அப்பா….

0
650

 

 

 

 

 

 

அன்பும் அறிவும் 
      அழகாய் கலந்து 
அரவணைப்பு  எனும் 
      அணைப்பும் தந்து 
அதிசயமாய் கிடைத்த 
       அற்புதம் அப்பா 
 
ஆசைகள் தவிர்த்து 
      ஆடம்பரம் அகற்றி
அழு குரல் கேட்டவுடன்
      அதிகமாய் துடித்துவிடும்
அழகான நேசம் அப்பா
 
அரும்பும் மௌனங்களின்
      மொழி மெல்ல அறிந்து
ததும்பும் கண்ணீரின்
       காயங்கள் தனையகற்ற 
அற்புதமாய் கிடைத்த 
        ஓர் அதிசயம் அப்பா
 
அதிகமாய் பாசங்கள் 
    தூரலாய் சில கோபங்கள்  
அனைத்திலும் என்றும்
     அன்பின் சொற்பதம் நீ அப்பா 
 
பத்துமாதம் சுமந்த தாயை 
     பக்குவமாய் தான் சுமந்து 
பரிதவிக்கும் அவன் அன்பு 
     பலதாய்களிடமும் தோற்கிறது
 
இத்தனைக்கும் மேலேயும்
    எழுத உண்டு பல வரிகள் 
இருந்தபோதும் முடிந்துவிடும் 
     வரிகளினுள் காலங்களாய்
 
அவன்மேல் நான் கொண்ட 
      அழகிய அந்த பாசங்கள்
இடைவிடாத இம்சைகளாய்
       தொடரவேண்டும்
             எப்பொழுதும்……
 

 

 

 

 

 

 

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments