உயிர் எழுத்துக்களில் அம்மாவிற்கு ஒரு கவி

0
779

அ-அன்பிற்கு அடையாளம் அவள்
ஆ-ஆனந்தத்தின் இருப்பிடம் அவள்
இ-இன்பம் அளிக்கும் கடவுள் அவள்
ஈ-ஈகை வழங்கிடும் வள்ளல் அவள்


உ-உற்சாகத்துடன் பணியாற்றும் வேலைக்காரி அவள்
ஊ-ஊன்றுகோலாய் குடும்பத்தை காத்திடும் தெய்வம் அவள்
எ-எளிமையின் சிகரம் அவள்
ஏ-ஏக்கத்துடன் மழலைகளுக்காய் வாழ்ந்திடும் தாயும் அவள்
ஐ-ஐயம் நீக்கி தைரியம் தந்திடும் தோழி அவள்
ஒ-ஒற்றை சொல்லால் காரியம் சாதிக்கும் காரியக்காரி அவள்
ஓ-ஓராயிரம் அறிவுரையால் நல்வழிப்படுத்தும் ஆசான் அவள்
ஔ-ஔடதமாய் இருந்து நோய் போக்கும் மருத்துவக்காரி அவள்

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments