குறிச்சொல்: தமிழ் கதைகள்
ஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 14
மீண்டும் ஈராக்கை நோக்கி
ஜோர்டானின் தலைநகரான அம்மான், மலை பிரதேசம் போல அழகாக இருப்பதால், இந்நகர் ஊட்டியை நினைவுபடுத்தியது.சிரியா,சவுதி அரேபியா,ஈராக் இதன் எல்லை நாடுகள்.இடையில் கொஞ்சம் சாக்கடலும் அதை ஒட்டிய மறுபுறம்இஸ்ரேலும், எகிப்தும் உள்ளது....
ஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 13
திக்ரித்திலும் குண்டு வெடித்தது
பாக்தாத்தின் விடுதி எங்கள் நிறுவனத்தில் பணிபுரிபவர்களால் நிரம்பியிருந்தது. விடுதியை விட்டு வெளியே செல்ல எங்களுக்குஅனுமதி மறுக்கபட்டது. பாக்தாத்தின் வீதிகளில் நடை செல்லும் எனது திட்டம் இயலாமல் போயிற்று. பயணக்களைப்பும்,குளிரும் இருந்ததால் இரவு உணவுக்குப்பின்...
ஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 12
விடுமுறையில் தாயகத்திற்கு பயணம்
கூடாரம் தீப்பிடித்த அன்றும் மறுநாளும் உடலிலும், மனதிலும் சக்தியே இல்லை. மனம் கவலையுற்றுருந்ததால், எதையும்செய்வதற்கு உடல் ஒத்துழைக்கவில்லை. அடுத்த சில நாட்களில் அனைவரும் மனதளவில் கொஞ்சம் இயல்புநிலைக்கு வந்தோம். சிலர் நெடுநாட்கள்...
நடுநிசி வேட்டை – அத்தியாயம் 06
கே.கே யின் வீட்டிலிருந்து சற்றுத் தூரமாக ஒரு மரத்தடியில் வளையம் வளையமாக புகையை ஊதிக்கொண்டிருந்தான் சத்யா. இடையிடையே கடிகாரத்தைப் பார்த்தான். முட்கள் இரண்டும் தம்மிடையே நூற்றைம்பது பாகை கோணம் அமைக்க இன்னும் ஐந்து...
ஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 11
திக்ரித், சதாம் ஹுசைன் பிறந்த ஊர். இது ஈராக்கின் வடக்குப்பகுதி, எல்லை தாண்டினால் துருக்கி. ஐரோப்பாவை ஒட்டியிருப்பதால் பசுமையாக இருக்கும் இப்பகுதி. நான் தங்கியிருந்த இடத்தில் நிறைய ஆலிவ் மரங்களும் ,பேரீச்சம் மரங்களும்...
நடுநிசி வேட்டை – அத்தியாயம் 05
பத்ரி உள்ளே வரும் போது சத்யாவின் முன்னால் இருந்த மேஜையில் அந்த ஒரு பக்கம் கடித்த ஆப்பிள் வெண்ணிறமாக ஒளிர்ந்துகொண்டிருந்தது. சத்யா தன்னுடைய லேப்டாப்பில் எதையோ துலாவிக் கொண்டிருந்தான். பத்ரி தான் கையில்...
ஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 10
சுக்கிரியாவை தேடிய கமல்
திக்ரித் முகாம், நாங்கள் போர்முனையில் இருக்கிறோம் என்பதை மறக்கடிக்கச் செய்திருந்தது. பனிரெண்டு மணி நேரபணியுடன், வாரம் இருநாள் தொலைப்பேசி,பணிமுடிந்ததும் பொழுதுபோக்க தொலைகாட்சி பெட்டியுடன் தனியறை,மேஜை பந்துவிளையாட்டு ,அனைவருக்கும் வாரத்தில் ஒருநாள் கட்டாய ஓய்வு,...
ஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 09
ஸ்டோர் கீப்பராக புதிய அவதாரம்
திக்ரித்திற்கு செல்லும் வண்டியில் நியூசிலாந்து நாட்டைச் சார்ந்த மேலாளர் உட்பட நாங்கள் ஏழுபேர் இருந்தோம். செல்லும் வழியில் பாபிலோன் என்னும் இடத்தில் வண்டி நின்றது.அங்கிருந்த முகாமில் எங்களுக்கான உணவை எடுத்துகொண்டோம்....
நடுநிசி வேட்டை – அத்தியாயம் 04
கே.கே ஜுவல்லர்ஸின் முன்னால் அந்தக் கார் நின்று கொண்டிருந்தது. டிரைவர் சீட்டில் சத்யா அமர்ந்திருந்தான். காரின் ஜன்னல் ஊடாக கே.கே ஜுவல்லர்ஸ் வாயிலை நோட்டமிட்டான் பத்ரி.
"பாஸ் நெக்ஸ்ட் என்ன பண்ணணும்." என்றான் சத்யா.
"நீ...
ஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 08
திக்ரித்தை நோக்கிப் புறப்பட்டேன்
பக்குபாவில் உணவுக்கூடம் துவங்கிய அன்றே, எங்கள் முகாம் மீது நடத்தப்பட்ட கடுமையான தாக்குதல் அது. சிறு காயங்கள் பட்ட அனைவருக்கும் முதலுதவி தரப்பட்டது. கடும்காயங்களுடன் உயிர்தப்பிய முனாவர், எங்கள் நிறுவனத்தின் சாலை போக்குவரத்தின் போதுவரும் ஸ்காட்லாந்து நாட்டைச் சேர்ந்த பாதுகாப்புஅதிகாரி ஒருவர் உட்பட ஆறு பேர் ஆபத்தான நிலையில் குவைத்துக்கு அவசரமாக அனுப்பி வைக்கபட்டனர் .
உணவுக்கூடத்தில் நாற்காலிகள் சிதறிக் கிடந்தன. உணவு பாத்திரங்கள் அனைத்தும் திறந்த நிலையில் அப்படியே இருந்தது.குண்டு வெடித்தபோது சிதறி ஓடியவர்கள் தரையில் படுத்து தப்பியவர்கள் மனத்திரையில் ஓடி மறைந்தனர். நல்ல பசியும் தாகத்துடனும் இருந்தவர்களை அழைத்தேன்.
மாலை நான்கு மணிக்கு மேல்,அனைவரும் அமர்ந்து சாப்பிட்டோம். அனைவருக்கும் உடலும், மனமும் களைத்துப் போயிருந்தது. அடுத்து என்ன நடக்கப் போகிறது என்பதிலேயே மனம் சுழன்றுகொண்டிருந்தது.
உடனே ரஸ்ஸல் மற்றும் அமெரிக்க அதிகாரி தலைமையில் கூட்டம் ஒன்று நடந்தது. வீரர்களுக்கு இரவுணவு கொடுக்கவேண்டுமென்றனர். பணி செய்வது குறித்த பேச்சை துவங்கியதும், பலரும் இனி இங்கே வேலைசெய்ய முடியாது என்றதால் கூட்டம் பாதியிலேயே முடிக்கப்பட்டது.
கனத்த மனதுடனும், பயத்துடனும் இரவில் தூங்கிகொண்டிருந்த போது சப்தம் கேட்டது. என்னுடன் வேலை செய்த...