29.2 C
Batticaloa
Friday, February 13, 2026
முகப்பு கவிதைகள் ஏழ்மை மலர் எரிப்பு யாகம் நிறுத்து

மலர் எரிப்பு யாகம் நிறுத்து

2
1344

அம்மாவை ஸ்பரிசித்தே
ஆடுகின்ற மழலைகளாம்
இன்னல்களை காண்பதுவோ?
ஈசன் தந்த சோதனையோ?
உலகத்தின் மாந்தர் பலர்
ஊளையிடும் நாய்களன்றோ?

எப்பாவம் அறிவார் இவர்
ஏன் இந்த அவலங்கள்
ஐயம் தீரக் கற்றோதி
ஒய்யாரமாய் உடுப்புடுத்தி
ஓடி விளையாடும் மலர்களுக்கு
ஔடதமாய் ஆகிடுவீர்!
ஓர் வழியைக் காட்டிடுவீர்!
ஒருபோதும் வேண்டாம் சிறுவர் யாசகம்
ஐயகோ ஏன் இந்த துர்ப் பிரயோகம்
ஏடு தூக்கும் கைகளடா
எதற்கு? அதில் திருவோடு
ஊனுருக்கி வேலை செய்ய
உனக்கு என்ன குறைபாடு?
ஈட்டிக்கொட்ட பாவம் போதும்
இனி ஒரு விதி செய்வோம்
ஆதரிப்போம் சிறுவர் தம்மை
அணி திரண்டு செல்வோம்.

சின்னஞ்சிறு மலர்களை சிதையாது காத்திடுவோம்…

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
2 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Kasthury Sothinathan
Kasthury Sothinathan
5 years ago
இதை மதிப்பிடுங்கள் :
     

Very nice poem
Congratulations vanchimarawan

error: தயவு செய்து நகல் எடுக்க வேண்டாம் !!
2
0
Would love your thoughts, please comment.x
()
x
Enable Notifications OK No thanks