ஒரு வார்த்தை..

2
1488
நீ எதைப் பற்றியேனும் பேசிடு
முள்ளடர்ந்த காடுகளுக்குள்
தவத்தையும் 
என் தனிமையையும் கலைத்திட 
எதைப்பற்றியேனும் பேசிடு
 
அலாதியான விருப்பங்களை உடைத்தெறியும் 
உள்ளிறுகிய உன் பாறைகளுக்கு 
இடுக்கும் இடைவெளியும் 
இல்லை என
சொல்வதற்கேனும் 
எதைப்பற்றியேனும் பேசிடு

நீள் நொடிகளில் 
நிரம்பிய ஞாபகங்களை 
இழுத்துப் பிடித்தோ 
தூரம் தள்ளியோ 
எறிவதற்காகிலும் 
நீ எதைப்பற்றியேனும் பேசிடு
 
எப்போதும் என் கன்னங்கள் பற்றும் கரங்களிலும்
விழி மையிடும் விரல்களிலும் 
இன்னமும் கொஞ்சம் நேசமும் காதலும்
மீதமிருப்பதை சொல்வதற்காகிலும் 
எதைப்பற்றியேனும் பேசிடு
 
பயண வழிகளில் 
ஒழியும் தேவதைகள் பற்றியோ 
தொடரும் சாத்தான்கள் பற்றியோ 
நம்பிக்கை எச்சரிக்கை 
இரண்டில் ஒன்று தருவதற்காகினும் 
எதைப்பற்றியேனும் பேசி விடு

குறைந்தபட்சம்
இன்றோ நாளையோ 
நடக்கப் போகும்
என் மூளைச் சாவினை பொய்ப்பிப்பதற்காகினும்
எழும்பி ஒரு முறையாகிலும்
என்னோடு
நீ எதைப்பற்றியேனும் பேசிடு….
0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
2 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Grecys
Grecys
5 years ago

Superb….

Grecys
Grecys
5 years ago

cader…. Great!