அண்ணன்

0
447

அண்ணா…
எங்கே இருக்கிறாய்..?

பார்த்துப் பேசி மூஇராண்டு
ஆண்டுகள் சென்றன..
நலமாக இருக்கிறாயா..?

சொர்க்கம் உமது இருப்பிடம்?
தங்கை,தாய் தந்தை நலமாக
நீங்கள் இருக்கின்றாயா.?

உற்றாருக்கு நல்லவனாயிற்றே
எங்களை விட்டு இருப்பாயா.!?

உமது பாசம் நேசமும்
எதையும் மறக்க முடியவில்லை
அண்ணா…

தாய்தந்தைக்குப் பின் நீ யென்றுயிருந்தேன்
தரணியிலிருந்து விண்ணில் விரைந்தாய்

இளமையில் உங்கள் தோலில் சுமந்து
இனிமையாய் மகிழ்விப்பாய்
இல்லறத்தில் இனியவரே!
இதயத்தில் நீ இருக்க
இல்லறத்தில் முதல்வரே!
இனி பாசத்தின் செல்வந்தர்!
இடைவிடா நேசிப்பு செழிப்புடன்யிருக்க
இளங்கதிரே! உறுதியாய் நின்ற பாசம்
இறுதிவரை ஒளியாய் திகழ்கின்றதே!

ஆஜ்மீர் இருந்து வருகின்றேன் யென
அறிந்தால் நீர்யென்னை காண
துடித்துப் போகும் இரண்டு மணி முன்பே
அரியர் இரயில் நிலயத்தில் காத்திருக்க, உன்னை ஆவலுடன் காண
உள்ளத்தில் மகிழ்ந்த நிகழ்வு இனி வருமே!

இவ்வுலகில் நினைவிழந்து நீ வாழ்ந்த
இனிய நாட்கள்

உன்னுடன் நீ உலகை
பிரிந்த அந்த கொடிய நாள்

முகம் காண இப்பிறவியில்
இயலாமல் போனது
நான் உருண்டு புரண்ட
இல்லத்தில் மயானக் காடானதே!

உனது நினைவுகள் மட்டுமே
நிறைந்து கிடக்கும் இல்லத்தில்

எதையும் மறக்க
முடியவில்லை அண்ணா..!

ஊமையின் கனவுகளாய்
அத்தனையும் என் நினைவுகளில்..

சிலமுறை காற்றோடு
தேடித் பார்க்கிறேன்
கைகளுக்கு அகப்படு வாயென..!

அந்த கொடிய நிகழ்வு
நமது வாழ்க்கையின்
திசைகளை
திருப்பிப் போட்டது…

அது ஆயிரம் விடயங்களை
எனக்கு கற்றும் கொடுத்தது..

வாழ்க்கையில் இத்தனை
மணிப் பொழுதுகள்
எதற்காகவும் என் கண்ணீர்
துளிகள் கரைந்ததாய்
எனக்கு நினைவுகள் இல்லை..

இருந்தும்…

ஆனால்,
நீ என்னைப் பார்க்கமுடியவில்லை
நான் உன்னோடு பேசமுடியவில்லை

இவ்வுலகில்..
தாங்க முடியாத வலிகளில் ஒன்று..,
உயிராய் நேசிப்பவரின் உயிர் பிரிவது…

அந்த கொடிய வலியையும்
எனக்குக் கொடுத்து விட்டாய்..!

உன்னை…
இந்த மண் எடுத்துக்கொண்ட நாளில்
இயன்ற பாசத்தை உதரிச்சன்றாய்,

இன்று நீ இல்லை
நான் ஒரு தனிமரமே..

உன்னோடு வாழ்ந்த வீட்டில்..,
இன்றும் பாசம்…நிழலாகப் போனது.
உன்னைப் பிரிந்த நாட்களில்
உண்மையை மறைக்கப்
பழகிக் கொண்டேன்..

என்னைத் தவிக்க விட்டுப் போனாய்
நிரந்தரமாகப் பிரிவைக் கொடுத்து
விட்டோம் என்று – நீ
நினைத்துக் கொள்ளாதே

என் நாடித் துடிப்பின்
கடைசி நொடிப் பொழுதும்
உன் நினைவுகளில் நானிருப்பேன்
என் நிழலிலும் நீ இருப்பாய்

மறுபிறவி உண்டியென்றால்
உண்மையானால்..,

மீண்டும்..
அதே வயிற்றில்
மீண்டும் பிறப்போம்

தம்பி
இராகு.அரங்.இரவிச்சத்திரன்

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments