என் தோழி

0
2146

ஏனடி இவ்வளவு தாமதம்

கண்ணிருந்தும் குருடனாய் போனேனடி..
நீ விட்டு சென்ற நொடி முதல்…

வற்றியது கண்ணீர் மட்டுமல்ல..
உன் உறவால் ஊற்றெடுத்த அன்பு அருவியும் தான்…

நான்கு வருடம் சிறை வாசம் நீ எனக்கு தந்தாயெடி..
மூன்று வேளையும் சரியாக உண்டேனோ அறியேன் கண்ணம்மா.. ஆனால் ,
உன் நினைவு இல்லாத நாட்கள்
நிச்சயமாக இல்லையடி…

இரு கரம் ஏந்தி இறைவனிடம்
கேட்டேன் எந்நாளும்…
என்னவள் என்னிடம் மீண்டும்
எப்போது வருவாளென..

ஒரு  துமியளவும் என்னை மறவாத
உன் உள்ளத்தோடு  என்னிடம்
வந்தாயெடி…
உன்னை நினைத்து விழி நனைகையில் துடைத்து விட
உன் கரங்கள் கேட்டேனடி

அருகில் வந்தும் மௌனமாக
நிற்கிறாயெடி அழகியே
ஏனடி இன்னும் தாமதம்…

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments