FB டிப்ஸ்!!

0
1400

கிடைத்த நேரத்தில் சமூகத்துக்கு ஏதாச்சும் நல்லது பண்ணுவமே எண்டு ப்ரைன பிராண்டினதுல கிடைச்ச தத்துவ முத்துக்கள் சில!

நீங்களும் பேஸ்புக்கில் பெரிய அப்பாடாக்கராக வேண்டுமா!?
கீழ்வரும் ஐந்து நிபந்தனைகளையும் கடைப்பிடித்தால் அள்ளி வரும் லைக்குகளையும், துள்ளி விழும் கொமண்டுகளையும் தடுக்க ஆராலயும் முடியாது!

1. ஸ்டேட்டஸ் போடும் நேரம்!

லைக்குகளின் எண்ணிக்கையை தீர்மானிப்பதில் இது முக்கியமான விடயம்! ஆறுவருட ஸ்டேட்டஸ்களை அனலைஸ் பண்ணியபோது வாரநாட்களில் இரவு 8-11 மணி மற்றும் சனி ஞாயிறு காலை 9-11 மணியில் பயபுள்ளைங்க வெட்டியாக இருப்பதாக தெரிந்தது! இந்த பேஸ்புக் பீக் ஹவர்களில் ஸ்டேட்டஸ் அப்டேட் செய்தால் நல்ல விளைச்சலை எதிர்பார்க்கலாம்!

2. டார்கெட் குரூப்!
நமக்கு ஒரு 500 பிரண்டு இருக்கும் பட்சத்தில், ஒரு 50 பேர் நாம என்னத்த போட்டாலும் லைக் போடுவாங்க, அதுலயும் சில அன்பு உள்ளங்கள் லைக் பட்டுன தட்டிப்போட்டு தான் ஸ்டேட்டசயே வாசிக்க தொடங்குவாங்க- இவங்க நம்ம டார்கெட் இல்ல!
இன்னொரு 100 பேர் , பிரண்ட் லிஸ்ட்ல பேர் மட்டும் தான் இருக்கும், இருக்கானா இல்லியா எண்ட்றதுக்கு எந்த ஆதாரமோ அடையாளமோ இருக்காது- இவங்களும் நம்ம டார்கெட் இல்ல!மிச்சம் இருக்கிற பசங்க தான் நம்ம டார்கெட்! நம்ம ஸ்டேட்டஸ் அவங்க பார்வைக்கு வரும் பட்சத்தில் ( ஸ்டேட்டஸ் கொஞ்சம் படிக்கக்கூடியதா இருக்கணும்) லைக் கிடைப்பது 90% உறுதி! சில வேளைகளில் அதிஷ்டவசமாக super, awesome போன்ற கொமண்டுகளும் கிடைக்க வாய்ப்புள்ளது! சோ, எப்பிடியாவது நம்ம சரக்க அவிங்க கண்ணுல காட்டணும்! முதல்ல இந்த குரூப்ப சரியா அடையாளம் கண்டு அடிக்கடி அவங்க போஸ்ட்டுகளுக்கு விசிட் அடிக்கணும்! ஸ்டேட்டஸ் அப்டேட் பண்ண கொஞ்ச நேரத்துக்கு முதல், அவங்க ப்ரொஃபைலுக்கு போய் கண்ணுல படுற போட்டோ, ஸ்டேட்டஸ் எல்லாத்துக்கும் கண்ணை மூடிட்டு லைக்குகள அள்ளி விடுங்க, காசா பணமா!! (சில மொக்கை போஸ்ட்டுகளை பாத்து கண்ணுல ரத்தம் வரலாம், பட் நமக்கு லைக் முக்கியம் அமைச்சரே)! அப்புறம் பாருங்க இம்ப்ரூமண்ட..!!

3. போட்டோ Sharing!

நிறைய பேர் நல்ல போட்டோகளை காணுமிடத்தில், அப்பிடியே share பண்ணி விடுவார்கள்! இதைவிட, அந்த போட்டோவை டவுண்லோட் பண்ணி மீண்டும் நம் wall ல் அப்லோட் பண்ணும் போது, நிறைய பேரிடம் ரீச் ஆக சந்தர்ப்பம் உள்ளது!
மேலும் அந்த போட்டோகளுக்கு உங்கள் சொந்த சரக்கிலிருந்து ஒரு caption ஐ போட்டு விடுங்கள்! ஒன்றும் தோன்றாவிட்டால், கொட்டிக் கிடக்கும் ஸ்மைலிகளில் சிலதை தட்டி விடுங்கள்! நல்ல பலன் கிடைக்கும்!!

4. Tag செய்தல்!

வெளிப்படையாக பார்க்கும் போது இது நல்ல உத்தியாக தோன்றினாலும், இது மிக அபாயமானது! அன்நெசசரியாக வரும் நோட்டிபிகேஷன்களை கண்டு tag செய்யப்பட்டவர்கள் கடுப்பாகி, உங்களை அன்ஃபிரண்ட் செய்யவும், உங்கள் பெயரை பேஸ்புக்கில் கண்டாலே பயந்தோடவும் வாய்ப்புள்ளது! சோ தேவையற்ற tag களை தவிர்க்கவும்!

5. குறைந்தது வாரம் ஒருமுறையாவது ஒரு போஸ்ட் போடுங்கள்!

இல்லாவிடின் பேஸ்புக் பதிவாளர் என்ற அந்தஸ்தை இழக்க வேண்டி வரலாம்! ரெம்ப பிஸியாக இருந்தால், ” நான் ரொம்ப பிஸி” எண்டு ward ல ஒரு ஃபைலோடயோ இல்ல co- HO வோடயோ ( அது பொண்ணா இருந்தா இன்னும் விஷேசம், ஒண்ணுக்கு ரெண்டா இருந்தா அதிவிஷேசம்) ஒரு போட்டோ எடுத்து போட்டு விடுங்க… ஹீ ஹீ!!

உங்க ஐடியாக்களயும் share பண்ணுங்க! படிச்சு சமுதாயம் நாசமா போகட்டும்!!

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments