குறிச்சொல்: நீர்மை
விருப்பப் பாடல்
தனிமை ஆட்கொள்ளும்
கருப்பான பிந்தைய இரவுகளில்
என் அத்தனை விருப்பப் பாடல்களும்
நீதான்...
அவள்
காலை தேநீரில் இனிப்பு குறைவு, சீ ஒரு கப் காபி போட தெரியுதா?
காலை சாப்பாடு கொஞ்சம் நேரம் தாமதமாகியது, இன்னும் என்னடி பன்ற?
குழந்தை கீழே விழுந்து விட்டது, புள்ளய ஒழுங்கா பாத்துக்க மாட்டியா?
பகல்...
காதல் கடிதம்
ஒவ்வொரு நீண்ட பிரிவினைக்குப் பிறகும்
உனக்கு நான் தரும் ஒவ்வொரு முத்தங்களையும்
சிவப்பு நிற ஒரு மெயில் பெட்டிக்குள் நான் போடும்
அவசர காதல் கடிதமாகவே அதை நினைக்கிறேன்
நீ என்ற ஒற்றைச்சொல்
நிசப்தமான என் இரவுகளில் மெல்லிய தூரத்து இசை -நீ
இருள் போர்த்தி இருக்கும் என் இரவுகளில் சின்னதாய் மின்னும் தூரத்து நட்சத்திரம் -நீ
தனிமை ஆட்கொள்ளும் என் இரவுகளில் கண்ணீரை தாங்கும் தலையணை -நீ
ஞாபகங்களை மீட்டுத் தரும் என்...
வேறுபாட்டிலும் உடன்பாடு
இது ரசிக்கும் படியாக இல்லை என்று நாம் சொல்லும் ஒரு புகைப்படம் கூட,எங்கோ, யாரோ ஒருவரால் மிகவும் ரசித்து நேசித்து எடுக்கப்பட்ட புகைப்படம் தான்!
அது போல நாம் இயல்பாகவே விரும்பாத பல விடயங்களை...
Management Assistant, Office Assistant, Account Assistant, Project Director, Project Accountant, Engineer,...
Closing Date: 2019-06-10
Source: Dinamina, Daily News (2019.05.08), Amendment : Dinamina (2019.05.13)
Click here to download
Management Assistant (Open) – Northern Provincial Public Service *Closing Date: 2019-06-10...
Closing Date: 2019-06-10
Source: www.np.gov.lk (2019.05.09)
Click here to download
வாழ்ந்திடு மனிதா…
நிறைபொருள்
இல்லை...
நிலையற்ற
இவ்வாழ்வில்...
நிறைவாக
தேடிடு...
நிலையான
உனை மட்டும்...
கவலைகள்
தடையல்ல...
கண்ணீரும்
மருந்தல்ல...
கலங்காமல்
வாழ்ந்திடு...
கரைகள்
சேர்ந்திட...
நேற்றைய
விதிகள் யாவும்...
நாளைய
உரங்கள் ஆகும்...
இன்றே
வென்றிடு...
இனிதொரு
உலகம் செய்திடு...
திருப்பங்கள்
உண்டு
உன் வாழ்விலும்...
பிழைகள்
திருத்தி
நீ வாழ்ந்தால்...
திருந்தி வாழ்ந்திடு...
விரும்பி வாழ்ந்திடு...
வாழ்ந்திடு மனிதா...
வாழ்க்கை
உனக்கானதாகும்...
நாளையும் விடியுமா…??
இரவின் கோரப்பசி
என் தூக்கத்தை
முழுமையாய் விழுங்கி
தேவையற்ற எண்ணங்கள்
பலதை ஏப்பம் விட்டது...
நிலவொளியில்
காய்ந்து கிடக்கும்
எனை கட்டித்தழுவிய
அமைதிக் காற்று
ஆரவாரமற்று
தாலாட்ட
முயற்சித்தும்,
முறையற்ற
எண்ணம் பல
எட்டிப்பார்த்து,
மூடிய விழிகளில்
முழுவதும்
கற்பனையாய்
நாளைய
விடியலில்
நிம்மதி கிட்டுமோ என
மின்னும் உடுவுடன்
ஓசைகளற்ற பேச்சுடன்
மணி முள்ளும்
நிமிட முள்ளும்
போட்டி போட்டு
சுழன் றோட
இன்றும் விடியவில்லை
என்ற ஏக்கத்தோடு
மறு ஒரு நாள்
கழிக்கிறேன்....