29.2 C
Batticaloa
Wednesday, January 22, 2025
முகப்பு குறிச்சொற்கள் தமிழ் கவிதை

குறிச்சொல்: தமிழ் கவிதை

இறகுதிர் காலம்

              உன்னோடு பறப்பதற்குவானம் படைத்தேன்அந்தநிர்மல வானில்இரவுகளில் மட்டுமேஇறக்கைகள் விரியுமென்றுகொன்று கொண்டிருந்தாய்என் இன்பங்களை நீ இறகு விரித்தஇரவில்கரைந்த சாயத்தைகண்டு கொள்ளாமல்படர்ந்து கொண்டிருந்தேன் பொய்மையின் வண்ணத்தில் பொய்யும் அழகென்றேன்உன்னுள் உறைந்ததால்இறந்து கொண்டிருந்த என் உயிரின்கடைசி த்துளிசிந்திவிடுவதற்குள்நீ பறக்க தொடங்கி விட்டாய்யாரோ...

துணை

0
இந்த பூமிப் பெருவெளியில்பெருந்துயரோடு, வலிகளின் விளிம்பில்உள்ளவனும் நம்மை கடப்பான். அதே வலிகளில் விரக்தியுற்று, அமைதியை தேடியும் ஒருவன் கடப்பான். உள்ளே வலிகளின் ரத்தத்தில்நீந்திக் கரை சேர துடித்து, மூழ்கி, பரிதாபமாக வாடுபவனும்நம்மை கடப்பான்.  மானத்தை காத்துக் கொள்ளசாதுரியமாக வலிகளை மறைத்து, உன்னை கடப்பவன்...

புரிதல்

0
இப்படித்தான் இருக்க வேண்டும்இப்படித்தான் நடந்து கொள்ள வேண்டும்இவை இவைகளைத் தான் செய்ய வேண்டும்இன்னின்ன எதிர்ப் பார்ப்புக்கள் தான்உன் மீது எனக்குண்டு. என் ஆசைகளைநிறைவேற்றுகிறாயோ இல்லையோ, என் நிராசைகளுக்குகாரணமாய் இருந்திடாதே...! போன்ற எதிர்ப்பார்ப்புக்கள்எழுவதான நேசமொன்றில்... இதுவெல்லாம் தான் என் விருப்புக்கள்...

சுயநலம்

0
தான் மட்டும், தனக்கானவை மட்டும்,என்ற அகலமான சுயநலத்திற்குள்அடங்கி இருக்கிறதுமிக மெல்லிய ஓர் இதயத்தின்கனத்த பேரன்பொன்று தன்னை தாண்டிய ஒருவரிடம், தன்னிடம் போல் எந்தப் பரிமாறலும்இருந்து விடக் கூடாது என்பதில்... எல்லையற்றக் கவனம் மிகுந்திருக்கும், சாதாரணப் புன்னகையாயினும் சரியே. அப்போது...

நேசப் பெருவெளி

0
நேசத்தின் பெயரால் உன் வாழ்வில் ஒருவர் உள் நுழைகிறார்.. அவர் உன்னிடம்அன்பின் சிறு தண்ணீர்க் கோப்பையைதான் வேண்டி நிற்கிறார்;நீயோ அவருக்குபேரன்பின் ஒரு நீர்த்தேக்கத்தையே கொடுத்து விடுகிறாய்.. ஒரு துளி கருணைக்காகத்தான் வாசற்படியில் அவ்வளவு தயங்கி நிற்கிறார்;நீயோ அவர்மேல்கருணையை பெரும்...

நேசப் பெருங்காடு

0
எல்லாவற்றுக்கும் நானே காரணமென என்மேல் பழிபோடு..மனம்விட்டு என்னை திட்டித்தீர்த்து விடு..கருணை காட்டாமல் என்னை தண்டித்து விடு.. இன்னும்உன்னை கொஞ்சம் அமைதிப்படுத்திக்கொள்..வெகு நிதானமாகவே என்னை புறக்கணித்திடு.. எத்தனை விரும்பினாயோ அத்தனை தூய்மையாய் என்னை வெறுத்தும் விடு.. இறுதியாய்மிக இறுதியாய்ஒருமுறை வாஞ்சையாய் வாரி...

பிரிவு எண் 134

0
நீ இல்லாமலும் உயிர் வாழ்ந்துக்கொண்டு தான் இருக்கிறேன்..நீ இல்லாமற் போனதற்கான தடயங்களேதும் இல்லாமலில்லை.. இருந்தும்..நீ இல்லாமலும் புன்னகைக்க முடிகிறது..நீ இல்லாமலும் கவிதை எழுதிட முடிகிறது..நீ இல்லாமலும் உறங்கிப்போக முடிகிறது.. நீ இல்லை தான் ஆனாலும்இயங்கிக் கொண்டு தான்...

பிரியாவிடை

0
எப்போதோவிடைபெற்றாயிற்று..இன்னும் அதே இடத்தில்..அதே நொடிகளில்..அதே வார்த்தைகளுக்குள்..சுழன்று கொண்டிருக்கும் இந்த அளவிலா ப்ரியங்களை என்ன செய்வது...???

தனிமை

0
உருகிவிடுமோ என்றுஅவசர அவசரமாகஐஸ்கிரீமை முழுங்கும்குழந்தை போல...,திகட்ட திகட்டஆசை ஆசையாகஅள்ளிப்பருகிக்கொண்டிருக்கிறேன்..இந்த தனிமையை!!!

காதல் கடிதம்

0
ஒவ்வொரு நீண்ட பிரிவினைக்குப் பிறகும் உனக்கு நான் தரும் ஒவ்வொரு முத்தங்களையும் சிவப்பு நிற ஒரு மெயில் பெட்டிக்குள் நான் போடும் அவசர காதல் கடிதமாகவே அதை நினைக்கிறேன் 

படைப்புக்கள்

மேலும்
    error: தயவு செய்து நகல் எடுக்க வேண்டாம் !!