ஒரு மௌனம் சபித்தால்…

2
2127
facebook_1574057466302

விறகாகிப் போன மரத்தை
வட்டமிட்டுத் தேன்
தேடும் வண்டாய்
காலக் கடத்தல்கள்
தேவைதானா?

இதயத்தை வளைக்கும்
இருள் முடிச்சான
தேவையற்ற உங்கள்
நலன் விசாரிப்புக்களை
விரல்களால் அவிழ்ந்து விட்டு,
காத்திருந்து
எனை வசைபாடுதலும்
நியாயம் தானா?


என் வீட்டு முற்றத்தில்
நட்சத்திரப் புள்ளிமான்
விளையாடும் போது,
கானகத்து நரிகளோடு
காலக் கழிப்பெதற்கு ?

என் சொற்கள்
அக்னியை உரிமைகொள்ளும்
விசமங்களை சேகரிக்காதே,
தொலைவில் தெரியும்
கானல் நீரை உறவாக்கத் துடித்தால்,
மிஞ்சுவது ….
நீக்கப்படுதலும்…!!
தடைசெய்யப்படுதலுமே..!!!

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
2 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Shafiya Cader
Shafiya Cader
4 years ago
இதை மதிப்பிடுங்கள் :
     

Very heart touchable lines