அறுவடைக்கு நானெங்கே கதிரறுப்பேன்?

0
487
In

சினமுற்ற சூரியன் கருவுற்று
செம்பாலை யொன்றைப் பிரசவிக்க
அக்னித் தென்றல் வீசுதடி
ஏர்பிடித்து நானெங்கே நிலமுழுவுவேன்

சூட்டிலே வயல்மேனி வெடித்து
வியர்வைக் குருதி கசிய
நிலமடியில் துமிகூட இல்லையடி
சேனைக்கு நானெங்கே நீர்பாய்ச்சுவேன்


விதைநெல் முளை முடங்கி
விதைக்குள்ளே மலடியாக
வேறெவளோ உண்டானால்
அறுவடைக்கு நானெங்கே கதிரறுப்பேன்

அனலெல்லாம் சுகத் தென்றலாய்
ஆறுதலுக்கு அள்ளிவீசி நகர
ஒரு மரநிழலும் இல்லையடி
உடல் போர்த்தி நானெங்கே ஓய்வெடுப்பேன்

ரீங்கார இசையறுவி பாடியதில்
மீனினங்கள் துள்ளிக்குதித்து ஓடி
இற்றைக்கு வெகுநாளானதடி
தாகத்திற்கு நானெங்கே நா நனைப்பேன்


கண்குளிர கருமுகிழ் வானை
காலசகாயன் சுழன்றினி
காண்பிக்க மாட்டானடி
கையெடுத்து கும்பிட நானெங்கே கடவுள் பிடிப்பேன்

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments