குறிச்சொல்: Tamil poems
உருகிப்போன என் காதலி
என்னுடன் உரையாடிய என் பேனை என்னோடு உறவாடியது என்-காதலியாக.
வானத்தின் சாயத்தினை களவெடுத்துஉன்-கற்பனையின் கவி வரியை களங்கமில்லாமல் எழுத என்னையும் உருவாக்கினாய் மை கொட்டும் பேனையாக.
முழு நிலவில் வெட்டியெடுத்த வெண் நிற தாளில் நான்...
நிர்ப்பந்தம்
தொலைதூர நடைபயணம்தொடர்ந்தே வரும் நிழல் பாதங்களிடையே சிக்கி மிதிப்பட்டு வந்தாலும் இணைந்தே வர சலிப்பதில்லை..உறங்காமல் உள்ளமெனும்ஆழ்கடல் தன்னில் புதையுண்டுநினைவுகள் எனும் அலைகள்கரைத்தொடுகையில் அவை வலிகள் தர மறப்பதில்லை..என் துடுக்குத்தனங்களும்என்னை விட்டு தூரம் செல்கையில்வண்ணம்...
தனிமையில் ஓர் பெண்ணின் பயணம்
காரிருள் மேகம் போல் நீண்டு படர்ந்திருந்த கூந்தலில்
அழகாய் செருகி இருந்த சிவந்த ரோஜாவின் இதழ்களுக்குள்
இன்னமும் எஞ்சியிருந்த ஈரம் மின்னியது.. பகலவனும் தீண்ட அஞ்சும் அவள் தேகம் போல்..
வேலை ஒன்றின்அதீத ஆர்வத்தில்இணைந்து விட எண்ணிக்...
பெண்ணவள்
மொட்டாய் மலர்ந்து சிட்டாய் திரிந்து அந்த பட்டாம்பூச்சியாய்திரிந்த அவளுக்கு
காதைப் பிளக்கும் கெட்டிமேளச் சத்தம் காதில் வட்டமடிக்ககனவுகள் சிக்கிக் கொண்டன மூன்று முடிச்சுக்குள்....!
நாள் குறித்து மாட்டிய விலங்கு நாள்தோறும் கட்டிப்போடுகிறது நான்கு சுவருக்குள் அவளை...
பெருவிரல் தொட்டு வைத்த திலகம் தீச்சிகையாய் எரிகிறது விளக்கணையும் இரவுகளில்...!
தாளில் இட்ட கையெழுத்தில் மாற்றமடையும்...
தீயாய் நீ….!
தூரத்தில் ஓர் ஈனக்குரல்துரத்துகின்றதே..தூக்கத்தினையும் துடைத்தெறிந்துதுக்கத்தினை பரிசளிக்கின்றதே..துடிதுடிக்க வதைத்த வஞ்சகனைதூக்கிலிட்டாலும் நீ பட்ட துன்பத்துக்கு ஈடாகாதே..எங்கனம் கூறுவேன் உன்னிடத்தில்..எதிர்மறை எண்ணங்களுடன்எம்மத்தியில் உலாவரும் வக்கிரபுத்திக்காரனைஎதிர்த்து நிற்க கற்றுக்கொள்..ஆண் எனும் ஆணவத்துடன்அரிப்பெடுத்து அலையும்அயோக்கியன் அத்துமீறினால்அவன் ஆண் என்ற...
பாரதி
பார் போற்றிடபாரதம் ஈன்றெடுத்தபாட்டுடை தலைவன் நீ..!சாதி துண்டாடிய சமூகத்தின் சகதியில்வேதங்கள் துறந்துவேற்றுமை களைந்தெறியசெந்தமிழ் சுனையாய் மலர்ந்தசெந்தாமரை நீ...!பெண்ணை பேதையாய் பேசபெண்ணுரிமை பேசியவன் நீ..!முத்தமிழ் புலமை மிஞ்சியமுண்டாசு கவிஞன் நீ..!கவியாயிரம் வடித்தகவிதைகளின் காவலன் நீ..!அறம்...
அக்கினிப் பறவை..!
வாழ்கையெனும் மாயநதிவனிதையவள் பயணிக்கிறாள்வழிநெடுகிலே நஞ்சினை கக்கவரிசையாய் வக்கிரம் பிடித்தோர்வரையறை மீறாமல்வழிமுறை தவறாமல் வாழமுனைகையில் வஞ்சனைக்குவடிகால் தேடும் வன்மம் வன்முறை எனும் பெயரிலேவதைக்கப்படுகிறாள் சந்தியிலே..சல்லடையாக்கப்பட்டவளோசாக்கடையிலே வீசப்படுகிறாள்..சதிகார சபல புத்திகாரனைசட்டமதுவும் சாகடிக்காமல்சலசலப்பு அடங்கியதும்சாலையில் நடமாடவிடுகிறது...சற்றுகாலம் சமூகமதுவும்...
வாழ்க்கை
புரிதல் இல்லாபிரிதல்களில் யாரைபிழை சொல்ல...!தூரமாய் நின்றுவேடிக்கை பார்ப்பதை தவிரவேறு வழியேதுமில்லை..!தூதுவிட்டு ஒட்டி விடுகையில்துளிர்த்துவிடுவதில்லைபுரிந்துணர்வு...!தன்னுணர்வு பெற்றுதானாய் தவறையுணர்கையில்தழைக்கிறது நம்பிக்கை..!அடித்தளம் அதிலேஅன்புடன் உருவானால்தோற்பதில்லை வாழ்க்கை..!
அவள்
அந்த கடவுள் உலகிற்காகதந்த வரமாய் அவள்
குழந்தையாக பிறந்து , சிறுமியாக வளர்ந்து ,அற்புதமான மகளாய் தந்தைக்காக எழுந்து , கசக்காத உறவாய் சகோதரங்களுடன் நகர்ந்து....இளையவளுக்குஇன்பமுமூட்டிஅதிகாரம் இல்லாதமக்கையாயும் கொஞ்சம் கொஞ்சி
நாட்கள் கொஞ்சம் கடக்க நல்மாணவியாக ,அங்கே பலருக்கு தோழ் கொடுக்கும் உற்ற தோழியாக , மெல்ல உலகத்தை அறியும் வயதில் பெண்ணாக
வேலை என்று சென்ற போதிலே அனைத்தையும்...
நினைவுகள்
புன்னகை சிந்தும் பொழுதெல்லாம் எங்கோ தவறவிட்ட நேசங்களைஉன்னில் கண்டு கொள்கிறேன் நினைவுகளாக மட்டும்....
அனைத்தையும் பகிரும் தாயாகஅணைத்து கொள்ளும் தந்தையாக அன்பான தமக்கையாகஅழகான தங்கையாக அடங்கி போகும் அண்ணணாக எல்லா வண்ணமாகவும் என் எண்ணம் முழுவதும் நீ நிறைந்திருந்திருந்தாய்.....
ஆனால் இன்று தலைகோதும் காற்றாக இயற்கையூடாக மட்டும் என்னோடு...