ரூபிக் க்யூப் பற்றி உங்களுக்கு தெரிந்திருக்கும். ஓரு காலத்தில் எலலார் கையிலும் இருந்த ஒரு முக்கிய விளையாட்டு பொருள். பின்பு அது ஒரு டென்ஷன் நீக்கும் அருமருந்தாகவும், புத்திசாலி தனத்தை காட்ட நினைக்கும் விஷயமாகவும் பரவி, எவ்வளவு குறுகிய காலத்தில் க்யூபை சேர்க்க முடியும் என்று போட்டியெல்லாம் நடந்த காலம் ஒன்று உண்டு.
ரூபி க்யூப் விளையாடுவதால் நமக்கு பல்வேறு நன்மைகள் உண்டாகும்
- இது நினைவகத்தை மேம்படுத்துவதற்கு உதவுகிறது
- ரூபி க்யூபின் சிக்கல்கள் தீர்க்கும் வழிகளைக் கற்றுக்கொள்வது பொறுமையை மேம்படுத்துகிறது
- இது ஒரு சிக்கலைத் தீர்க்க உதவுகிறது
- இது மனதைச் செயல்படுத்துகிறது
- ஸ்பீட் க்யூப்பிங் நம்மை வேகமாகவும் துரிதமாகவும் செயற்பட வைக்கின்றது
- இது உங்கள் விரல்களின் திறனையும் செயல்திறனையும் மேம்படுத்தும்
நான் மூன்றே நிமிஷங்களில் க்யூபை செட் செய்துவிடுவேன். இப்போது அதே க்யூபை வேறு ஒரு வடிவத்தில் கொண்டு வந்திருக்கிறார்கள். மேலும் பல இன்னவேஷன்களோடு. சிம்ப்ளி இண்ட்ரஸ்டிங்.. அது சரி நான் எப்படி மூன்று நிமிடங்களில் க்யூபை சால்வ் செய்வேன் என்றுதானே கேட்கிறீர்கள்.
என்னைப் போல உங்களாலும் செய்ய முடியும். அதற்கு இலகுவான பார்முலாக்கள் (Formulas) உள்ளன. பார்முலாக்கள் ஆங்கில எழுத்து வடிவில் நினைவிற் கொள்ள வேண்டும். அந்த எழுத்துக்களின் அடிப்படையில்தான் நீங்கள் இலகுவில் சிக்கலைத் தீர்க்க முடியும்.
அதற்கு முதலில் எவ்வாறு எழுத்துக்களுக்கேற்ப ரூபி க்யூபினை அசைப்பது என அறிந்து கொள்வோம்.
இதுவே ஆரம்ப வீடியோ. இதனை நன்று பழக்கம் செய்து கொள்ளுங்கள். இனி வரும் வீடியோக்களில் அடுத்தடுத்து எவ்வாறு செய்வது என கற்றுத் தருகிறேன்.