குறட்டையை தடுக்க சில வழிகள்

0
928
நாம் சுவாசிக்கும் காற்றானது மூக்கு, வாய், தொண்டை, மூச்சுக் குழல் வழியாக நுரையீரலுக்குச் செல்கிறது. இந்தப் பாதையில் எங்காவது தடை ஏற்படும்போது குறட்டை வருகிறது.
ஆவி பிடிப்பதன் மூலம் நாசி துவாரங்களில் ஏற்பட்டுள்ள அடைப்பு நீங்கும். இதனால் இரவில் மூச்சு விடுவதில் சிரமம் ஏதும் இருக்காது. யூகலிப்டஸ் எண்ணெயின் நறுமணத்தை தலையணையில் லேசாக தெளித்துவிட்டால், தூங்கும் போது சுவாசிப்பதில் பிரச்சனை இல்லாமல் இருக்கும்.
தூங்கும்போது தலைப் பகுதியை ஓரளவு உயர்த்திக்கொள்ள வேண்டும். மல்லாக்கப் படுக்க வேண்டாம். ஒரு பக்கமாகத் தலையைச் சாய்த்துப் படுக்க வேண்டும். மது, புகைப்பழக்கத்தை நிறுத்த வேண்டும்.
இரவில் படுக்க செல்லும் முன், வெதுவெதுப்பான நீரில் உப்பு கலந்து, வாயில் ஊற்றி சிறிது நேரம் கொப்பளித்தால், குறட்டை விடுவதைத் தவிர்க்கலாம். அதேபோல், 2-3 துளிகள் ஆலிவ் எண்ணெய்யை வாயில் ஊற்றி பருகினால், குறட்டையில் இருந்து விடுபடலாம்.
சூடான நீரில் எலுமிச்சை சாற்றினை சிறிது ஊற்றி, அத்துடன் தேன் கலந்து குடித்து வருவதன் மூலமும், குறட்டை பிரச்சனையைத் தடுக்கலாம். தினமும் இஞ்சி, மிளகு, துளசி மற்றும் ஏலக்காயை நீரில் சேர்த்து கொதிக்க விட்டு, அந்நீரை வடிகட்டி குடித்து வருவதன் மூலமும் குறட்டை பிரச்சனைக்கு தீர்வு காணலாம்ஒருவர் அதிக அளவு மன அழுத்தத்தில் இருந்தால், குறட்டை விடக்கூடும். எனவே மனதை எப்போதும் அமைதியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments