“அவள் கடைக்கண் பார்வையின் கடைசி நிமிடம் அது…..”

0
1888
4

அவன் இதயதுடிப்பின் லப்டப்…… ஓசை அன்று வேகமாக இருந்தது. ஆம்!….. அவனுக்கும் ஆச்சரியமாகத்தான் இருந்தது. உடல் நலம் சீராக இருந்தும் கடைசி நேரத்தில் கடவுள் கைவிட்டதை போல்…….. கவின் கல்லூரியின் இறுதியாண்டில் படித்துக் கொண்டிருந்தான். இதுவரையில் காதல் என்ற இலக்கணமோ, இலக்கியமோ தெரியாதவன். எந்த பெண்னும் தன்னுடன் பேசினாவலும் கூட தலைநிமிர்ந்து பார்க்காத தத்துவஞானி.  ஆம்!….. அவன் தத்துவஞானியேதான்…. காதல் என்பது தற்போது தனக்கு வராது என்றும் கல்யாணம் செய்பவளையே காதலிப்பதாகவும் தத்துவம் கூறிக்கொள்வான். ஆனால்……………. அது வேண்டுமானாலும் நடக்கலாம் அது விதியின் சித்தம் என்பதனை உணராமலே கவீன் இருந்தான்.


அவனது நண்பர்கள் “கவீன் விதி என்னவோ அதுதான் நடக்கும் ” என்று அடிக்கடி சொல்வார்கள். அதற்கு விதியின் மேல் தனக்கு நம்பிக்கை இல்லை. நான் என்னை மட்டுமே நம்புகிறேன் என்றான் கவீன். இனிமேல் இதைபற்றி இவனிடம் கூறினால் வீண். கட்டாயம் இவனுக்கும் புயல் வரும், அது இதயத்தினுள் என்றனர் அவனது நண்பர்கள். நாட்களும் நகர்ந்து கொண்டு சென்றன. கவீன் அமைதியாகவே வகுப்பறையில் காணப்படுவதால் அவனை யாரும் கண்டு கொள்ளவில்லை. சேர் வகுப்பில் கேள்வி கேட்டாலும் கூட மௌனமாகவே இருப்பான். ஆனால்  பெண்களுக்கோ படிக்கும் ஆண்களையும், திறமை, வீரம், அழகு கொண்டவனை ரொம்ப ரொம்ப பிடிக்கும்.  கவீனிடமோ இதில் எதுவும் இருக்கவில்லை.  கருப்பாகவும், அசிங்கமாகவும் கவீன் இருந்தான். இப்படி இருந்தும் கூட தங்களுடன் கவீன்  பேசாமல் இருப்பது “திமிரு ” என பெண் பிள்ளைகள் நிணைத்து கொண்டனர் .  அத்தனை பெண்களும் அவ்வாறு நினைத்துக் கொள்ள அதில் ஒருத்திக்கு மட்டும் அவன் விசித்திரமாகவும், வித்தியாசமாகவும் தெரிந்தான்.

அவள் பெயர் தான் “சாளினி ” ம்ம்ம்….. அவளை பற்றி சொல்ல போனால்… ” நல்ல அழகாகவும், படிப்பில் கெட்டிக்காரியாகவும், சுட்டித்தனமாகவும், எல்லோரிடமும் சகஜமாக  பழகுபவளாகவும் , மோடலாகவும் இருப்பாள்.  அவள் கல்லூரியில் சேர்ந்ததிலிருந்து மூன்று வருடங்கள் பூர்த்தியாகின்ற நிலையில் தன்னுடன் படிக்கும் பிள்ளைகள், பெடியன்கள் எல்லோரும் அவளிடம் பேசினார்கள். அவள் அத்தனை அழகாக இருந்தும் அதனை திமிராக காட்டிக் கொள்ளாமல் மிகவும் சந்தோசமாகவும் எவ்வித திருப்பு முனையும் இல்லாமல் கல்லூரியில் மகிழ்சியாகவே கற்றாள்…..

கல்லூரியில் அன்று முக்கிய விரைவுரை. அதனை கற்பிக்கும் சேர் மிகவும் கோபக்காரர்.  அவர் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லாவிட்டால் கடுமையாக கடிந்து பேசுவார்.  ஆம்.. ” வகுப்பிற்குள்  சேர் வந்து பாடம் ஆரம்பிக்கப்பட்டது…. நடுவில் எல்லோரிடமும் வரிசையாக கேள்வி கேட்கப்பட்டது. திடிரென…….
“கவீன் நீ சொல்லும்” என்றார்.
“என்ன சொல்வது என்று தெரியாது மௌனமாக எழுந்து நின்றான்..”                                                         

உடனே….                                                                                                                                                                      “உனக்கு ஒன்றும் தெரியாது! நீ எதற்கு இங்க எல்லாம் படிக்க வாரது… வீட்டில இருந்து படிச்சித்து வகுப்புக்கு வரனும்? கெட் அவ்ட் ப்ரம் மை க்ளாஸ் நவ்” என்றார்.

ஒன்றும் பேசாமலேயே வகுப்பை விட்டு வெளியில் சென்றான்.  இதையெல்லாம் சாளினி கவணித்துக் கொண்டிருந்தாள். ” ஒரு நாளைக்கு ஆன்ஸர் சொல்லாட்டி பரவாயில்ல. ஒவ்வொரு தடவையும் இப்படிதானே இருக்குறான் என மனதிற்குள் நினைத்துக் கொண்டிருந்தாள். இத்தனை நாளாக கவீனை பற்றி சிறிதும் பொருட்படுத்தாதவள் திடிரென்று அவள் மனம் அவனுக்காய் வருத்தப்பட்டது.  வகுப்பு  எப்போது முடியும் என காத்திருந்தாள். வகுப்பில் அவள் இருந்தாலும் அவள் மனம் அவனைப் பற்றியே நினணத்துக் கொண்டிருந்தது. எப்படியோ வகுப்பு முடிந்தது. வகுப்பு முடிவடைந்த அடுத்த நொடிகளில் அவசரமாக வகுப்பறையை விட்டு வெளியில் சென்று,

“கவீன்!….”

என்னாச்சு… எதற்கு வகுப்பறையில் கேள்வி கேட்டா பதில் சொல்லாமல் இருக்கிறாயே! உனக்கு ஏதாச்சும் பிரச்சினையா?……… என்று சாளினி கேட்க,

“இல்லை” என்றான் கவீன்.

“ஓகே” என்று சொல்லி விட்டு சாளினி சென்றுவிட்டாள்…. சாளினி யாரிடமும் பேசினாலும் அவர்களின் கண்களைப் பார்த்து பேசுவாள். அன்று கவீனிடம் பேசும் போதும் கண்னை பார்த்தே பேசினாள். அவன் கண்களிலிருந்த சோகம் சாளினியின் மனதில் பதிந்து கொண்டது. இவ்வாறு இன்றைய நாள் கடந்து செல்ல, மறுநாள் காலை கல்லூரிக்கு சாளினி வந்திருந்தாள்.  அப்போது,
“ஹாய்”…. என்றான் கவீன்… சற்றும் எதிர்பார்காதவள் ம்ம்ம்….. என்றாள்.. கவீன் தானாகவே வந்து பேசிய ஆச்சரியத்தில் அவளால் வேறேதுவும் பேசமுடியவில்லை. பின்….
“சாப்பிட்டதா?”என கேட்க அவளும் அவனுடன் சிறிது நேரம் கதைத்துகொண்டு இருந்தவர்கள் மிகவும் நெருக்கமாகி விட்டார்கள். அதற்கு பின்பு… கவீன் அவளுடன் நேரிலும், போனிலும் பேசிக்கொள்வார்கள். கவீன் கல்லூரியின் விடுதியில் தங்கியிருப்பதால் அவனுடைய பிரன்ட்ஸ்க்கு அவன் கதைப்பது தெரியவர “”என்னடா யார் கூட” என்று கேட்க , “இல்லடா பிரண்ட்ஸ் கூட என்றான். தத்துவஞானி போல ஏற்கனவே தத்துவம் சொல்லியதால் எதுவும் அவனால் அப்போது வெளிப்படையாக சொல்ல முடியவில்லை. என்னதான் தன் நண்பர்களிடம் அவளை பிரண்ட் என்று சொன்னாலும் அவனால் அவளை பிரண்ட்டாக நிணைக்க முடியவில்லை.


வகுப்பில் இவர்கள் தங்களை நெருக்கமாக காட்டிக் கொள்ளாவிட்டாலும் அவன் மனதில் சாளினி மிக நெருக்கமாகவே இருந்தாள். ஆனால் அவள் மனதில் என்ன இருக்குறது என்பதனை அவளை தவிர அவனாலும், மற்றவர்களாலும் கூட புரிந்து கொள்ள முடியவில்லை. கவீனால் அவளிடம்  காதலை சொல்லாமல் இருக்கவும் முடியவில்லை. உண்மைதான்……… சாளியினுடன் கதைத்து கொஞ்ச நாட்களுக்குள்  அவளை அவன் காதலிக்க ஆரம்பித்து விட்டான். அவளும் கவினுடன் ரொம்ப அன்பாக இருந்தாள்.  ஒருநாள்…… கல்லூரி விடுமுறை என்பதால் கவீன் வெளியூருக்கு வேலைக்கு சென்றிருந்தான். அங்கிருந்துதான் அன்று இரவு மெசேஜில் கதைத்தான்….

“நான் ஒன்று சொல்லுவன் கோபிக்க கூடாது”

“சொல்லூடா”

“இல்ல பயமாயிருக்கு”

“எதுக்குடா பயப்படுறாய் சொல்லு”

“ஐ லவ் யூ”

திடிரென்று ஐ லவ் யூ என்று கவீன் சொல்ல சற்றும் சாளினி இதை எதிர்பார்கவில்லை. என்ன சொல்வது என்று தெரியாமல் இருந்தாள்… பின்…,


“இதை நேரிலே சொல்லு: நாம பிரண்ட்ஸ் ஓகே!  என்றாள்..  அதற்கு,

“இல்லை என்ன பிடிக்கலையா! நீ இப்ப ஓகே சொல்லாட்டி நான் சாாப்பிட மாட்டன் என்று கவீன் அடம் பிடித்தான்.
“புரிஞ்சுகோடா”என்றாள் சாளினி.

கவீன் மீண்டும் மீண்டும் அடம் பிடித்ததால் வேறுவழியின்றி அவன் காதலுக்கு சம்மதம் தெரிவித்தவள், நீ இப்போதே சாப்பிட வேண்டும் என்றாள் சாளினி …. மெசேஜில் இருவரும் பேசிமுடித்தனர். அதன்பின் சாளினி யோசித்தாள். தான் கவீன் சாப்பிட வேண்டும் என்றதற்காகவே ஓகே சொன்னதா! தனக்குள் காதல் இருக்கிறதா ?  என யோசித்தாள்.  ஆனால் தான் சொன்ன காதல் சம்மதத்தினால் நாளை சண்டை வரும் என அவள் உணரவில்லை. ஆம்!….. அன்று இரவு அவனுக்கு பதில் அனுப்பிவிட்டு யோசித்தவாறே தூங்கிவிட்டாள். மறுநாள் காலை அவன் போனில் இருந்து மெசேஜ் வந்தது.

“நீ இன்னொருத்தன லவ் பன்னுனதா?”

சாளினி இதை பார்த்து விட்டு ஒன்றும் புரியாததனால்

“யார லவ் பன்னது?” என பதிலனுப்பினாள்…

“உனக்கு தெரியாதா?” இது எனக்கு தெரிஞ்சிருந்தா நான் உனக்கு ஐ லவ் யூ சொல்லிருக்க மாட்டனே. நீ ஏன் சொல்லாம மறைத்தாய்?”  என்றான் கவீன். இவ்வாறு மேசேஜ் வர  அவளால் இதற்கு என்ன பதில் சொல்ல முடியும்?


