29.2 C
Batticaloa
Saturday, December 21, 2024
முகப்பு குறிச்சொற்கள் Thriller story

குறிச்சொல்: thriller story

Shadows of the Deep – Episode 03

0
Story base: It encompasses the elements of mystery, suspense, technology, love, and the journey of the main characters, Alex and Sophia. Their story explores their...

Shadows of the Deep – Episode 02

0
Story base: It encompasses the elements of mystery, suspense, technology, love, and the journey of the main characters, Alex and Sophia. Their story explores their...

Shadows of the Deep – Episode 01

0
Story base: It encompasses the elements of mystery, suspense, technology, love, and the journey of the main characters, Alex and Sophia. Their story explores their...

ஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 33

தாயகம் திரும்பினேன் டிசம்பர் எட்டாம் தேதி காலை மிகுந்த உற்சாகத்துடன் இருந்தேன். அதிகாலை நல்ல குளிர் இருந்தது. சுடுநீரில் குளித்து தயாராகி ஏழு மணிக்கு முன்பே விடுதியின் வரவேற்பறைக்கு வந்துவிட்டேன். பாக்தாத்தின் விடுதியறையில் இருந்த எழு நாட்களும் சற்று சிரமமாகவே இருந்தது. பாக்தாத்தில் விமானம் பிடித்து அம்மான் வழியாக மும்பைக்குச் செல்ல,  எனக்கு மதியம் மூன்று மணிக்கு விமானம்.  விமானச் சீட்டும் , கடவுச்சீட்டும் தந்து அனைவரின் ஆவணங்களும் சரிபார்த்தபின் ஒன்பது மணிக்கு மேல் எங்களை அழைத்துச் சென்றனர். என்னுடன் செல்வராஜ், இரு வெளிநாட்டினர் உட்பட ஆறு பேர் ஊருக்குச் செல்லத் தயாரானோம். எங்களை பாக்தாத் பன்னாட்டு விமான நிலையம் அழைத்துச்செல்ல பாதுகாப்பு வீரர்கள் சிறிய கார்களில் வந்திருந்தனர்.  மூன்று கார்களில் இருவர் வீதம் ஏறிக்கொண்டோம். பாதுகாப்புவீரர்களும், வாகன ஓட்டுனரும் தாடி வளர்த்து, அரபிகளை போன்ற உடையணிந்து மாறு வேஷத்தில் இருந்தனர். பாதுகாப்புக்காக வெள்ளைக்கார வீரர்களின் யுக்தி அது.           காரில் ஏறும் முன் பாதுகாப்பு விசயங்களை எங்களுக்கு விரிவாக விளக்கினர். முன்பு நான் திக்ரித்-பாக்தாத் பயணத்தில் உள்ளதை போன்றே, பாதுகாப்பு வீரரின் அனுமதியின்றி, காரில் இருந்து கீழே இறங்கக் கூடாது.  அவ்வாறு இறங்கவேண்டிய...

ஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 32

பாக்தாத் விடுதியில் ஏழு நாட்கள் எப்போது  நான் இந்தியா செல்வேன் என்ற எந்தத் தகவலுமின்றி பாக்தாத்தின் விடுதியறையில் இருந்தேன். இங்கு வந்த மறுநாள் மாலையில் இந்திய இளைஞர்கள் நிறையப்பேர் வந்தனர். புதிதாக பணிக்குத் தேர்வாகி வந்தவர்கள் அனைவரும் நான் பணிபுரியும்  நிறுவனத்திற்காக...

ஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 31

            திக்ரித் –பாக்தாத் திகில் பயணம் கண்ணிலிருந்து மறைவதுவரை, சதாமின் அரண்மனை முகப்பை நோக்கியிருந்தேன். வண்டியின் முன்பும், பின்பும் பாதுகாப்பு வாகனங்கள் தொடர வண்டி முழு வேகத்துடன் செல்ல ஆரம்பித்த பின்தான் அது ஒரு திகில் பயணம் என்பதை உணர்ந்தேன்....

ஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 30

            விடை கொடுத்த சதாமின் அரண்மனை திக்ரித்திலிருந்து-பாக்தாத் வரை செல்லும் சாலைப் போக்குவரத்து பெரும் ஆபத்து மிகுந்ததாக இருந்ததால் எங்கள் பயணம் தொடர்ந்து தடைபட்டுக்கொண்டே இருந்தது. எனது மானேஜர் ஆலன் குக் என்னைப் பாக்தாத்திற்கு ஹெலிகொப்டரில் அனுப்ப முயற்சி செய்கிறேன்...

ஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 29

காத்திருந்த நாட்கள் என்னுடன் ஊர் செல்லவேண்டிய குழுவில் உண்ணி, பிரான்சிஸ், கில்ராய், பெர்னாண்டோ, சாவியோ உட்பட மொத்தம் ஆறுபேர் இருந்தனர். இரவு பணியிலிருந்த கில்ராயைத் தவிர மற்றவர்கள் விடிந்தால் ஊருக்குச் செல்லும் கனவில் தூங்கிகொண்டிருந்தார்கள். காலை...

ஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 28

        தடைப்பட்ட பயணம் ஈராக் ஆதரவு கிளர்ச்சியாளர்கள் நேப்பாளிகள்  பனிரெண்டுபேரை படுகொலை செய்தபின், வேறு சிலரை பிணையக் கைதிகளாக பிடித்து வைத்திருந்தனர். அதனால் இந்தியர்கள்,  ஈராக்கிற்கு பணிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது.  இந்தத் தகவலை, எங்கள் முகாமின் அறிவிப்பு பலகையில் ஒட்டியிருந்தனர்....

ஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 27

தொடர் போரினால் நலிந்த ஈராக் திக்ரித் சதாமின் பிறந்த ஊர் என்பதால் அங்கு சதாம் ஆதரவாளர்கள் மிக அதிகம். ஆகவே தாக்குதல்களும் அதிகம் என நாங்கள் யூகித்தோம்.  அன்று எங்கள் முகாமை நோக்கி நடந்த உச்சகட்ட தாக்குதல் என்றே சொல்லலாம். இரவு ஒன்பது மணிக்கு பணி முடிந்து குடியிருப்புக்கு வரும் போது தூரத்தில் மிக பிரமாண்டமான பந்துபோல ஒரு தீப்பிழம்பு தெரிந்தது. அடுத்த  சில வினாடியில்  வான் அதிர குண்டு வெடிப்பின் பெரும் சப்தம் செவியைக் கிழித்தது.ஒளியின் வேகம் அதிகம் என்பதை நேரடியாக கண்ட நாள் அது . தொடர்ந்து அடுத்தடுத்து குண்டுகள் வெடிக்கும் சப்தம் எங்களூரின் கோயில் திருவிழாக்களில் தொடர்ந்து வெடிக்கும் கம்பக்கட்டை நினைவுபடுத்தியது.  அன்றைய குண்டு வெடிப்பில் உயிர் தப்பியது நண்பன் கமலஹாசன்.அப்போது தான் இரவு பணி தொடங்கியிருந்ததால் போர்க்லிப்ட்டில் பொருட்களை கொண்டு சென்றுகொண்டிருக்கும்போது, மிக அருகில் நிலம் வெடித்து,தூசியும்,கற்களும் தெறிக்க குண்டு விழும் சப்தம் கேட்டதும், போர்க்லிப்ட்டில் இருந்து குதித்து ஓடி விட்டான். அவன் குதித்தோடிய சில வினாடிக்குப்பின் அங்கேயே குண்டு ஒன்று விழுந்தது. மயிரிழையில் தப்பித்துக்கொண்டான் கமல்.  அனைவரும் விரைந்தோடி பங்கருக்குள் சென்றோம். அன்று  நெடுநேரம் பங்கர் பாதுகாப்பு சுவற்றுக்குள் இருந்தோம். அருகருகே வெடித்ததால் அனைவர் முகத்திலும் பயம் கவ்வியிருந்தது. என்றுமில்லாத பேரமைதி. அன்று பங்கருக்குள் யாரும்,யாருடனும் ஒரு சொல்லும் பேசிக்கொள்ளாமல் வெறித்த விழிகளுடன்,தங்களின் இதயம் ஒலிப்பதை கேட்குமளவுக்கு அமைதி. கமல் காதை பொத்திக்கொண்டே  அமர்ந்திருந்தான். காதுக்குள் பயங்கர ஓசையுடன் அந்த பெரும்சப்தம் கேட்டுக்கொண்டே இருந்தது, கூடவே காது வலியும் அவனுக்கு.             ராணுவ மருத்துவ குழு விரைந்து வந்தது எங்கள் முகாமுக்கு. ஆ  அன்று எங்கள் முகாமை குறிவைத்து நடத்திய மிகப்பெரிய தொடர் தாக்குதல் அது.  ஆனால் விழுந்த  அனைத்து குண்டுகளும்  குடியிருப்புக்கும், உணவுக்கூடத்திற்கும் சில மீட்டர்கள் தள்ளியே...

படைப்புக்கள்

மேலும்
    error: தயவு செய்து நகல் எடுக்க வேண்டாம் !!