COVID-19 எனப்படும் கொரோனா வைரஸ். பெற்றோர்கள் தங்களையும் தங்கள் குழந்தைகளையும் பாதுகாத்துக் கொள்வது எவ்வாறு? அறிவோம்! தெளிவோம்!

0
1827

‘நாவல்’ கொரோனா வைரஸ் (‘novel’ coronavirus) என்றால் என்ன?

நாவல் கொரோனா வைரஸ் (CoV) என்பது கொரோனா வைரஸின் ஒரு புதிய திரிபடைந்த நிலையாகும்.

சீனாவின் வுஹான் நகரத்தில் முதன்முதலில் அடையாளம் காணப்பட்ட கொரோனா வைரஸ் நாவலால் ஏற்பட்ட நோய்க்கு கொரோனா வைரஸ் நோய் 2019 (COVID-19) என்று பெயரிடப்பட்டுள்ளது – ‘CO’ என்பது கொரோனாவை குறிக்கிறது, வைரஸுக்கு ‘VI’, மற்றும் நோய்க்கு ‘D’ என்பதை குறிக்கின்றது. பொதுவாக இந்த நோய் ‘2019 நாவல் கொரோனா வைரஸ்’ அல்லது ‘2019-nCoV’ என்று குறிப்பிடப்படுகின்றது.

COVID-19 வைரஸ் என்பது பொதுவாக சுவாசித்தலில் கடுமையான சிரமத்தை ஏற்படுத்தும்(Severe Acute Respiratory Syndrome) மற்றும் தடிமன் அல்லது ஜலதோஷ அறிகுறிகளுடைய வைரஸ் பரம்பரையுடன் இணைத்து பார்க்கப்படுகின்றது.

COVID-19 உலக சுகாதார அமைப்பால் ஒரு தொற்றுநோய் என்று விவரிக்கப்பட்டுள்ளது. அதற்கு என்ன பொருள்?

COVID-19 ஐ ஒரு தொற்றுநோயாகக் குறிப்பிடுவதற்கான காரணம் இந்த வைரஸ் கடும் உயிராபத்தை ஏற்படுத்தும் என்பதற்கான ஒரு குறியீடாக இல்லை. மாறாக, இந்த நோயானது புவியியல் ரீதியில் பரவலடையக் கூடியது என்பதனாலாகும்.

ஆன்லைனில் கொரோனா வைரஸ் பற்றிய தகவல்கள் அதிகம் உள்ளன. நான் என்ன செய்ய வேண்டும்?

COVID-19 எவ்வாறு பரவுகிறது, எவ்வாறு பாதுகாப்பாக இருக்க வேண்டும், வைரஸால் பாதிக்கப்பட்டிருப்பதாக நினைத்தால் நீங்கள் என்ன செய்வது என்பது உட்பட, அதிக தகவல்கள் கொரோனா வைரஸ் பற்றி ஆன்லைனில் பகிரப்படுகின்றன. ஆனால் அவற்றில் அதிகமதிகம் நிறைய கட்டுக்கதைகள் மற்றும் தவறான தகவல்களே உள்ளன.

எனவே, நீங்கள் தகவல் மற்றும் ஆலோசனையை எங்கு தேடுகின்றீர்கள் என்பதில் அதிகம் கவனமாக இருப்பது முக்கியம். நோய்த்தொற்றின் அபாயத்தை எவ்வாறு குறைப்பது, உங்கள் குழந்தையை பள்ளியிலிருந்து வெளியே அழைத்துச் செல்ல வேண்டுமா, கர்ப்பிணிப் பெண்கள் தாய்ப்பால் கொடுப்பது பாதுகாப்பானதா, பயணம் செய்யும் போது எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கைகள் பற்றிய தகவல்களும் பரிந்துரைகளும் இந்த விளக்கத்தில் உள்ளன. COVID-19 பற்றிய கூடுதல் தகவல்களையும் வழிகாட்டுதல்களையும் நீங்கள் காணக்கூடிய ஒரு போர்ட்டலை யுனிசெஃப் அறிமுகப்படுத்தியுள்ளது. கூடுதலாக, WHO அடிக்கடி கேட்கப்படும் சில கேள்விகளுக்கு (FAQ) ஒரு பயனுள்ள பகுதியைக் கொண்டுள்ளது. எனவே பிழையான வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டாம். மேலும் பகிரவும் வேண்டாம்.

சரியான ஆலோசனைகள், பரிந்துரைகள் மற்றும் செய்திகளுக்கு உங்கள் தேசிய அல்லது உள்ளூர் அதிகாரிகள் வழங்கும் பயணம், கல்வி மற்றும் பிற வழிகாட்டுதல்களை உடனுக்குடன் அறிந்த நிலையில் இருப்பது உங்களுக்கு சிறந்தது.

COVID-19 வைரஸ் எவ்வாறு பரவுகிறது?

பாதிக்கப்பட்ட நபரின் சுவாச துளிகளுடன் (இருமல் மற்றும் தும்மினால் உருவாக்கப்படுகிறது) நேரடி தொடர்பு மற்றும் வைரஸால் மாசுபடுத்தப்பட்ட மேற்பரப்புகளைத் தொடுவதன் மூலம் வைரஸ் பரவுகிறது. COVID-19 வைரஸ் பல மணிநேரங்களுக்கு மேற்பரப்பில் உயிர்வாழக்கூடும், ஆனால் எளிய கிருமித்தொற்று நீக்கிகள் மூலம் அதைக் கொல்லக்கூடும்.

கொரோனா வைரஸின் அறிகுறிகள் யாவை?

அறிகுறிகளில் காய்ச்சல், இருமல் மற்றும் மூச்சுத் திணறல் ஆகியவை அடங்கும். மிகவும் கடுமையான சந்தர்ப்பங்களில், தொற்று நிமோனியா அல்லது சுவாசிப்பதில் கடுமையான சிரமங்களை ஏற்படுத்தும். மிகவும் அரிதாக பேராபத்தான மரணத்தை ஏற்படுத்தும்.

இந்த COVID-19 வைரஸின் அறிகுறிகள் காய்ச்சல் (இன்ஃப்ளூயன்ஸா) அல்லது ஜலதோஷத்தை ஒத்தவையாகவும் பொதுவான அறிகுறிகளாகவும் காணப்படுவதால்தான் ஒருவரிடம் COVID-19 இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்த சோதனை தேவைப்படுகிறது.

முக்கிய தடுப்பு நடவடிக்கைகள் ஒன்றே என்பதை நினைவில் கொள்வது முக்கியம் – அடிக்கடி கை கழுவுதல் மற்றும் சுவாச சுகாதாரம் (உங்கள் இருமல் அல்லது தும்மலை  முழங்கையை மடித்து வெளிப்படுத்துதல் அல்லது திசுவை (tissue), சுத்தமான கைக்குட்டையை பயன்படுத்த வேண்டும். பின்னர் பயன்படுத்திய திசுவை முறையாக மூடிய தொட்டியில் எறியுங்கள்).

மேலும், வைத்திய ஆலோசனையின் பேரிலான காய்ச்சலுக்குரிய தடுப்பூசிகள் மூலம் உங்களையும் உங்கள் குழந்தையையும் பாதுகாத்து கொள்ளுங்கள்.

தொற்று அபாயத்தை நான் எவ்வாறு தவிர்க்கலாம்?

தொற்றுநோயைத் தவிர்க்க நீங்களும் உங்கள் குடும்பத்தினரும் எடுக்கக்கூடிய நான்கு முன்னெச்சரிக்கைகள் இங்கே:சோப்பு மற்றும் தண்ணீர் அல்லது ஆல்கஹால் சார்ந்த கை தடவலைப் பயன்படுத்தி உங்கள் கைகளை அடிக்கடி கழுவ வேண்டும்

இருமல் அல்லது தும்மும்போது வாய் மற்றும் மூக்கை மடித்த முழங்கையைப் பயன்படுத்தியோ அல்லது திசுக்களால் (tissue) வாய் மற்றும் மூக்கினை மூடியோ வெளிப்படுத்த வேண்டும். மேலும் பயன்படுத்தப்பட்ட திசுக்களை (tissue) உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். சளி அல்லது காய்ச்சல் போன்ற அறிகுறிகள் உள்ள எவருடனும் நெருங்கிய தொடர்பைத் தவிர்க்கவும். உங்களுக்கு அல்லது உங்கள் பிள்ளைக்கு காய்ச்சல், இருமல் அல்லது சுவாசிப்பதில் சிரமம் இருந்தால் ஆரம்பத்தில் மருத்துவ உதவியை நாடுங்கள்

கைகளை சரியாக கழுவ சிறந்த வழி எது?
படி 1: ஓடும் நீரில் உங்கள் கைகளை ஈரப்படுத்துங்கள்.

படி 2: ஈரமான கைகளை சுத்தம் செய்ய போதுமானளவு சோப்பைப் பயன்படுத்துங்கள்.

படி 3: கைகளின் அனைத்து மேற்பரப்புகளையும் – கைகளின் பின்புறம், விரல்களுக்கு இடையில் மற்றும் நகங்களுக்கு கீழ் – குறைந்தது 20 விநாடிகள் நன்றாக படத்தில் காட்டியவாறு செய்யுங்கள்.

படி 4: மீண்டும் நீரில் நன்றாக கைகளை சவர்க்காரம் நீங்கும் வரை கழுவிக் கொள்ளுங்கள்.

படி 5: சுத்தமான துணி அல்லது ஒரு தடவை மாத்திரம் பயன்படத்தக்கூடிய துண்டுடன் கைகளை நன்றாக துடைத்துக் கொள்ளுங்கள்.

குறிப்பாக சாப்பிடுவதற்கு முன்பும் இருமல் அல்லது தும்மலுக்குப் பிறகும் மற்றும் குளியலறைக்கு சென்று வரும் போதும் என உங்கள் கைகளை அடிக்கடி கழுவிக் கொள்ளுங்கள்.

சோப்பு மற்றும் தண்ணீர் உடனடியாக கிடைக்கவில்லை என்றால், குறைந்தது 60% ஆல்கஹால் கொண்ட ஆல்கஹால் சார்ந்த கை சுத்திகரிப்பைப் (Hand Sanitizer) பயன்படுத்துங்கள். கைகள் பார்வைக்கு அழுக்காக இருந்தால், எப்போதும் சோப்பு மற்றும் தண்ணீரில் மேலே குறிப்பிட்டவாறு கைகளைக் கழுவுங்கள்.

நான் மருத்துவ முகமூடியை (Surgical Face Mask)அணிய வேண்டுமா?

உங்களுக்கு சுவாசம் தொடர்பிலான அறிகுறிகள் (இருமல் அல்லது தும்மல்) இருந்தால் மற்றவர்களைப் பாதுகாக்கும் நோக்கில் மருத்துவ முகமூடியைப் பயன்படுத்துங்கள். உங்களுக்கு இவ்வாறான எந்த அறிகுறிகளும் இல்லை என்றால், முகமூடி அணிய வேண்டிய அவசியமில்லை.

நீங்கள் முகமூடிகள் அணிவதாயின் அவற்றின் பாதுகாப்பு செயல்திறனை உறுதிப்படுத்துவதோடு அவற்றை பயன்படுத்திய பின்னர் முறையாக அப்புறப்படுத்துங்கள். அவற்றை முறையாகப் பயன்படுத்துவதன் மூலம் வைரஸ் பரவும் அபாயத்தைத் தவிர்க்க முடியும்..

ஆனால் முகமூடியை மட்டும் பயன்படுத்துவது தொற்றுநோய்களைத் தடுக்க போதுமானதாக இருக்காது. நீங்கள் அடிக்கடி கை கழுவுதல், தும்மல் மற்றும் இருமல் ஆகியவறின் போது சரியான பழக்கவழக்கத்தை மேற்கொள்ளுதல் மற்றும் குளிர் அல்லது காய்ச்சல் போன்ற அறிகுறிகள் (இருமல், தும்மல், காய்ச்சல்) காணப்படும் யாருடனும் நெருங்கிய தொடர்பைத் தவிர்த்தல் தொடர்பிலும் அவதானமாக இருத்தல் அவசியமாகும்.

COVID-19 குழந்தைகளை பாதிக்கிறதா?

இது ஒரு புதிய வகை வைரஸ் ஆகும். அதனால் இது வரை எந்தளவு குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களை பாதிக்கிறது என்பது பற்றி தெளிவாக இன்னும் தெரியவில்லை. ஆனால் எந்தவொரு வயதினருக்கும் இந்த வைரஸ் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது என்பது நம் அனைவருக்கும் தெரியும். அதே நேரம் இதுவரை குழந்தைகளிடையே COVID-19 இன் பாதிப்பு தொடர்பிலான அறிக்கைகள் ஒரு சில மட்டுமே பதிவாகியுள்ளன. ஆனால் இந்த வைரஸ் முன்னரே நோய்க்குள்ளான மருத்துவ சிகிச்சையில் இருக்கும் முதியவர்களை இலகுவில் பெரும் பாதிப்படைய வைப்பதுடன் உயிரிழப்பினையும் ஏற்படுத்தியிருக்கின்றது.

என் குழந்தைக்கு COVID-19 அறிகுறிகள் இருந்தால் நான் என்ன செய்ய வேண்டும்?

மருத்துவ உதவியை நாடுவது மிகச்சிறந்தது. ஆனால் இப்போதைய காலநிலை மாற்றத்தில் இது ஒரு காய்ச்சல் காலம் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள். மேலும் இருமல் அல்லது காய்ச்சல் போன்ற COVID-19 இன் அறிகுறிகள் என கருதப்படும் நமக்கு அடிக்கடி ஏற்படக்கூடிய காய்ச்சல் அல்லது ஜலதோஷம் போன்றவை சாதாரணமாக ஏற்பட்டவையாகவும் இருக்கலாம்.

வழக்கமான கை கழுவுதல் போன்ற நல்ல சுகாதார பழக்கங்கள் மற்றும் சுவாசரீதியான (தடிமன்,இருமல்) சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றவும் வைப்பதுடன் உங்கள் குழந்தைக்கு முறையான தடுப்பூசிகளை சரிவர தேதியில் போடுவதையும் கைக்கொள்ளுங்கள். இதனால் உங்கள் குழந்தை பிற வைரஸ்கள் மற்றும் நோய்களை உருவாக்கும் பாக்டீரியாக்களிலிருந்து பாதுகாக்கப்படும்.

காய்ச்சல் போன்ற பிற சுவாச நோய்த்தொற்றுகளைப் (தடிமன்,இருமல்) போலவே, உங்களுக்கு அல்லது உங்கள் பிள்ளைக்கு அறிகுறிகள் இருந்தால் ஆரம்பத்திலேயே முறையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள். மேலும் மற்றவர்களுக்கு பரவாமல் தடுக்க பொது இடங்களுக்கு (பணியிடங்கள், பள்ளிகள், பொது போக்குவரத்து) செல்வதைத் தவிர்க்க முயற்சியுங்கள்.

ஒரு குடும்ப உறுப்பினர் COVID-19  அறிகுறிகளைக் காட்டினால் நான் என்ன செய்ய வேண்டும்?

உங்களுக்கு அல்லது உங்கள் பிள்ளைக்கு காய்ச்சல், இருமல் அல்லது சுவாசிப்பதில் சிரமம் இருந்தால் ஆரம்பத்தில் மருத்துவ உதவியை நாட வேண்டும். நீங்கள் COVID-19 தொற்றுக்குள்ளான ஒரு பகுதிக்கு பயணம் செய்திருந்தால், அல்லது இந்த பகுதிகளில் ஒன்றிலிருந்து பயணம் செய்து சுவாச அறிகுறிகளைக் கொண்ட ஒருவருடன் நீங்கள் நெருங்கிய தொடர்பில் இருந்திருந்தால், உங்கள் உடல்நலப் பாதுகாப்பு வழங்குநரிடம் தெரிவிக்க முன் அழைப்பதைக் கவனியுங்கள்.

நான் என் குழந்தை பள்ளிக்கு  செல்வதை நிறுத்த வேண்டுமா?