சாளினியை எல்லோரும் விரும்பினார்கள் . அதில் அவளை காதலிப்பதாக அவளிடம் வந்து சொன்னனர், சாளினிக்கு அப்போது காதல் என்றால் என்ன என்று தெரியாது. அதுமட்டுமல்லாமல் அவளுக்கு அவர்கள் மேல் விருப்பம் இல்லை. அதனால் “வேண்டாம்” என்று சொல்லி விட்டாள். ஆனால் அவளை காதலித்தவனில் ஒருத்தன் தன் காதலை ஏற்குமாறு மிரட்டினான். ” மிரட்டினால் காதல் வருமா! மனதினுள் மலர வேண்டும் அல்லவா காதல் பூக்கள்”  மிரட்டியதால் கோபம் கொண்ட சாளினி எப்போதும் உன்மேல் காதல் வராது என்று திட்டினாள். அதனால் அவன் தன்னை காதலித்து ஏமாற்றியதாக எல்லோரிடம் தூற்றினான்.  சாளினியோ தன்னைப் பற்றி தூற்றினாலும் “செய்யாத செயலுக்கு தான் ஏன் வருத்தப்பட வேண்டும்  என கவலைப்படாமல் இருந்தாள் .” இவ் பிரச்சினையே கவீனின் பிரண்ட்ஸ்  உண்மை தெரியாமல் அப்படியே சொல்ல  கவீன் கோபப்பட்டு தான் ஐ லவ் யூ சொன்னதற்காக வெட்கப்படுவதாகவும் தாறுமாறாகவும் பேசினான்.

“என்ன சமூதாயம்”…….. படித்திருந்தும் கவீனால் அன்று உண்மையை உணர முடியவில்லை. “யாரோ ஒருத்தன் சொன்ன கதையை நம்பும் அவன் அப்போது உயிருடன் இருக்கும் அவளின் வார்த்தையை நம்ப முடியாமல் போயிற்றே! ஏற்கனவே தான் ஒருவனை காதலித்து இருந்தால் உன்னுடன் எப்படி சகஜமாகவும் பேரன்பு வைத்திருக்கவும் முடியும். இது  புரியவில்லையே கவீனுக்கு, என அவனது பேச்சால் காயமடைந்து தன் மனதிற்குள் நிணைத்துக் கொண்டாள்.

உண்மையாக நேசித்து காதலித்திருந்தால் யார் சொல்லியும் கேட்டிருக்க மாட்டான் என நினைத்தவள் ” தன் போனில் மெசேஜில் ” நீ சாப்பிடம இருந்தாய், ஐ லவ் யூ சொன்னாத்தான் சாப்பிடுவன் என்று அடம் பிடிச்சதால ஐ லவ் யூ சொல்லிற்றன் …. மண்னித்துக்கொள்!” என்று அனுப்பினாள்… இவ்வாறு சண்டை போட்டு ஒருவாரம் பேசாமல் இருந்தனர். அதன் பிறகு இருவரும் சமாதானமாகி பேசினார்கள்.  ஆனால்… எந்த உறவும் என்றும் இல்லாமல் பொதுவாக பேசினார்கள். அவன் மனதில் காதல் அப்போது இருக்கிறதா? என அவளுக்கு தெரியவில்லை என்றாலும் சாளினி மனதில் அவனுக்கான காதல் இருந்தது.  தன் மனதில் கவீன் மேல் காதல் இருப்பதை அன்றைய சண்டைக்கு பின் தனிமையில் இருக்கும் போதே சாளினி தெரிந்து கொண்டாள்.  அதனால்தான் அவன் மீண்டும் அவளை சமாதானம் செய்யும் போது அவனை ஏற்றுக்கொண்டாள்.

இரண்டு வாரம் பேசிய பின் மீண்டும் இருவரும் காதலித்தனர். மிகவும் ஆழமாக……. கவீன் மீது அவளுக்கு அன்பு கூடிக் கொண்டே போனது. படிப்பதனையே காதலாக நிணைத்தவள்  கவீனை காதலித்தது அவளால் நம்ப முடியாதது என்றாலும் சாளினி கவீனை காதலிப்பது உண்மையே!  இருப்பினும் இருவரும் சண்டை போட்டுக்கொள்வார்கள். மீண்டும் கல்லூரி  வகுப்பில் இருவரும் முகம் பார்பதால் என்னவோ! சண்டையை மறந்து பேசிக்கொள்வார்கள். இப்படி காலித்துக் கொண்டவர்கள் ஒரு நாள் கவீன் ,

“லவ் எல்லாம் வேணாம் சாளினி , அதற்காக கதைக்காம இருக்க வேணாம். என்னால உண்னோட கதைக்காம இருக்க முடியாதடி ப்ளீஸ்” என்றான்.
“ஏன் என்னாச்சு உணக்கு ” என்றாள்.

“இல்லடி நாம ஒரே சண்டை பிடிக்கிறது. இது சரி வராது….” என்றான்…


ம்ம்ம் என்று பதில் சாளினி  அனுப்பிவிட்டு அதற்கு மேல் எதுவும் அனுப்பவில்லை. தனியாக அழுதாள். யாரிடம் ஆறுதல் கேட்பது, யாரிடமும் ஆறுதல் கேட்க முடியாதே! காரணம் சாளினி கவீனை லவ் பண்ண விசியத்தை யாரிடமும் சொல்லவில்லை. இப்படி அவளது நாட்கள் கடந்தது. கவீனும் சாளினியும் ஒருவாரத்திற்கு ஒரு தடவையோ அல்லது ஒரு நாளைக்கு குறிப்பிட்ட ரைம்க்கோ கதைத்துக் கொண்டனர்.  பிரிவு அவளை வாட்டினாலும் காதல் அதிகமாகியது.. இவர்கள் இருவரும்  காதலிக்கும் போது தன் உணர்வுகளை பகிர்ந்து கொண்டவர்கள். மற்ற காதலர்கள் காதலிக்கும் போது எவ்வாறு நடந்து கொள்வார்களோ அதே போல் இவர்களுக்குள்ளும்  நடந்திருந்தது.  இதனால் தன்னால் மறக்க முடியாத நிலையில் சாளினி இருந்தாள்.

மறுபடியும் கவீன் சாளினியுடன் பேசினாலும் அவன் அவளை காதலிப்பதாகவோ அதனை சார்ந்த விசியம் எதுவும் சொல்லவில்லை. சாளினியோ ஒவ்வொரு போன் அழைப்பிலும் இவ்வார்த்தை” நான் உண்னை காதலிக்கிறேன். இனி உண்ன விட்டு போகமாட்டன். கல்யாணம் பண்னிக்குறேன்”   என்று கவீன் சொல்ல மாட்டானா என எதிர்பார்த்திருந்தாள். கவீனோ சொல்லவுமில்லை. காலம் இவர்களுக்காக காத்திருக்குமா?  இல்லையே!  சாளினி வீட்டில் சாளினிக்கு கல்யாணம் பேச தொடங்கினார்கள். அதற்கு சாளினி தனக்கு தற்போது கல்யாணம் தேவையில்லை என்று சொன்னாள். காரணம் கேட்டபோது “கல்லூரி படிப்பு முடியட்டும் “என்று சொன்னாள். அதற்கு அவர்களும் சம்மதித்து பொறுமையாக இருந்தார்கள். அன்று..


“சாளினி கல்லூரி படிப்பு முடியட்டும் என்று சொன்ன நாள்”  ஆம்! சாளினிக்கு கல்லூரி படிப்பு பூரணமாக முடிவடைந்திருந்தது. அன்று அவள் கேட்ட ஒரு வருட அவகாசம் முடிந்திருந்தது.  அதனால் அவளுக்கு கல்யாணம் பண்னி வைப்பதற்கு முடிவு செய்தார்கள். கல்யான வேலைகள் மும்முரமாக நடைபெற்றது. அவளுக்கோ விருப்பம் இல்லை. அதை சொன்னால் காரணம் கேட்பதால் மௌனமாக  இருந்தாள். கவீன் அப்போதும் சாளினியுடன் பேசிக் கொண்டுதான் இருந்தான்.   அவள்,

“கவீன் ! வீட்டுல கல்யாணம் பண்ன சொல்றாங்க” என்றாள் சாளினி.

அதெல்லாம் இப்ப ஒன்றும் நடக்காது! நீ என்ன சொல்றா என்று பார்க்க சொல்றாங்க கவலைப்படாதே  என்றான். மேலும்,  ” நான் இருக்குறது பிடிக்கலையா? எதுக்கு என்ன அனுப்ப பார்க்கிறீங்க! என்று உங்க அம்மாவிடம் கேளு என்று சாளினியிடம் சொன்னான். சாளினி கவலையுடன் எதுவம் பேசாமல் என்ன உரிமையோடு கவீனிடம் கேட்பது . அவனிடம் மறைமுகமாக சாளினி கேட்டாலும் அவள் எதிர்பார்த்த பதில் அப்போதும் கிடைக்கவில்லை.

சாளினி எவ்வளவோ சொல்லியும் அவளின் பெற்றோர் கேட்கவில்லை.  “வெட்கத்துல நம்ம பொண்ணு கல்யாணம் வேணாம் என்றாள். என்று சாளினியின் அம்மா  சொந்தகாரர்களுடன் சொன்னார். லவ் பன்றன் என்று சொன்னால்  வீட்டுல கூட்டிற்று வா பார்பம்  என்று சொல்வாங்களே? என்ன பன்றது. கவீன் எதுவம் சொல்லவில்லையே என்ன செய்வது என தெரியாமல் குழம்பிப் போணாள் சாளினி.  கல்யாண வேலை முடிந்து திருமண நாளும் வந்து விட்டது.  உண்மையில் அன்றைக்கு சாளினிக்கு திருமணம்,

சாளினிக்கு வேற ஒருத்தன கல்யாணம் பண்ன ஒரு துளிகூட விருப்பமில்லை.  அதனால்…….

“செத்துபோயிடலாம் என முடிவு செய்து விட்டாள்….  மணமேடைக்கு தன் மகளை அழைத்து வர  சாளினியின் அம்மா அவளது அறைக்கு வந்து பார்த்த போது……… சாளினி மயங்கிய நிலையில் பேச்சு மூச்சற்று கட்டிலில் படுத்துக் கிடந்தாள். இதனை பார்த்து பதறிப் போன சாளினியின் அம்மா எல்லோரையும் கூப்பிட்டு சாளினியை ஆஸ்பத்திரிக்கு ஏற்றி சென்றனர். என்ன சொல்வது……”சாளினிக்கு இவ்வுலகில் வாழ விருப்பமில்லை போலும்!……. உண்மைதான் ! ஆஸ்பத்திரிக்கு ஏற்றி செல்லும் போதே சாளினியின் உயிர் அவளின் உடலை விட்டு பிரிந்துவிட்டது.

வீட்டிலிருந்தவர்களுக்கும் பெற்றோர்க்கும்” ஏன் இப்படி செய்திட்டாளே சாளினி ” என்று அழுதனர்.

“உயிர் போயிற்றே திரும்பி வருமா?” “அழுது புலம்பினால் என்னாக போகுது”

அவள் மயங்கிய நிலையில் படுத்திருந்த கட்டிலில் ” நான் உங்களுடன் உயிருடன் பேசும் கடைசி  நாளின் கடைசி நிமிடம் இது…… நான் இப்படி முடிவு எடுத்தது தவறுதான். வேற என்ன செய்றது என்று எனக்கு தெரியல்ல. என்னை மண்னிச்சுக் கொள்ளுங்க! நான் உங்கள விட்டு பிரிந்த விசியம் என்னுடைய கல்லூரி பிரன்ட்ஸக்கு தெரிய வேண்டாம். ப்ளீஸ் சொல்லாதீங்க!  என்று சாளினி தன் கையால் எழுதிய கடிதம் இருந்தது.

அவளுக்காக அவளது குடும்பம் மட்டுமின்றி அயலவர்களும் அழுதனர். சாளினி தன் பிரண்ட்ஸ்க்கு தெரிய வேணாம் என்று சொன்னதிற்கு காரணம் கவீனுக்கு தெரிந்தால் கவலைப்படுவான் என்றுதான். தன்னால் கவீன் கவலைப்படாமல் சந்தோசமாக இருக்கனும் என்று எண்னினாள் சாளினி.  அதனாலேயே தன்னை கல்யாணம் பண்ன சொல்லி வற்புறுத்தவுமில்லை போலும். ” அவள் அடிக்கடி சொல்வாள் வற்புறுத்தி வராது  காதல் “என்று  இதனால்தான்  கல்யாணம் பண்னுவியா என  கேட்கவுமில்லை. கவீன் கடைசி வரைக்கும் குற்ற உணர்ச்சியோடு வாழாமல் சந்தோசமாக இருக்கனும் என நிணைத்தாள்.

கடைசியில் அவன் நிணைவோடு வேறோருவனுடன் வாழ முடியாது என்று கடவுளிடம் சென்றுவிட்டாள். வீட்டில் உள்ளவர்கள் சாளினியின் பிரண்ட்ஸ்க்கு சொல்லாததினால் மரண இறுதி சடங்குக்கு வரவில்லை. கல்யாணம் என்பதனால் கவீன் போன் பண்னவில்லை.  காலையில் வாழ்த்து சோல்லவே போன் பண்னினான்.  பாவம்! நடந்ததை அறியாமல் ……………..

கவீன் போன் பண்னதும் போன் வேலை செய்தது. ஆனால் ஆண்ஸர் இல்லை.  கல்யாணம் நடந்து விட்டதால் அவளின் கணவன் போன் கதைக்க  விடலையோ! என்று கவீன் நிணைத்தான். உண்மை…………………. “அவள் உயிருடன் இல்லையே! அவள் தன்னுடன் பேசாமல் இருப்பதை கவீனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.  அந்த நொடிதான் கவீன் உணர்ந்தான்… தன் மனதிற்குள் சாளினி மேல் காதல் இருப்பதனை… தன் மனதிற்குள் இருக்கும் அவளை மணந்து கொள்ளாமல் விட்டோமே! என அழுதான்.

வேறோருத்தன் கட்டியதற்கு பின் ஒன்றும் செய்ய முடியாது.  மண்ணிப்பாவது கேட்போம் என கவீன் அவனது நண்பன் போனிலிருந்து அவளுக்கு அழைக்கின்றான்.  ஆனால் பயனில்லை. தொடர்சியாக போனில் அழைத்ததால் அவளின் பெற்றோர் ” சாளினி உயிருடன் இல்லை” என்று சொல்ல நம்பாததனால் நடந்தவற்றை சாளினியின் பெற்றோர் கூற நம்பித்தான் ஆகவேண்டும் நிலையில் கவீன் இருந்தான். சொல்லி முடித்தவுடன் போனை வைத்துவிட்டனர் சாளினியின் பெற்றாேர்.

தன்னால தான் அவள் இவ் முடிவுக்கு வந்து விட்டாள் என்றும் தான் செய்தது தவறு என்றும் நாள்தோறும் குடியும் புலம்பலும்மாக கவீன் இருந்தான். கவீனின் பெற்றோரின் ஆறுதலால்  பழைய நிலைக்கு வந்தான் . இருப்பினும் அவனால் சாளினியை மறக்க முடியவில்லை. ஆறுதல் சொல்ல அவளும் இல்லை.  இவ்வாறு  நடந்ததிற்கு கவீனின் ஈகோவும் தன் மனதை உரிய நேரத்தில் புரிந்து கொள்ளாமையே காரணம்.

“இறந்ததிற்க்கு பின் வருந்துவதனை விட உயிருடன் இருக்கும் போதே உறவுடன் இணைந்து சந்தோசமாய் வாழுங்கள். சண்டை வரதா உறவே இல்லையே! அதை சமாதனப்படுத்தி சந்தோசமாக வாழ வேண்டும். காதலித்தால் கல்யாணத்துடன் முடிவு பெறவேண்டும். கல்யாணம் செய்வதற்காகவே காதலியுங்கள்.”

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments