குறிச்சொல்: nature
இயற்கை அன்னை
இயற்கை அன்னையின்
பிள்ளைகளே
இதயம் வருடும் புன்னகையே
பச்சை உடுத்தியா அன்னையின்
பாசம் காெண்ட நெஞ்சமே
பரந்து விரிந்த பசுமையில்
பாடும் குயில்களின் கூட்டமே
விதையாய் வந்த அன்னயைே
காற்றாய் தந்தாய் உன்னையே
கருனை காெண்ட உள்ளமே
கடவுள் தந்த செல்வமே
இயற்கை அன்னையின்
உள்ளமே
வெட்டப்பட்ட மரங்கள் பேசினால்…
என் நிழலில் இளைப்பாறஎன்னிடம் தஞ்சம் அடைந்தாய்...
மழைப் பொழியவே என்னை அறிமுகப் படுத்தினாய்என்று இருந்தேன்...
உன் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளவேஎன்னை பலி ஆடாய் வளர்த்தாய் என்று தெரிந்து கொண்டேன்...
என்ன செய்வதுநான் மானிடப்பிறவி இல்லை அல்லவா...ஆதலால் உன்...
இயற்கை
நதியோரம் எனை
வருடிச் சென்ற
இளகிய குளிர்காற்று...
காற்றின் தாளத்தில்
அசைந்தாடி
என் கால்களை
முத்தமிட்ட
அந்த குறும்
அலைகள்...
அடங்கிச் செல்ல
தயாராகும்
மாலை சூரியன்...
அது தடையின்றி
வாரி வழங்கும்
தங்க வெயில்....
அத்தனையும்
மேற்பார்வை
செய்யும்
கார்மேகங்கள்...
அனைத்தும்
என் மனதில்
எதையோ
கள்ளத் தனமாய்
திருடிச்
செல்கின்றன...
ரத்த நாடிகளை
எதையோ புதிதாய்
சமைக்கின்றன...
சுவாசப்பாதையில்
நுழைந்து
சலவை செய்கின்றன...
இதயத்தில்
இறக்கைகளை
பொதித்து
பறக்க விடுகின்றன...
கண்களில்
கண்ணீர்ப் பைகளை
உறைய வைக்கின்றன...
மேனியில் பரவிய
முடிகளை ஆட
வைத்து
மெய் சிலிர்க்க வைக்கின்றன...
நெஞ்சத்து...