இஷ்க்

0
748

 

 

 

 

ஓர் ஆழமான கனவிலிருந்து
உங்களை யாரேனும் தட்டி எழுப்புவார்கள்
இந்த இடம் இப்போது வேறொருவருக்குரியது
என நம்மை காலி செய்யச் சொல்வார்கள் 
துயரம் என்பதை மறைத்துக் கொண்டு
புன்னகையுடன் பிரியாவிடை கொடுத்தல் வேண்டும்
முடியுமானால் கடைசியணைப்பு
என்பது போல் தழுவி, கைகுலுக்கி 
நட்புடன் விட்டகல வேண்டும்
உண்மையில்
சகித்துக் கொள்ள முடியாதது எது?
உரக்கச்சொல்ல  முடியாத
பெயர்களை பொருத்த முடியாத நேசங்கள்
எனத் தெரிந்தும்
சேர்ந்திருக்க காரணம் தேடுவதே  

யார்பொருட்டும்
காதலை குறை கூறாதீர்கள்
அது உள்ளத்து அன்பு 
உன்மத்தம்
ஓர் அதீத மயக்கம்
எல்லோராலும் எல்லோருக்காகவும்
பெறவோ கொடுக்கவோ முடியா
பால் வேறுபாடற்ற தாய்மை
அவ்வளவுதான்
சேர்தல் பிரிதல் இறைவன் விதி
நேசித்துத் தொலைதலே
மனிதனின் மிகப்பெரும்  சாபம்

 

 

 

 

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments