நீர்மை பவ்ன்டேஷன் (Neermai Foundation / Charity) என்பது நீர்மை வலைத்தளத்தினால் எழுத்துத்துறைசார் செயற்பாடுகளுக்கு முன்னுரிமை வழங்குவதற்கு அப்பால் தனது செயற்பாடுகளை சமூகம்சார்ந்ததாக முன்னோக்கிச்செயற்படுத்துவதெற்கென 2020ம் ஆண்டு ஜுலை மாதம் ஆரம்பிக்கப்பட்டு இன்றுவரை செயற்பட்டுக்கொண்டிருக்கும் அமைப்பே நீர்மை பவ்ன்டேஷனாகும்.
நீர்மை பவ்ன்டேஷனானது குறிப்பாக தேவையுடையவர்களை இனங்கண்டு அவர்களின் பொருளாதாரத்தினை உயர்த்தும் வகையில் தன்னால்முடிந்த பங்களிப்பை செய்வதோடு குறிப்பாக மாணவர்கள் மற்றும் கற்றலில் ஆர்வமுடைய அதே நேரம் விஷேட தேவையுடையோர்களுக்கும் அவர்களது குடும்பத்திற்கும் மாதாந்தம் குறித்த தொகையிலான பங்களிப்பினை பொருள்ரீதியாகவும் பணரீதியாகவும் செய்து வருகின்றது.
நீர்மை பவ்ன்டேஷனின் மிக முக்கிய நோக்கம் ‘இல்லாமையைக் குறைத்தல்’ ஆகும். இதன் மூலம் தேவையுடையோர்கள் சமூகத்தில் புறந்தள்ளப்படாது அவர்களது தேவைகளை பூர்த்தி செய்துகொள்வதற்கு இயலுமானவரை சந்தர்ப்பங்களையும் வாய்ப்புகளினையும் தொண்டாளர்களின் பங்களிப்புகள் மூலம் ஏற்படுத்திக்கொடுப்பதாகும். மேலும் நீர்மை பவ்ன்டேஷனானது பொருள், பணரீதியான தேவைகளுக்கு அப்பால் உளவியல் ரீதியாக உதவி தேவைப்படுவோருக்கு உரிய வழிகாட்டல்களையும் வழங்கி வருகின்றது.
நீர்மை பவ்ன்டேஷனானது குறிப்பாக தன்னார்வம் நிறைந்த 04 தொண்டாளர்களுடன் ஆரம்பிக்கப்பட்டு தற்போது குறித்தளவிலான நபர்களின் பங்குபற்றுதலுடன் இயங்கி வருகின்றது. மேலும் நீர்மை பவ்ன்டேஷனானது பொருள், பணரீதியான தேவைகளுக்கு அப்பால் உளவியல் ரீதியாக உதவி தேவைப்படுவோருக்கு உரிய வழிகாட்டல்களையும் வழங்கி வருகின்றது.
நன்கொடை (Donation)
சேமிப்பைப்போலவே நன்கொடை அளித்தலையும் பழக்கப்படுத்திக்கொண்ட உங்களுக்கு எங்கள் நன்றிகளையும் பாராட்டினையும் தெரிவித்துக்கொள்கின்றோம். சிறிய தொகைகளிலும் பெரும் பங்களிப்பினை அனைவரும் ஒன்றிணையும் போது மேற்கொள்ள முடியும் என நாங்கள் உறுதியாக நம்புகின்றோம். உன்னதமான காரணத்திற்காக சேவை செய்யும் வெவ்வேறு திட்டங்களுக்கு நிதி திரட்டும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்க விரும்புகிறோம். அதில் உங்கள் பங்களிப்புகளை எதிர்பார்க்கின்றோம்
தன்னார்வலர்கள் (Volunteers)
எங்களுடன் தன்னார்வத் தொண்டு செய்ய விரும்பும் பிற அற்புதமான மனிதர்களை நாங்கள் வரவேற்பதில் மகிழ்ச்சியடைகிறோம். தயவுசெய்து படிவத்தை நிரப்பவும். விரைவில் உங்களுடன் தொடர்பு கொள்வோம்.
உதவுவோம் (Helping the needy)
உதவி என்பதை கேட்க மனிதர்கள் தயங்கலாம். ஆனால் பிறருக்கு செய்வதற்கு ஒருபோதுமே தயங்கக்கூடாது. தேவையுடையோர்களை முதலில் அடையாளங்காண்போம். அவர்களுக்கு உதவுவோம்
எமது செயற்பாடுகள்
நீர்மை.com ஒன்லைன் இலவச கல்வி வகுப்புகள் மற்றும் வழிகாட்டல்கள்
இச்செயற்பாடானது நீர்மை வலைத்தளத்தினால் 2020ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரையில் கொரோனாவினை முன்னிட்டு பாடசாலைகளினால் கட்டாய விடுமுறை மாணவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த போது மாணவர்களின் இறுதியாண்டு கல்வி நடவடிக்கைகளினை மேம்படுத்தும் நோக்கில் தன்னார்வல ஆசிரியர்களின் உதவியுடன் முன்னெடுக்கப்பட்டது. இவ்வகுப்புகளானது தரம் 06 முதல் தரம் 13 வரையிலான மாணவர்களுக்கு ஒன்லைன் மூலமாக இலவசமாக நடாத்தப்பட்டது. இதற்கு பங்களித்த ஆசிரியர்கான திரு மனோஜன், திருமதி. பெலிஸ்டா, செல்வி. அஸ்ரா ஆகிய ஆசிரியர்களுக்கு எமது நன்றிகளை தெரிவிக்கின்றோம்.
இந்த ஒன்லைன் வகுப்பு ஆரம்பிக்கப்பட்டதன் முக்கிய நோக்கமே வறிய மாணவர்களுக்கும் கல்வியானது ஒன்லைன் சூழலில் தடைப்பட்டுவிடக் கூடாது என்பதற்காகவேயாகும். ஆனால் இதனை தொடர்ந்து நடாத்திச் செல்வதற்கு மேலதிகமாக ஆசிரியர்களை அமர்த்தவேண்டிய சூழல் மற்றும் zoom online வகுப்பினை நீடிப்பதற்கான License பெற்றுக்கொள்ள வேண்டியுள்ளமை போன்ற காரணங்களுக்கு எழுந்த அடிப்படைத்தேவைகளுக்கு எதுவித பங்களிப்பும் கிடைக்கவில்லை. இதனாலேயே இத்தகைய செயற்பாட்டினை தொடர்வதில் நடைமுறைச்சிக்கல்கல்களை நாங்கள் எதிர்நோக்குகின்றோம்.
உதயம் விழிப்புலனற்றோர் மாதாந்த பொருள் மற்றும் பொருளாதார உதவி
உதயம் விழிப்புலனற்றோர் அமைப்பில் சுமார் 30 அங்கத்தவர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்களுக்கு மாதாந்தம் தேவைப்படுகின்ற மளிகைப்பொருட்களுக்கான பொருளுதவிகள் மற்றும் மற்றும் இவர்களது குடும்பத்தில் உள்ள பிள்ளைகள் கல்வி கற்பதற்கான புலமைப்பரிசில் உதவிகளை ஒவ்வொரு மாதமும் கடந்த ஆண்டின் ஜுலை மாதத்திலிருந்து திருமதி. ரோஹிணி சாந்தரூபன் அவர்களின் உதவியுடன் சில குறித்தளவு நன்கொடையாளர்களிடமிருந்து பெற்று இச்செயற்பாடு முன்னெடுக்கப்படுகின்றது.
மேலும் உதயம் விழிப்புலனற்றோர் சங்கத்தில் உறுப்பினர்களாக இருக்கும் நபர்களின் பிள்ளைகள் மேலதிக கற்றலினை தனியார் வகுப்புகள் மூலம் மேற்கொள்வதற்காக எங்களிடம் உதவியினை எதிர்பார்க்கின்றனர். இவர்கள் தரம் 06 முதல் தரம் 13 இற்கு இடைப்பட்ட வகுப்புகளில் கல்விகற்கும் மாணவர்களாக உள்ளனர். இது தவிர்த்து உதயம் விழிப்புலனற்றோர் அங்கத்தவர்கள் தொழில்சார் தகைமையாக வளர்த்துக் கொள்ளக் கூடிய சிங்கள மொழி மற்றும் ஆங்கில மொழியினை கற்பதற்கு உதயம் விழிப்புலனற்றோர் அங்கத்தவர்கள் விரும்புகின்றனர்.இவர்களுக்கு பாடங்களை கற்பிக்கக்கூடிய ஆசிரியர்களை நீர்மை வலைத்தளம் மற்றும் நீர்மை பவ்ன்டேஷன் அமைப்பு உரிய ஆசிரியர்களுடன் கலந்துரயாடி ஏற்பாடு செய்துள்ளது. இந்த கல்விச்செலவினை பூர்த்தி செய்ய மாதாந்தம் சிறுதொகை தேவையாக உள்ளது. இத்தகைய உதவியினை கொடையாளர்கள் ஆகிய உங்களிடமிருந்து உதயம் விழிப்புலனற்றோர் அமைப்பினருக்காக எதிர்பார்க்கின்றோம்.
நினைவு நாட்கள், கொண்டாட்ங்களினை பகிர்ந்து கொள்ளுதல்
சில தனிப்பட்ட நன்கொடையாளர்கள் நீர்மை பவ்ன்டேஷன் மூலமாக தங்களது அல்லது தங்களுக்கு ப்ரியமானவர்களின் பிறந்தநாள், திருமணநாள் அல்லது பிறரது நினைவுநாட்கள் ஏனைய பிற பண்டிகைகள், கொண்டாட்டங்கள் மற்றும் விஷேட வைபவங்களை அநாதை விடுதிகள், தேவையுடைய குடும்பத்தினர்கள், வறிய பிரதேசங்களிலுள்ள மாணவர்கள், முதியோர் இல்லங்கள் என அவர்களுக்கு உணவினை வழங்கி அவர்களுடன் அந்தநாளை சிறப்பாக்க விரும்பும் போது நாங்கள் அதற்குரிய ஒத்துழைப்பினை வழங்குகின்றோம்.
Birthda n.f 2
நீங்கள் உங்கள் உதவிகள் குறிப்பிட்ட தனி மனிதருக்கோ அல்லது அமைப்பினருக்கோ சென்றடைய விரும்பினால் எங்களைத் தொடர்பு கொண்டு நீர்மை பவ்ன்டேஷன் மூலம் அக்குறித்த நபர்களை சென்றடையச் செய்ய முடியும். நீங்கள் உணவுகளாக வழங்க விரும்பினால் அந்த உதவியானது ஒரு அமைப்பினரை மாத்திரம் சாராது அந்த உணவினை வழங்கும் சமையற்காரர்கள் முதல் அத்தகைய நலன் சென்றடையும் வகையில் நாங்கள் ஒழுங்குசெய்கின்றோம். அதாவது இத்தகைய உணவுகளை சமைப்பது தினமும் உழைக்கக்கூடிய ஹோட்டல் நபர்களல்ல. தற்போது கொரோனாவினால் வேலையிழந்திருக்கும் சுற்றுலாத்துறையிலுள்ள சமையல்துறை சார்ந்த வறிய பெண்களாகும். இவர்கள் மூலமாகவே தரமானதும் சுவை நிறைந்ததுமான உணவுகள் நீர்மை பவ்ன்டேஷன் மூலம் உணவுகளாக வழங்க விரும்பும்போது சமைக்கப்படுகின்றன.
அல்லது நீங்கள் உங்கள் உதவிகள் குறிப்பிட்ட தனி மனிதருக்கோ அல்லது அமைப்பினருக்கோ உணவு தவிர்ந்து உலர்பொதிகளாக வழங்க விரும்பினால் நேரடியாகவே ஒன்லைன் மூலம் நீங்கள் வேண்டிய பொருட்களை அங்கிருந்து கொள்வனவுசெய்து இங்கே உரியவர்களுக்கு வழங்கிட முடியும். இந்த இணைப்பில் பிரவேசிக்க https://bit.ly/38Cc8BE
உங்கள் அறத்தால் பிறர் கண்ணீர், கவலை, பசி, பயம் துடைத்து அவர்கள் முகத்தில் சந்தோஷத்தையும் மனதில் மகிழ்ச்சியையும் பரவச்செய்திடுங்கள்…!!