உங்கள் பிள்ளைக்கு அறிகுறிகள் இருந்தால், மருத்துவ உதவியை நாடுங்கள். சுகாதார வழங்குநரின் வழிமுறைகளைப் பின்பற்றுங்கள். இல்லையெனில், காய்ச்சல் போன்ற பிற சுவாச நோய்த்தொற்றுகளைப் போலவே, உங்கள் பிள்ளைக்கும் அறிகுறிகள் காணப்பட்டால் வீட்டிலேயே நன்றாக ஓய்வெடுக்க வையுங்கள். மேலும் மற்றவர்களுக்குப் பரவாமல் தடுக்க பொது இடங்களுக்கு அழைத்துச் செல்வதைத் தவிர்த்துக் கொள்ளுங்கள்.

ஆனால் உங்கள் பிள்ளை காய்ச்சல் அல்லது இருமல் போன்ற எந்த அறிகுறிகளையும் காண்பிக்கவில்லை என்றால் உங்கள் பிரதேசத்தில் குழந்தைகளின் ஆரோக்கிய பாதுகாப்பு கருதி பொது சுகாதார ஆலோசனை அல்லது பிற தொடர்புடைய எச்சரிக்கையானது  அரச / உத்தியோகபூர்வ ஆலோசனை அமைப்பினால் கட்டாய விடுமுறைகள் எதுவும் வழங்கப்படாவிட்டால் உங்கள் குழந்தையின் பள்ளியைப் பாதிக்காத வகையில் உங்கள் குழந்தையை பாடசாலைக்கு அனுப்புவது நல்லது.

குழந்தைகளை பள்ளியிலிருந்து ஒதுக்கி வைப்பதற்குப் பதிலாக, பள்ளிக்கூடத்திற்கும் பிற இடங்களுக்கும் நல்ல கை மற்றும் சுவாச சுகாதார நடைமுறைகளை அவர்களுக்குக் கற்றுக் கொடுங்கள்.  மேலும் அவர்கள் கைகளை சரியாகக் கழுவவில்லை என்றால் அவர்களின் கண்கள், வாய் அல்லது மூக்குகளைத் தொடுவதை தவிர்க்கச் செய்யுங்கள்.

நாங்கள் பயணம் செய்தால் எனது குடும்பத்திற்கு நான் என்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்?

வெளிநாட்டு பயணத்தைத் திட்டமிடும் எவரும், நுழைவதற்கான எந்தவொரு கட்டுப்பாடுகளுக்கும், நுழைவதற்கான தனிமைப்படுத்தப்பட்ட தேவைகள் அல்லது பிற தொடர்புடைய பயண ஆலோசனைகளுக்காக எப்போதும் தங்கள் பயணப்படும் நாட்டிற்கான பயண ஆலோசனையை சரிபார்த்து அறிந்து அதற்கேற்ற வகையில் செயற்பட வேண்டும்.

பயணம் செய்யும் போது, ​​எல்லா பெற்றோர்களும் தமக்கும் தங்கள் குழந்தைகளுக்கும் மேலே கூறிய சுகாதார நடவடிக்கைகளைப் பின்பற்ற அறிவுறுத்தப்படுகின்றீர்கள். கூடுதலாக உங்கள் இருக்கை (Seat), ஆர்ம்ரெஸ்ட் (Armrest), தொடுதிரை (Touch screen) போன்றவற்றை ஒரு விமானம் அல்லது பிற வாகனத்திற்குள் நுழையும்போது ஒரு முறை கிருமித் தொற்று நீக்கியினால் சுத்தம் செய்யுங்கள். நீங்களும் உங்கள் குழந்தைகளும் தங்கியிருக்கும் ஹோட்டல் அல்லது பிற தங்குமிடங்களில் முக்கிய மேற்பரப்புகள், கதவுகள், ரிமோட் கண்ட்ரோல்கள் போன்றவற்றை சுத்தம் செய்ய கிருமித் தொற்று நீக்கிகளை பயன்படுத்துங்கள்.

கர்ப்பிணிப் பெண்ணிடமிருந்து  குழந்தை கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாக முடியுமா?

இந்த நேரத்தில், கர்ப்ப காலத்தில் ஒரு தாயிடமிருந்து தனது குழந்தைக்கு வைரஸ் பரவுகிறதா, அல்லது இது குழந்தைக்கு எந்தளவு பாதிப்பு ஏற்படுத்தக்கூடியது என்பதை தீர்மானிக்க போதுமான ஆதாரங்கள் இதுவரையில் இல்லை. இது குறித்து தற்போது ஆய்வுகள் நடந்து வருகின்றன. காய்ச்சல், இருமல் அல்லது சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகளை எதிர்கொண்டால், கர்ப்பிணிப் பெண்கள் தங்களைத் தற்காத்துக் கொள்ள தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தொடர்ந்து பின்பற்றுவதோடு, ஆரம்பத்தில் மருத்துவ உதவியை நாடுவது மிகவும் சிறந்தது.

ஒரு தாய்க்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் தாய்ப்பால் கொடுப்பது பாதுகாப்பானதா?

காய்ச்சல், இருமல் அல்லது சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகளைக் கொண்ட பாதிக்கப்பட்ட மற்றும் கொரோனா தொற்றுக்குள்ளான பகுதிகளில் வாழும்  அனைத்து தாய்மார்களும் ஆரம்பத்தில் மருத்துவ உதவியை நாட வேண்டும். மேலும், சுகாதார வழங்குநரின் அறிவுறுத்தல்களைப் பின்பற்ற வேண்டும்.

தாய்ப்பால் கொடுப்பதன் நன்மைகள் மற்றும் தாய்ப்பால் வழங்குவதில் எதுவித பிற சுவாச வைரஸ் தொற்றும் ஏற்படாது எனும் சந்தர்ப்பத்தில் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் கடைப்பிடிக்கும்போது, ​​தாய்ப்பால் தொடரலாம்.

தாய்மார்கள் பொதுவாக குழந்தையின் பாதுகாப்பு கருதி குழந்தையின் அருகில் இருக்கும்போது (உணவளிக்கும் போது உட்பட) முகமூடியை அணிந்துகொள்வது, குழந்தையை தொடும்போதும் பராமரிக்கும் போதும் முன்னும் பின்னும் கைகளை கழுவுதல் (உணவளிப்பது உட்பட), மற்றும் அசுத்தமான மேற்பரப்புகளை சுத்தம் செய்தல் / கிருமி நீக்கம் செய்தல் ஆகியவை அடங்கும்.

ஒரு தாய் மிகவும் உடல்நிலை சரியில்லாமல் இருந்தால், பால் கொடுப்பதற்கு சுத்தமான கப் மற்றும் / அல்லது ஸ்பூன் வழியாக குழந்தைக்கு கொடுக்கலாம்.

கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்து பரிகசித்தல், பாகுபடுத்துதல் பற்றி நான் கவலைப்படுகிறேன். கொரோனாவினால் என்ன நடக்கிறது என்பதைப் பற்றி எவ்வாறு பேசுவது?

கொரோனா வைரஸைப் பற்றி நாம் அனைவரும் கவலைப்படுகின்றோம். அதிலிருந்து மீள்வதற்கே நாம் அனைவரும் முயற்சிகளும், ப்ரார்த்தனைகளும் செய்ய வேண்டும். ஆனால் பயமும் களங்கமும் ஒரு கடினமான சூழ்நிலையை மோசமாக்குகின்றன. எடுத்துக்காட்டாக, பாதிப்படைந்த தனிநபர் ஒருவரை வாய்மொழி அல்லது உடல் ரீதியான துஷ்பிரயோகங்களுக்கு உட்படுத்தக் கூடாது. மாறாக ஒருவருக்கொருவர் அன்பாகவும் ஆதரவாகவும் இருக்க வேண்டும்.

கை கழுவுதல் குறித்த உதவிக்குறிப்புகளைப் பின்பற்றுவது உட்பட பயனுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகளின் முக்கியத்துவத்தை அனைவருக்கும் வலியுறுத்துங்கள். பெரும்பாலான மக்களுக்கு இது ஒரு நோயாகும். நம்மையும், நம்முடைய அன்புக்குரியவர்களையும், நம்மையும் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள நாம் அனைவரும் எடுக்கக்கூடிய எளிய வழிமுறைகளை மேலே கலந்துரையாடியவாறு பின்பற்றுங்கள்.

நன்றி : UNICEF

https://www.unicef.org/stories/novel-coronavirus-outbreak-what-parents-should-know

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments