தேன்குழல் கீர் (Honey Gheer)

0
1619

தேவையான பொருட்கள்:

களைந்து, உலர்த்தி, அரைத்த பச்சரிசி மாவு – ஒரு கப்

தேங்காய்ப் பால் – ஒரு கப்

வெல்லம் – 150 கிராம்

ஏலக்காய்த்தூள், வறுத்த முந்திரி, திராட்சை – சிறிதளவு

நெய் – ஒரு டீஸ்பூன்

உப்பு – ஒரு சிட்டிகை

நன்மைகள்:  வெல்லம் பயன்படுத்தி செய்ததால், நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு ஏற்ற இனிப்புப் பலகாரம் ஆகும். 

Honey Gheer
Honey Gheer

செய்முறை:

  • அரிசி மாவு, உப்பு, நெய் ஆகியற்றை வெந்நீர் விட்டு முறுக்கு மாவு போல் பிசைந்து, இட்லித் தட்டில் சிறிய சிறிய தேன்குழல்களாக பிழிந்து ஆவியில் வேகவைக்கவும்.
  • வெல்லத்துடன் சிறிதளவு நீர் விட்டுக் கரைத்து, கொதிக்கவிட்டு, வடிகட்டி, தேங்காய்ப் பாலுடன் சேர்த்து கொஞ்சம் சூடாக்கவும்.
  • வேகவைத்த தேன்குழல்களை சூட்டுடன் இதில் போட்டு, ஏலக்காய்த்தூள், வறுத்த முந்திரி, திராட்சை சேர்க்கவும். ஒரு மணி நேரம் கழித்து பரிமாறவும்.
0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments