குறிச்சொல்: poem
காதலிப்பது தவறா??
காதல் சிறைக்கூடத்தின்ஆயுள் கைதி நான்யாரும் அறியா இருட்டோடு கரைந்து போகும் என்விழிநீர்த் தடயங்களில்எழுதப்பட்டிருந்தது ஒற்றை வினாகாதலிப்பது தவறா?????
மனம் கிறுக்கிக் கொண்டதுஓராயிரம் பதில்களை...
நீ வீழும் நாள் வரும்..!!!
வேதியல் வினையோ நீ
யார் விட்ட சாபமோ
நீ!!
சுவாசம் கூட
தாழ்ப்பாள் இட்டே
இயற்கையை சுவைக்கிறது..
வேதம் ஓதிய பள்ளியும்
அறிவை வளர்த்த கூடமும்
மூச்சை நசுக்கி முத்திரை
குறுக்கம்
கொல்லுயிரியின் தாக்கம்
யாருமில்லா சாலையும்
கூட்டமில்லா சந்தையும்
தும்மலுக்கே ஓட்டம் பிடிக்கும்
மனிதமும்
ஓ!!!
வீரியம் கொண்ட எதிரியே
உன் கிரீடத்தின் அர்த்தம்
இன்றுதான் புரிந்தது
இருந்தாலும்,
ஒன்றை...
இழந்துவிடாதீர்கள்…!
இழந்துவிடாதீர்கள்...!
தன்மேல் தன்-நம்பிக்கை இழந்து போகும் போதுதான்தற்கொலைகள் உருவாகின்றன....
(தற்)கொலைகள் பல வடிவம்!!!காதல் வயப்பட்ட அவனோ அல்லது அவளோகண்மூடித்தனமான காதலினால்எதை இழப்பதற்கும் துணிந்துவிடுவதுஅதிலொரு வடிவம்...
உயிரை மாய்ப்பதென்பது காதலர் காதல் தேவதையிடம் பெற்றெடுத்த சாபம்!!!
ஒருத்தன் ஒருத்திக்கோ அல்லது...
கெட்டவனின் டயரிக் குறிப்பு
என்னை யாராலும்
புரிந்து கொள்ள முடியாது
என் கோபங்களில்
நியாயம் இல்லாமல் இருக்கலாம்
அதற்காக நான் மட்டுமே
அதெற்கெல்லாம் பொறுப்பாக
அமைந்து விடவும் முடியாது
சில சமயம் என்னை நானே
சந்தேகப்படுவதும் உண்டு
ஏகப்பட்ட மனப்பிறழ்வுகள்
என் நெஞ்சை அரிப்பதும் உண்டு
நில்லாமல் ஓடும் காலத்தில்
நான் செய்து விட்ட...
இயற்கை
நதியோரம் எனை
வருடிச் சென்ற
இளகிய குளிர்காற்று...
காற்றின் தாளத்தில்
அசைந்தாடி
என் கால்களை
முத்தமிட்ட
அந்த குறும்
அலைகள்...
அடங்கிச் செல்ல
தயாராகும்
மாலை சூரியன்...
அது தடையின்றி
வாரி வழங்கும்
தங்க வெயில்....
அத்தனையும்
மேற்பார்வை
செய்யும்
கார்மேகங்கள்...
அனைத்தும்
என் மனதில்
எதையோ
கள்ளத் தனமாய்
திருடிச்
செல்கின்றன...
ரத்த நாடிகளை
எதையோ புதிதாய்
சமைக்கின்றன...
சுவாசப்பாதையில்
நுழைந்து
சலவை செய்கின்றன...
இதயத்தில்
இறக்கைகளை
பொதித்து
பறக்க விடுகின்றன...
கண்களில்
கண்ணீர்ப் பைகளை
உறைய வைக்கின்றன...
மேனியில் பரவிய
முடிகளை ஆட
வைத்து
மெய் சிலிர்க்க வைக்கின்றன...
நெஞ்சத்து...