மின்மினி

0
647
405b6c4ea7c73de8f4492b52b0e2e8e0-89a06cfb

 

 

 

இந்த உலகம் எவ்வளவு பரந்து
விரிந்தது என்றும்
விசாலமானது என்றும்
அழகானது என்றும்
மின்மினி எப்போதும் எனக்கு
சொல்லிக் கொண்டிருக்கிறாள்
ஒவ்வொரு உதயத்திலும்
காபியை விடவும்
அவளின் வாசனை என்னை கலைக்கிறது
அலைகள் என் காதுக்கு தொலைவில் கேட்கும் போதெல்லாம்
அவள் கொலுசு என் கண்களுக்கருகில் வந்து போகிறது
வானமும் பூமியும்
பிரிந்து கிடக்கும் போதுதான்
ரசிக்கத்தோன்றுகிறது
தேடல் தோன்றுகிறது
மின்மினி
உன்னை நான் அறியத்தவமிருக்கிறேன்

நீ அறிந்த உலகத்திற்கு என்னையும் கூட்டிச்செல்லேன்
உன் குண்டுக் கன்னங்களின்
குழி மடிப்பில் என்னைக் கொஞ்சம் தொலையச் செய்யேன்
‘பூ’ எனச் சொல்லி
கைவிரித்து என்னை கட்டிக்கொள்ளேன்
நான் தொலைத்த பால்யத்தின்
நினைவுகளை உன்னோடு சேர்த்து
மீண்டும் என்னை கடக்க வைத்திடேன்
கொஞ்சமாய் கொஞ்சம் கொஞ்சமாய்
கை இடுக்கில்
அள்ளிய மணலாய் நழுவிக் கொண்டிருக்கும்
இந்த வாழ்க்கையை
உன் அன்பின் ஆதாரங்களில் அர்த்தமாக்கிடேன்

அன்பு முத்தங்களுடன்
உன்னை காணவேண்டும் கொஞ்சவேண்டும் எனத்தவிக்கும்
தூரம் வாழ் உன் அப்பா

(தன் குழந்தைகளைப் பிரிந்து தொலைதூரங்களில் வாழும் தந்தையர்களுக்கு )

 

 

 

 

 

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments