.

மேகக்கணிமையில் மூன்று முக்கிய சேவைகள் உள்ளன:

1.கட்டமைப்புச்சேவை (Infrastructure as a Service – Iaas)

2.செயற்றளச்சேவை (Platform as a Service – Paas)

3.மென்பொருள்சேவை (Software as a Service – SaaS)

அமேசான், கூகுள் கிளவுட் ப்ளட்பார்ம், மைக்ரோசாஃப்ட்  உள்ளிட்டோர்

இந்த சேவையை  வழங்கும் நிலையில் அவற்றில் கூகுள்  கிளவுட் ப்ளட்பார்ம் எவ்வாறு தனித்துவம் வாய்ந்தது  மற்றும் அதன் சிறப்பமசங்களை பார்ப்போம்:

கூகுள் கிளவுட் ஹோஸ்டிங் தேர்ந்தெடுப்பதற்கான சிறந்த 7 நன்மைகள்

  • போட்டியாளர்களை விட சிறந்த விலை(Better Pricing Than Competitors)

நிமிட-நிலை அதிகரிப்பில் Google பில்கள் (ஒரு 10 நிமிட குறைந்தபட்ச கட்டணம்), எனவே நீங்கள் பயன்படுத்தும் கம்ப்யூட் நேரத்திற்கு மட்டுமே கட்டணம் செலுத்துவீர்கள்.

AWS மற்றும் Azure ஐ விட 40% – 50% மலிவாக உள்ளது.

  • Private Global Fiber + Tiered Network
  • Live Migration of Virtual Machine
  • மேம்பட்ட செயல்திறன்(Improved Performance)
  • State of the Art Security

கூகுள் உலகின் மிகப்பெரிய ISP களுடன் இணைந்து செயல்படுவதால், இது உங்கள் தரவின் பாதுகாப்பை மேம்படுத்துகிறது.

  • Dedication to Continued Expansion

கூகுள் தனது மேகக்கணினி சேவையை சுமார் 20 நாடுகளில் வழங்கிவருகிறது.

  • Redundant Backups

உங்கள் தரவுகளை ஒருபோதும் இழக்காது என்பதை உறுதி செய்கிறது

Google Cloud Hosting மற்றும் Google மேகக்கணி இயங்குதளத்தைப் பயன்படுத்தும் போது, ​​நீங்கள் பல்வேறு நன்மைகளை காணலாம். இது மலிவானது மட்டுமல்லாமல், உலகின் மிகப்பெரிய நெட்வொர்க்குகளிலிருந்தும் நீங்கள் பயனடைகிறீர்கள். பிற மேகம் ஹோஸ்டிங் வழங்குநர்களை ஒப்பிடுகையில் இது மெய்நிகர் இயந்திரங்களின் நேரடி இடம்பெயர்வு தற்போது ஒரு தனித்துவமான மற்றும் மிக முக்கியமான ஒன்றாக அமையும். கலை பாதுகாப்பு மற்றும் செயல்திறன் கொண்ட மாநிலத்துடன், இது நூறாயிரக்கணக்கான ஒற்றுமை இணைப்புகளை கையாளக்கூடியது மற்றும் நீண்ட கால வெற்றிக்கான உங்கள் வணிகத்தை அமைக்கக்கூடிய ஒரு தளம் உங்களுக்கு.

வலைப்பகிர்வு
நன்றி : டெக் தமிழ்

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments