கருத்துக்களை சுவைபடச் சொல்லும் காணொளிதாரர்களை கண்டு கொள்வோம்!
உங்களுக்கு பிடித்த விடயங்களை பிறருக்கு சுவாரஷ்யமாய் சுவைபடச் சொல்வதில் திறமையுடையவரா?
உங்களால் குறைந்தது 05 நிமிடத்திற்குள் தெளிவான வீடியோவினை பதிவு செய்ய முடியுமானால் இப்போதே நீர்மை வலைத்தளத்தில் இணைந்திடுங்கள்.
- நீங்கள் எந்த தலைப்பிலும் உங்களது வீடியோக்களை பதவிவேற்ற முடியும். கற்பனைகளுக்கு வரையறை இல்லை.
- உங்களுக்கு பிடித்த கதை, கவிதை, ஆய்வு சம்பவம், அறிவு வழிகாட்டல், அழகு, சமையல் மற்றும் ஆரோக்கிய குறிப்பு என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.
- உங்களது தனித்துவமான திறமையினையோ அல்லது பிறர் திறமையை அழகாக படம்பிடித்துக்காட்டும் இயலுமையுள்ள நபர் எனில் இப்பொழுதே நீர்மை வலைத்தளத்தில் ஓர் படைப்பாளராக பதிவு செய்து உங்கள் வீடியோக்களை பதிவிடுங்கள்.
- சிறந்த மற்றும் அதிக பார்வைகளை உள்ளடக்கிய படைப்புகளுக்கு இலங்கைப்பெறுமதி 10,000 ரூபாவிலான பரிசுகளும் வழங்கப்படும்.
வீடியோ வடிவமும் நிபந்தனைகளும் :
01. உங்களது வீடியோக்கள் அனைத்தும் நீளப்பக்கத்தை அதாவது கிடைப்பக்கத்தை (Horizontal View) அடிப்படையாகக்கொண்டு பதிவு செய்ய வேண்டும்.
02. முக இடையாளத்தினை வெளிப்படுத்த விரும்பாத போட்டியாளர்கள் தங்களது வீடியோவிற்கு பொருத்தமான விளக்கப்படங்கள் இட்டு அனுப்பிவைத்தல் வேண்டும்.
03. 18 வயதிற்கு மேற்பட்ட எவரும் பங்குபற்ற முடியும்.
04. தெளிவான ஒலி அமைப்புடன் வீடியோக்களை பதிவிடல் அவசியம்.
05. நீர்மை வலைத்தளத்தில் ஆரம்பத்தில் பிரசுரித்த படைப்புக்களிற்கும் அந்த படைப்பிற்கு சொந்தமான படைப்பாளர்கள் வீடியோக்களை பதவிட முடியும்.
06. புதிய படைப்பாளர்கள், பங்குபற்ற ஆர்வமுடையவர்கள் முதலில் நீர்மை வலைத்தளத்தில் தங்களுக்கென கணக்கு ஒன்றினை உருவாக்கி வீடியோக்களை பதிவிடல் வேண்டும். இந்த இணைப்பைத் தொடர்ந்து உங்களால் கணக்கினை உருவாக்க முடியும் https://neermai.com/register/
சுவைபட சுவாரஷ்யமாக வீடியோக்களை பதிவிட நீங்கள் தயார் என்றால் உங்கள் காணொளிகளை பதிவேற்றம் செய்ய நாங்கள் தயார்!!!
இப்பொழுதே உங்கள் குறுகிய நேர வீடியோக்களை எங்களோடு பகிர்ந்திடுங்கள். மேலதிக விபரங்களிற்கு +94762660466 இலக்கத்திற்கு நேரடியாகவோ அல்லது வாட்சப் மூலமாகவோ தொடர்பு கொள்ளுங்கள். அதிகமான நபர்களுக்கு பகிர்ந்து அவர்களின் பங்குபற்றலுக்கு உங்கள் ஆதரவினை வழங்கிடுங்கள்…!