29.2 C
Batticaloa
Monday, January 20, 2025

எம்மை பற்றி

Please follow this link to read it in English https://neermai.com/about-us

நீர்மையின் நோக்கம் என்ன?

நீர்மை உங்கள் எண்ணங்களை மக்களிடம் கொண்டு செல்ல உதவும் ஓர் ஊடகம். நீர்மையின் படைப்புகள் அனைத்துமே தழிழ் மொழியில் உள்ளதால் வாசகர்கள் இலகுவாக விளங்கிக் கொள்ள முடியும். நீர்மையின் படைப்பாளர்கள் வாசகர்களின் மொழியிலேயே தங்கள் படைப்புக்களை பதிவிடுகின்றனர். அவர்களின் தனிப்பட்ட எண்ணங்களை கருத்துக்களை ரசனைக்கேற்ற வகையில் பதிவிடுவதால் வாசகர்கள் தங்களுக்கு விருப்பமான ஆக்கங்களை நீர்மையில் பார்வையிட முடியும்.

மேலும், வாசகர்கள் தங்களுக்கு விருப்பமான எழுத்தாளரோடு தொடர்பு ஏற்படுத்திக்கொள்ளவும், அவர்களோடு விவாதிப்பதற்குமான களமாகவும் நீர்மை விளங்குகிறது.

நாங்கள் பல அருமையான படைப்புகளை தமிழ் மொழியிலேயே உங்களுக்கு வாசிக்க தருகிறோம்.

நீர்மை தமிழ் பேசும் மக்களாகிய வாசகர்களையும் தமிழ் மீது ஆர்வம் கொண்ட எழுத்தாளர்களையும் இணைக்கும் ஒரு தளமேயன்றிவேறில்லை!

நீர்மையின் அர்த்தம் என்ன? 

நீர்மை என்பதற்கு பல பொருள்கள் வழங்கப்பட்டாலும்  குறிப்பாக தண்ணீரின் தன்மையை உணர்த்தி நிற்கின்றது. நீரை எப்படி எல்லா மக்களும் நேசிக்கிறார்களோ எவ்வாறு அனைவருக்கும் இனம், மதம், பால் மற்றும் மொழி கடந்து நீர் என்பது அத்தியாவசியமாக, பொதுவானதாக இருக்கின்றதோ அவ்வாறே தமிழ் ஆர்வலர்களாகிய நாங்கள் தமிழ் மொழியை காண்கின்றோம். இதுவே நீர்மையின் காரணப் பெயராகும்..

நீர்மையை யார் இயக்குகிறார்கள்? 

வாசகர்களையும், எழுத்தாளர்களையும் ஒன்றிணைக்கும் இந்த அரிய பணியை இளைஞர்கள் குழு ஒன்று செய்துகொண்டிருக்கிறது.

எந்தெந்த சாதனங்களில் என்னால் நீர்மையை உபயோகிக்க முடியும்? 

இணைய வசதி கொண்ட உங்களது கணினியிலிருந்தோ, மடிக்கணினியிலிருந்தோ, டேப்லெட்டிலிருந்தோ, ஐபேடிலிருந்தோ , ஆண்ட்ராய்ட் போனிலிருந்தோ எழுத்தாளர்களோடும் வாசகர்களோடும் neermai.com மூலம் இணையலாம்.

நீர்மையில் எழுதவோ படிக்கவோ பணம் செலுத்த வேண்டுமா? 

இல்லை. நீர்மையில் எழுத்தாளர்கள் இலவசமாக தங்களது படைப்புகளை பதிப்பித்துக் கொள்ளலாம். அதேபோல் வாசகர்களும் படைப்புகளை இலவசமாகப் படித்துக்கொள்ளலாம்.

நீர்மையில் எவ்வாறு இணையலாம்? 

நீர்மையில் உங்களுக்கு விருப்பமான படைப்புக்களை படிக்க ஆரம்பித்தவுடனேயே நீங்கள் நீர்மையின் வாசகர் ஆகிறீர்கள். எங்கள் தளத்தில் எழுத விரும்பினால், உங்கள் படைப்பை contact@neermai.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு MS WORD UNICODE இல் அனுப்பப்படல் வேண்டும். அத்துடன் வலைத்தளத்தில் பிரசுரிக்கப்பட வேண்டிய உங்களது பெயர் மற்றும் உங்களைப் பற்றிய சிறு அறிமுகத்துடன் அனுப்பினால் உங்கள் ஆக்கங்களை நாங்கள் நீர்மையில் பிரசுரிக்க முடியும்.

இதில் ஏதேனும் சிக்கல்களோ, கேள்விகளோ இருப்பின் எங்களுக்கு மின்னஞ்சல் செய்தால், 24 மணி நேரத்திற்குள் நாங்கள் பதிலளிப்போம்.

நீர்மை வலைத்தளத்தில் விளம்பரங்கள் பிரசுரிக்கப்படுகிறதா?

ஆம். நீர்மை வலைத்தளம் தமிழ் ஆர்வலர்களுக்கான தளம் (online free self publishing portal).

கதைகள், கவிதைகள், கட்டுரைகள் மற்றும் பல படைப்புகளை இலவசமாக வெளியிடவும் படிக்கவும் பயனர்களை நீர்மை வலைத்தளம் அனுமதிக்கிறது.

நீர்மை வலைத்ததளத்தை வடிவமைத்தல், பராமரித்தல், அபிவிருத்தி செய்தல், வருடாந்தம் புதுப்பித்தல் (Domain, Hosting and other services related to web development) மற்றும் வலைத்தளத்தை தொடர்ச்சியாக இயக்கத்தில் வைத்திருத்தல், மேலும் வலைத்தளத்துடன் தொடர்புடைய வேலையாட்களின் கொடுப்பனவுகள் மற்றும் சம்பளங்கள் போன்ற வலைத்தள செயற்பாடுகளின் செலவுகளை விளம்பரதாரர்கள் அல்லது நன்கொடையாளர்கள் மூலம் ஈடு செய்வதன் நோக்கம் கருதியே இங்கு விளம்பரங்கள் பிரசுரிக்கப்படுகின்றன.

வேறு ஏதேனும் கேள்விகள் உள்ளதா?

contact@neermai.com இந்த முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள். கூடிய விரைவில் பதிலளிப்போம் அல்லது இந்த லிங்கை க்ளிக் செய்வதன் மூலம் தொடர்பு கொள்ளலாம்.

error: தயவு செய்து நகல் எடுக்க வேண்டாம் !!
திறக்கவும்
1
உதவி?
வணக்கம்!
எவ்வாறு உங்களுக்கு உதவ வேண்டும்?