29.2 C
Batticaloa
Saturday, November 23, 2024
முகப்பு குறிச்சொற்கள் Iraq

குறிச்சொல்: Iraq

ஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 11

      திக்ரித், சதாம் ஹுசைன் பிறந்த ஊர். இது ஈராக்கின் வடக்குப்பகுதி, எல்லை தாண்டினால் துருக்கி. ஐரோப்பாவை ஒட்டியிருப்பதால் பசுமையாக இருக்கும் இப்பகுதி. நான் தங்கியிருந்த இடத்தில் நிறைய ஆலிவ் மரங்களும் ,பேரீச்சம் மரங்களும்...

ஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 10

சுக்கிரியாவை  தேடிய கமல் திக்ரித் முகாம், நாங்கள் போர்முனையில் இருக்கிறோம் என்பதை மறக்கடிக்கச் செய்திருந்தது. பனிரெண்டு மணி நேரபணியுடன், வாரம் இருநாள் தொலைப்பேசி,பணிமுடிந்ததும் பொழுதுபோக்க தொலைகாட்சி பெட்டியுடன் தனியறை,மேஜை பந்துவிளையாட்டு ,அனைவருக்கும் வாரத்தில் ஒருநாள் கட்டாய ஓய்வு,...

ஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 09

ஸ்டோர் கீப்பராக  புதிய அவதாரம் திக்ரித்திற்கு செல்லும் வண்டியில் நியூசிலாந்து நாட்டைச் சார்ந்த மேலாளர் உட்பட நாங்கள் ஏழுபேர் இருந்தோம். செல்லும் வழியில் பாபிலோன் என்னும் இடத்தில் வண்டி நின்றது.அங்கிருந்த முகாமில் எங்களுக்கான உணவை எடுத்துகொண்டோம்....

ஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 08

திக்ரித்தை நோக்கிப் புறப்பட்டேன் பக்குபாவில் உணவுக்கூடம் துவங்கிய அன்றே,   எங்கள் முகாம் மீது நடத்தப்பட்ட கடுமையான தாக்குதல் அது.   சிறு காயங்கள் பட்ட அனைவருக்கும் முதலுதவி தரப்பட்டது.  கடும்காயங்களுடன் உயிர்தப்பிய முனாவர், எங்கள் நிறுவனத்தின் சாலை போக்குவரத்தின் போதுவரும் ஸ்காட்லாந்து நாட்டைச் சேர்ந்த பாதுகாப்புஅதிகாரி ஒருவர் உட்பட ஆறு பேர் ஆபத்தான நிலையில் குவைத்துக்கு  அவசரமாக அனுப்பி வைக்கபட்டனர் . உணவுக்கூடத்தில் நாற்காலிகள் சிதறிக் கிடந்தன. உணவு பாத்திரங்கள் அனைத்தும் திறந்த நிலையில் அப்படியே இருந்தது.குண்டு வெடித்தபோது சிதறி ஓடியவர்கள் தரையில் படுத்து தப்பியவர்கள் மனத்திரையில் ஓடி மறைந்தனர். நல்ல பசியும் தாகத்துடனும் இருந்தவர்களை அழைத்தேன். மாலை நான்கு  மணிக்கு மேல்,அனைவரும்  அமர்ந்து சாப்பிட்டோம்.  அனைவருக்கும் உடலும், மனமும் களைத்துப் போயிருந்தது. அடுத்து என்ன நடக்கப் போகிறது என்பதிலேயே மனம் சுழன்றுகொண்டிருந்தது. உடனே ரஸ்ஸல் மற்றும் அமெரிக்க அதிகாரி தலைமையில் கூட்டம் ஒன்று நடந்தது. வீரர்களுக்கு இரவுணவு கொடுக்கவேண்டுமென்றனர். பணி செய்வது குறித்த பேச்சை துவங்கியதும்,  பலரும் இனி இங்கே வேலைசெய்ய முடியாது என்றதால் கூட்டம் பாதியிலேயே முடிக்கப்பட்டது.           கனத்த மனதுடனும், பயத்துடனும் இரவில் தூங்கிகொண்டிருந்த போது சப்தம் கேட்டது. என்னுடன் வேலை செய்த...

ஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 07

குண்டு மழை பொழிந்த பக்குபா அடுமனை மற்றும் உணவுக்கூடம் இணைந்த பிரமாண்ட கூடாரம் அமைக்கும் பணி ஒரு மாதத்தில் நிறைவடைந்தது. முகில் கூட்டங்கள் இணைந்திருப்பது போல வெண்ணிறத்தில் நூறு மீட்டர் நீளமும், முப்பது மீட்டர் அகலமும் பனிரெண்டு மீட்டருக்கு...

ஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 06

பக்குபா விமானப்படை முகாமில் தூசி மிகுந்த பக்குபா முகாமில், இரவில் துயின்று காலையில் விழித்தபோதுதான், குவைத்திலிருந்து புறப்பட்டு மூன்று நாள் பயணத்தில் குளிப்பதை முற்றிலும் மறந்துவிட்டிருந்தோம் என்பதை உணர்ந்தோம். எங்களை பாக்தாத்திலிருந்து பக்குபாவிற்கு வழிகாட்டி அழைத்துவந்தவர்...

ஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 05

பாக்தாத்தில் கதிரவன் நன்றாக வெளியே வந்தபின்தான், ராணுவ வாகனங்கள் செல்வதற்கு அணிவகுத்து நின்றன. இங்கிருந்து இரண்டுக்கும் மேற்பட்ட வாகன பாதுகாப்பு தொடரணிகள் சென்றன. வேறுவேறு பகுதிகளுக்குச் செல்லும் வாகனங்கள் உரிய பாதுகாப்புத் தொடரணியில் இணைந்து...

ஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 04

போர்முனையை நோக்கி ஈராக் செல்வதற்கான நாள் நெருங்குகையில் மனம் சதாமின் அரண்மனையை கற்பனை செய்துகொண்டிருந்தது. அப்தலி முகாமில் இருந்தவர்களில் பாதிக்கும்மேற்பட்டவர்கள் ஈராக்கிற்கு செல்ல விரும்பவில்லை. அங்கு செல்ல இருந்தவர்களிடம் எப்போதும் எதிர் மறையாக பேசிக்கொண்டிருந்தனர்....

ஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 03

பாலையில் குறிஞ்சி,முல்லை,மருதம், நெய்தல் என நான்கு வகை நிலங்களையும் தன்னகத்தே கொண்டது எங்கள் கன்னியாகுமரி மாவட்டம். நான் பிறந்து வளர்ந்த மணவாளக்குறிச்சி கிராமம் கடலும்,கடல் சார்ந்த நெய்தல் நிலமாகும். ஐந்தாவது நிலமாகிய பாலையை நான்...

ஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 02

அந்நிய மண்ணில் பாதம் பதித்தேன் நான்கு மணிநேர பயணத்திற்குப் பின் பஹ்ரைன் நாட்டில் விமானம் காலையில் இறங்கியது . பதினோரு மணிநேரதிற்குப் பிறகுதான் அடுத்த விமானம் அங்கிருந்து குவைத்திற்கு. நாங்கள் காத்திருப்பு பகுதிக்குச் செல்லும்...

படைப்புக்கள்

மேலும்
    error: தயவு செய்து நகல் எடுக்க வேண்டாம் !!