ரசிக்கிறேன் ரசனையில் மயங்குகிறேன்
ரகசியம் வைப்பதற்குப் பொருள் அல்ல
ராகத்தை அமையப் பல்லவி தேடுகிறேன்
உன்னில் பாவனைகளில் அணிகளைச்
சேர்கிறேன்.சோர்வு அடையவில்லை!
வழியில் நடந்து செல்கிறேன் இயற்கை எழில் கண்டுவியந்து களிக்கிறேன்!
என் இதயம் விண்ணில் மிதக்கிறது
விடை தேடி அலையும் பொழுது
என் நிழலைத் துணைக்கு அழைக்கிறேன்
காடெல்லாம் கடந்து சென்று பார்க்கிறேன்
காலத்தின் கருத்தினை மனதில் பதிந்தன
மெல்லிய காற்றினை தவழபோதும்
தன்னை மறந்து போனேன் இவ்வுலகில்!
மனம் மறந்து நடக்கும் பொழுது பல
உண்மைகளை உணர்கிறேன்.
பயன்பெறும் சாற்றினை பெறும்பொழுது
பணிவுவான அமைதி பிறந்தது.
காலத்தைக் கடக்கத் தூது விட்டேன்
தொலைந்து போன ரகசியம்
மீண்டும் மீண்டும் நினைவிகள்
நிலை தடுமாற்றம் மானிடவியல்
உறவுகள் ஆய்வுகள் காணும் பொது
உடைமைகள் உணர்வுகள் இழப்பின் கதை
கடந்து வந்த பாதையின் துன்பங்கள்
அர்த்தமில்லாத புதிர்கள் மானிட வாழ்வில்
பிறப்பின் சம்பவங்கள் நடந்தாலும்
இறப்பின் அத்தியாயம் சரித்திரங்கள்
நிகழ்வுகள் அர்த்தமில்லாத புதர்களாகின்றது! இனி உணர்வின் ரகசியம் அவசியம் தெளிவாகும்
உண்மையின் உணர்வுகள் உருகும்
உள்ளத்தின் வங்கி உடையாத
ரகசியம் உள்ளத்தின் ராகங்கள்
தளங்கள் தனிஒசைதளர்ந்த போகும் தன்னை மறக்க செய்கின்றன!