எதிர்பார்ப்பு…

0
1157
sunset

என் மனதில் என்றும்
நீயே உள்ளாய்
எப்போது நீ என்னை
தேடி வாராய்

நம் கரம் கோர்த்து
என்றும் ஒன்றாய் நடப்போம்
நீ தான் என் வாழ்க்கையடி


நம் கனவிலே
இதயங்கள் சேர்ந்திட
விடிந்த பின்
நீ என்னை விட்டுப் பிரிய

துயரத்தின் போது
உன்னை நான் எந்தன்
இதய துடிப்பாக கருதினேன்
அது நீயே என்பதால்
என் துயரங்களை மறக்கின்றேன்

நீ இல்லை என்றால் எனக்கிங்கு
இடர் மட்டுமே என்
இன்பங்களும் நீயே தான்

உன்னை எந்தன் 
வாழ்வாக நினைத்தேன்
ஆனால் இன்று
நான் மட்டும் தனித்தேன்
உன் கரம் பிரிந்த பின்
எனக்கில்லை வாழ்வு
இதயங்கள் பிரிந்த பின்
நானோ இனி வெறும்
நடமாடும் சடலம்


என் இதயம் 
அது உன்னிடத்தில்
நான் உன்னுடன்
சேராவிடின் நீ 
உண்மையாய் மூன்றாவது இதயத்துடன்
வாழ்……..

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments