வாழ்க்கை நமக்கு தந்த விடுகதை

1
608
balance_questions_300_nwm (1)-881c3f0e

கேள்விகளால் நிறைந்தது தான்
இந்த உலகம் …
உலகமே இப்படியிருக்க
நம் வாழ்க்கை மட்டும்
என்ன விதிவிலக்கா ???…

நம்மை சுற்றி ஆயிரம்
கேள்விகள் …
நமக்குள்ளும் ஆயிரம்
கேள்விகள் …

அந்த ஆயிரத்தில் பதில் சொல்ல
வேண்டிய கேள்வியையும் ,
பதில் வேண்டிய கேள்வியையும்
கண்டறிந்து களிப்புடன் கடந்து
செல்வதே வாழ்வின் புத்திசாலித்தனம் …

ஆனால் அத்தனை கேள்விக்கும்
பதில் சொல்லியும் , பதில் தேடியும்
தொலைந்து துயரமாய் முடிவதே
வாழ்வின் மாபெரும் பரிதாபம் …

“ஆயிரத்தில் ஒன்றை எடுத்தால்
மற்றவை எல்லாம் பூஜ்ஜியமே ”
புரிந்தவர்க்கு புரியட்டும் என வாழ்க்கை
நமக்கு தந்த விடுகதை இது …

இவன்
மகேஸ்வரன் கோவிந்தன் (மகோ)
கோவை-35

5 1 vote
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
1 கருத்து
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
இராகு.அரங்க.இரவிச்சந்திரன்
2 years ago
இதை மதிப்பிடுங்கள் :
     

என் பெயர்.இராகு.அரங்க.இரவிச்சந்திரன் நான் கோலார் தங்கவயல் கருநாடகம் மாநிலத்தை சேர்ந்தவன் .கவிதை.கட்டுரைகள் மற்றும் தமிழின் வரலாற்று சிறுகதைகள் இணையதளத்தில் எழுதிவருகிறேன்
நீர்மை இணையதளத்தில் பதிவு செய்ய விரும்புகிறேன்.