அமெரிக்காவைச் சேர்ந்த டெஸ்லா நிறுவனம் பேட்டரி கார்களைத் தயாரித்து விற்பனைச் செய்து வருகிறது. முழுக்க முழுக்க மின்சாரத்தால் இயங்கும் இந்த கார், ஓட்டுநர் இல்லாமல் தானாக இயங்கக்கூடிய வகையிலும் உருவாக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாகவே, இன்றளவும் இந்த கார் இந்தியாவில் விற்பனைக்கு வராமல் உள்ளது.
அண்மையில் அமெரிக்காவில் ஒரே வாரத்தில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்லா கார் விபத்து குறித்து அமெரிக்க சாலைப் பாதுகாப்பு முகமைகள் விசாரணை நடத்தி வந்தனர்.
2018 ஆம் ஆண்டு தெற்கு புளோரிடாவில், டெஸ்லாவின் 2016-ஆம் ஆண்டு மாடல் எஸ் மின்சாரக் காரில் பேட்டரி கோளாறு காரணமாக தீப்பிடித்தது. இந்த விபத்தில் காரை ஓட்டிய 48 வயது மதிக்கத்தக்க நபர் உடல் கருகி உயிரிழந்தார்.
மற்றும் பாம் பீச் கவுன்டியில் (Palm Beach County) டிரக் ஒன்றுக்கு அடியில் சிக்கி மேற்கூரை கழன்ற ஒரு டெஸ்லா மாடல் 3 காரில் 50 வயது மதிக்கத்தக்க ஓட்டுநர் பலியானார்.
அந்த கார், விபத்தின் போது ஆட்டோ பைலட் எனும் தானியங்கி முறையில் இயங்கியதா? என தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியமும், தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்துப் பாதுகாப்பு நிர்வாகமும் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில்,ஆட்டோ பைலட் எனும் தானியங்கி விபத்தின் போது செயல்பட்டதாக தகவல் வெளிவந்துள்ளது.
மேலும் டெஸ்லா கூறியது,திடீர் வளைவு கொண்ட நெடுஞ்சாலை உள்ளிட்ட சிக்கலான சாலைகளில் ஆட்டோபைலட் மோடை நம்பவேண்டாம் என ஏற்கெனவே டெஸ்லா அறிவித்திருந்தது. மேலும், ஓட்டுநரின் கை ஒரு பாதுகாப்புக்காக ஸ்டியரிங்கை விட்டு அகலக் கூடாது என்றும், தானியங்கி முறையாக இருந்தாலும்,கவனம் தேவை என்றும் டெஸ்லா அறிவித்திருந்தது. இந்நிலையில் பெரும்பாலான ஓட்டுநர்கள் அதைப் பின்பற்றவில்லை எனக் கூறப்படுகிறது.
வலைப்பகிர்வு
நன்றி : டெக் தமிழ்