29.2 C
Batticaloa
Wednesday, February 12, 2025
முகப்பு குறிச்சொற்கள் கவிதை

குறிச்சொல்: கவிதை

கனவு

2
நித்தம் உந்தன் நினைவு இருள் கண்டும் கலையா கனவு உன்னை சந்திக்க விரும்பும் உறவு என்னைப் பற்றி என்ன எண்ணுகிறாய் கூறு நித்திரை இல்லையடி என்னுள் சுவர்க்கமாய் நீயடி உலகம் அமைதி கொண்டதும் என் கனாவில் வந்து போனதும் நீ என்பதை அறியவில்லை நானடி விடியாத...

சாளரம்

0
புதிதாய் பூத்ததொரு சாளரம் ஏன் இத்தனை பிம்பங்கள் பிரம்மையாகக் கூட இருக்கலாம் இல்லை இது என்னறைதான் சூரியனைக் காணவில்லை வெண்பனி ஓயவில்லை இடைக்கிடை சிறு சலனம் திடீரென மௌனம் மீண்டும் பார்க்கிறேன் தூரமாக அதே மரங்கள் சிறகு விரிக்கும் பட்ஷிகள் ஆனால் ஒரு பாதை தானே சகதியின் மேலாக இருகிச் செல்லும்...

உயிரே உனக்காக..

        தென்றல் எனைக் கண்டு வியக்கிறது // திங்களும் எனைக் கண்டு சிரிக்கிறது // தேவ மங்கையரும் வெட்கித்தான் போகின்றனரே// உயிரே உனக்காக உறங்காமல் காத்திருக்கும்// இவளைக் கண்டே இத்தனையும் புரிகின்றனர்.//        

கனவிலும் உன் நினைவே

கடலோர மணலில் பெயரெழுதிகைவிரல் சுருள்கேசம் கோதிவிடலையின் பருவம் விளையாடிவிழிமுன் நீயிருந்த காலங்கள்பிடிக்கும் நிறத்தில் ஆடைகொண்டுபிள்ளையார் கோயில் வந்தாய்படிக்கும் பெருங்கதை மறந்துபார்வைக்குள் உயிர் நெய்தாய் மடிப்புக் குலையா வேட்டியோடுமருதமர நிழல்மறைவில் நானிருந்துஅடிக்கடி விழிசாய்த்து அழைக்கஆகாதென்று அசைவில்...

அழகான விடியல்

ஆழிமேல் கடலலைகள் அழகாக ஆடும்ஆதவனின் கதிராடி அழகங்கே சூடும்தூளியாடும் தொட்டிலெனத் தோணிகள் ஆடும்துணைகாண மனையாள் துயரங்கு ஒடும்கருஞ்சேவல் கூவக் காகங்கள் கரையும்கடலோடும் படகுகள் கரைதேடி விரையும்அரும்புகள் அழகிதழ்கள் அழகாக விரியும்ஆதவன் கதிரழகுச் சுடரெங்கும்...

வாழ்ந்திடு மனிதா…

0
நிறைபொருள்  இல்லை... நிலையற்ற  இவ்வாழ்வில்... நிறைவாக  தேடிடு... நிலையான உனை மட்டும்... கவலைகள் தடையல்ல... கண்ணீரும்  மருந்தல்ல... கலங்காமல் வாழ்ந்திடு... கரைகள் சேர்ந்திட... நேற்றைய விதிகள் யாவும்... நாளைய  உரங்கள் ஆகும்... இன்றே வென்றிடு... இனிதொரு உலகம் செய்திடு... திருப்பங்கள் உண்டு உன் வாழ்விலும்... பிழைகள்  திருத்தி  நீ வாழ்ந்தால்... திருந்தி வாழ்ந்திடு... விரும்பி வாழ்ந்திடு... வாழ்ந்திடு மனிதா... வாழ்க்கை  உனக்கானதாகும்...  

படைப்புக்கள்

மேலும்
    error: தயவு செய்து நகல் எடுக்க வேண்டாம் !!