குறிச்சொல்: neermai.com
நான் மட்டும் தனியாக
கைகோர்த்து திரிந்த
கடற்கரையில் தனியே
நான் மட்டும் இப்போது...
கடந்த கால நினைவுகள்
எல்லாம் கத்தியாய்
இறங்குது இதயத்தில்...
கண் துடைத்து ஆறுதல்
சொல்ல நீயில்லை...
என் கண்ணீரும் உப்பாக
கடலில் கலக்குது
உன்னாலே ...
இவன்
மகேஸ்வரன்.கோ( மகோ)
கோவை -35
காதல் தரும் வலி…
கண்டதும் ஆயிரம் பட்டாம்பூச்சி
பறந்து பரவசம் கொள்ள செய்யும்
காதல்...
கண்வழி நுழைந்து ,
கனவாய் நிறைந்து
நினைவுகள் எல்லாம் நீடித்து
நித்திரை தொலைக்க செய்யும்
காதல்...
யுகங்களையும் கணமாய் மாற்றி
களித்து இருக்க செய்து , ஈருடல்
ஓருயிராய் நிலைகொள்ளும்
காதல்...
கனவுகள் கண்முழித்து கொள்ள
கை நழுவி போகும்...
கொரோனா டைரீஸ் – “எல்லாம் கடவுள் பாத்துப்பார் ; பூட்டிய கதவின் பின்னிருந்து”
தலைப்பை கண்டு நாத்திகம் என எண்ண வேண்டாம்!!
ஆத்திகதில் உங்கள் தர்கத்தை புகுத்திப்பாருங்கள்.
எப்பொழுதும் போல முடிவு உங்களிடமே!
காலை அலாரம் அடித்தது .. மணி 6.30
கட்டிலில் சம்மணமிட்டு அமர்ந்தவன், செயல்பட மனமின்றி சிந்தித்துக் கொண்டிருந்தேன்.
மனதில் சோர்வு...
” இதயத்தின் ஓசை “
"அனுபவம் சொல்லிதரும் பாடம், ஆயிரம் பள்ளிகளுக்கு சமம்."
"நாம் அழும் போது விதி சிரிக்கிறது, நாம் எழும் போது விதி அழுகிறது."
காதல் கோட்டை
கனவு தேவதையே உன்னை
விரும்புகிறேன் என
சொன்னவனே
உன்னை போல் கவிதை எழுத
தெரியாது
உன் பின்னால் சுற்ற முடியாது
விட்டை விட்டு வர இயலாது
ஆனாலும் நீ இல்லாமல் வாழ
முடியாது
அக்னி சாட்சியாக என்னை
கைப்பிடி
அப்பா அம்மா மனத்தில் இடம்பிடி
என் வாழ்வின் விடியலாய்
வந்துவிடு
வசந்தம் வீசசெய்துவிடு
என்...
அமைதியாய் நான்
அமைதியாய் நான்
மாறிப்போனேன் உன்
வார்த்தைகளின் வலிகளால்...
வாள் கொண்டு வீசும்
வலிதனை உன் வார்த்தைகள்
தரும் என உணர்வாயா???...
உன் போல் பேசும் வழிதனை
தெரியாமல், விழி நிறைந்து
நிற்கிறேன் உண்மையாய்...
இவன்
மகேஸ்வரன்.கோ(மகோ)
கோவை -35
அழகான ஆக்கிரமிப்பு…
உன்னைக் காணும் முன் என் நெஞ்சில் கோட்டை கட்டி என்னை ஆளும் கோமகனாய் உச்சத்தில் வீற்றிருந்தேன் உன் ஓரப் பார்வையால் என் இராஜ்ஜியம் பறித்து உன் காவலனாய் மாற்றி விட்டாய் பெண்ணே...
உன் காதலனாய்...
” முதல் வணக்கம் “
" முதல் வணக்கம் "
" எனை ஈன்ற தாயையும், தனை மறந்து என்னை காத்த தந்தையையும், உன்னை உயர்த்துவேன் என அறிவூட்டிய குருவையும், துணையென நின்று எப்பெழுதும் காக்கும் இறைவனையும் ,
தினம் நினைந்து...
“ஒரு பொம்பளையின் யோகியம்… பாத்தியா???
தேவடிய - இந்த வார்த்தையின் உண்மையான அர்த்தம் நீங்கள் அறிந்திருக்கிவாய்ப்புண்டா??
நான் அறிந்த தமிழ் ஆசிரியர் இதை மாணவர்களுக்கு தெளிவுபடுத்துகையில்..
"சைவத்தின் தேவன் சிவனுக்கும் ; சிவனின் தொண்டர்களுக்கும் தொண்டாற்றும் அடியவர்கள்" என்பதே அதன் பொருள்...
நீயில்லாத நாட்களில்
நீயில்லாத நாட்களில்
நீளும் காலங்கள் எல்லாம்
நீங்கா உன் நினைவுகளுடன் ...
நினைவுகளாய் நிறைந்து என்
நிகழ்காலத்தை கடத்தி
கடந்த காலத்திற்கு அழைத்து
செல்கின்றன உன்னுடனான
என் நினைவுகள் எல்லாம்...
நீ என்னுடன் இருந்து நான்
பயணித்த காலங்கள் மட்டுமே
இன்றும் பசுமையாய் என்
நினைவுகளில் ...
இவன்
மகேஸ்வரன் கோவிந்தன்...