எழுத்தாளர்களின் பலதரப்பட்ட வேண்டுகோளுக்கிணங்க கவிதை மற்றும் சிறுகதை போட்டிக்கான திகதிகள் 10.06.2020 வரை நீடிக்கப்படுகின்றது. மேலும் போட்டி முடிவுகள் 13.06.2020 அன்று பிரசுரிக்கப்படும்.
படைப்பாளர்களே,
நீர்மை வலைத்தளம் தனது முதலாவது ஆண்டு நிறைவையொட்டி படைப்பாளர்களின் திறமைகளை கொண்டாடும் வகையில் கவிதை, கதைப்போட்டிகளை நடாத்த உள்ளது. உங்கள் படைப்புக்களை இன்றிலிருந்து ஜூன் மாதம் 03ம் திகதி வரை சமர்ப்பிக்க முடியும். போட்டி முடிவுகள் 06.06.2020 அன்று நீர்மை வலைத்தளத்தில் பிரசுரிக்கப்படும்.
பரிசு விபரம் :
பரிசு 01 – வெற்றி பெறும் சிறந்த கதைக்கு பெறுமதியான பரிசு வழங்கப்படும். சிறந்த படைப்பானது நீர்மைக்குழுவின் நடுவர்களால் தெரிவு செய்யப்படும்.
பரிசு 02 – சமர்ப்பிக்கப்பட்ட கதைகளில் எந்த எழுத்தாளரின் படைப்பு அதிக விருப்பத்தையும் பார்வையினையும் உள்ளடக்கியுள்ளதோ அதற்கும் பெறுமதியான பரிசு வழங்கப்படும். இந்தப்படைப்பானது வாசகர்களால் தேர்ந்தெடுக்கப்படும். (இதில் வெற்றி பெற போட்டியாளர்களாகிய நீங்கள் உங்கள் படைப்புக்களை அதிக நபர்களுடன் பகிர்ந்து கொள்வது அவசியம்)
போட்டியில் பங்குபற்றும் அனைவருக்கும் மின்சான்றிதழ் வழங்கப்படும்.
நிபந்தனைகள்
01. கதைகள் எந்தவொரு தலைப்பிலும் பகிரலாம். அதிகபட்ச சொற்கள் வரையறை இல்லை. ஆனால் 1500 வார்த்தைகளை விடக் குறைவான கதைகளை போட்டிக்காக சமர்ப்பிக்க முடியாது.
02. ஒருவர் அதிகபட்சம் 10 கதைகள் வரை பகிரமுடியும். பத்திற்கு குறைந்து எத்தனை படைப்புக்களையும் ஒருவர் சமர்ப்பிக்க முடியும்.
03. சமர்ப்பிக்கும் படைப்புக்கள் அனைத்தும் படைப்பாளரின் சொந்த படைப்பாக இருத்தல் அவசியம். வேறொருவரின் படைப்புக்களை போட்டிக்கு சமர்ப்பிக்க முடியாது.
04. எழுத்தாளர் ஒருவரால் நீர்மை வலைத்தளத்தில் ஆரம்பத்தில் பகிரப்பட்ட கதைகளாக இருத்தல் கூடாது. புதிய கதைகளாக இருத்தல் அவசியம்.
05. கதைகளை சமர்ப்பிக்கும் முன்னர் எழுத்துப்பிழை மற்றும் சொற்பிரயோகங்களை சரி பார்த்தல் அவசியம். மேலும் சமர்ப்பிக்கப்படும் படைப்புக்கள் அனைத்தும் நீர்மை வலைத்தளத்தின் நிபந்தனைகளுக்கு உட்பட்டவாறு அமைந்திருத்தல் வேண்டும் (https://neermai.com/மறுப்பு-disclaimer).
போட்டியில் யார் பங்குபற்ற முடியும்?
18 வயதிற்கு மேற்பட்ட எந்த ஒரு நபரும் பங்குபற்ற முடியும். (நீர்மை வலைத்தளத்தில் கணக்கு இல்லாத நபர்கள் முதலில் இந்த https://neermai.com/register/ இணைப்பை பயன்படுத்தி ஓர் எழுத்தாளராக பதிவு செய்து கொண்ட பின்னர் போட்டிக்குரிய படைப்புக்களை சமர்ப்பிக்க முடியும்.) உதவி தேவையாயின் உடன் அழையுங்கள் 76 266 0 466
எவ்வாறு போட்டிக்கு கதைகளை சமர்ப்பிப்பது?
இந்த இணைப்பை https://neermai.com/உள்-நுழை/ தொடர்வதன் மூலமம் உங்கள் கணக்கில் நுழைந்து உங்கள் படைப்புக்களை சமர்ப்பிக்க முடியும். நீங்கள் ஒன்றுக்கு மேற்பட்ட படைப்பை சமர்ப்பிப்பதாயின் தனித்தனியே ஒவ்வொரு படைப்புக்களையும் பதிவிடுதல் அவசியம். படைப்புக்களை சமர்ப்பிக்கும் போது ‘போட்டிகள்’ பகுதியில் பிரவேசித்து ‘கதை – ஜூன் 2020’ என்பதை தெரிவு செய்து கொள்ளல் வேண்டும் அல்லது உதவி தேவையாயின் உடன் அழையுங்கள் 76 266 0 466
போட்டி தொடர்பில் நீர்மையின் முடிவே இறுதியானதாகும்.
மேலதிக விபரங்களுக்கு : +9476 266 0 466 | contact@neermai.com
சிறந்த படைப்புக்களை படைத்து வெற்றியாளராகுங்கள்! வாழ்த்துக்கள்!