அப்பா

1
748

 

 

 

 

நெஞ்சில் சுமந்து உள்ளன்பை கொட்டி
பக்குவாமாய் எம்மை பாதுகாத்த உறவே
அழும் போது துடித்திடும் உள்ளம் உனதே
அழாதே என சமாதனம் செய்யும் அன்பு உனதே

பட்டினியால் தான் இருந்தாலும்
தன் குழந்தை பசிதீர்க்க
கண்ணுக்கு எட்டாத தூரம் சென்றாவது
பணிபுரிந்திடும் கடமை உணர்வே
இரவு பகல் என முப்பொழுதும்
எமக்கென்று அர்ப்பணித்த உயிரே

நீ தந்த உயிரும் உடலும் உள்ளவரை
உன் தோள்களில் விளையாடி
உன் கன்னங்கள் கிள்ளி
உன் முகம் கண்டு சிவக்கும் என் உணர்வுகள்
என்றும் அப்பா என்று உன்னை தேடும்

தைரியம் தந்து தேத்திடும் உன் பேச்சு
நீதானே அப்பா என் மூச்சு
உன் விரல் பிடித்து வீரமாய் நடந்திடும்
என் சின்ன உலகில் ஆதவன் நீதான்
நிலையான உறவும் நீதான்
என் மனதை விட்டு அகலாத மாகானும்
நீதான் அப்பா…

உன் பிரிவை மட்டும் இறைவன் எனக்கு
அளித்திட கூடாதென இறைவனுக்கும்
கட்டளை இடுவேன் அப்பா
நீ வேண்டும் என் பயணத்தின் ஆணிவேராய்
என் அருகில் எப்போதும் 

 

 

 

 

5 1 vote
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
1 கருத்து
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
அழகராஜ் பிரசாந்
அழகராஜ் பிரசாந்
4 years ago
இதை மதிப்பிடுங்கள் :
     

👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌❤