இந்த ஆட்டத்தை கொஞ்சம் பாருங்களேன்

2
1517

என்ன சகோஸ் தலைப்பை பார்த்ததும் நான் ஆடின பரதத்தையோ கதகளியையோ சொல்லப்போரன்னோ நெனச்சிங்களா??
அதுதான் இல்லங்க…
அப்போ என்னத்துக்குடா அந்தப்பேருன்னு நீங்க அசிங்கமா திட்டுரெதெல்லாம் எனக்கு கேக்குது ஆனா நான் அதுக்கெல்லாம் பீல் பண்ண மாட்டேனே….
ஒடனே நீங்க எல்லாரும் கோரஸா என்னைய பார்த்து மொறைக்காதிங்க நான் ஒரு பச்ச மண்ணுங்க வாய்தான் கொஞ்சம் ஜாஸ்தி ஆனா மனசு தங்கம்ங்க…..

புரியுது புரியுது நம்மட பெருமைய நம்மளே சொல்லிக்குரது அசிங்கம்தான் வேர என்னதான் செய்ரது யாரும் நம்பள பெருமை பாடுராங்க இல்லையே..
கேட்டா நீ அதியமானா இல்ல நாங்க ஔவையாரான்னு கேக்குரீங்க…

சரிங்க அதெல்லாம் போகட்டும் இங்க நான் ஆடின ஆட்டத்த சொல்லலங்க என் உயிர் நண்பன் ஒருத்தன் எ…உயிர வாங்கின சோகக்கதைய சொல்லப்போரனுங்க…..

என்னோட பேரு அழகுசுந்தரமுங்க
பெயர கேட்டதும் நான் என்னமோ சல்மான்கான்,சாருக்கான் மாதிரி சோக்கா இருப்பேன்னு நெனச்சா அது உங்கட தப்புங்க அதுக்காக சேது விக்ரம் மாதிரி கேவலமாகவும் இருக்கமாட்டேங்க ஒரளவுக்கு இருப்பேனுங்க.



உடனே அப்ப ஏன்டா உனக்கு அழகு சுந்தரம்ன்னு பெயரு வந்திச்சென்டு திட்ட போரிங்க….
அவசரப்பட்டு திட்டிடாதிங்க
“காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு” இல்லையாங்க அதான் எங்க அப்பத்தா அந்த பெயர வெச்சிட்டுங்க….
ஐய்யோ டயர்ட் ஆவிட்டீங்களா??
நான் எப்போவுமே இப்புடித்தாங்க தப்பா நெனச்சிக்காதிங்க…

அட என் நண்பன் பேரு சொல்ல மறந்துட்டேனுங்க…
அந்த எடுபட்ட பயலுக்கு நீங்களே ஒரு பெயரு வெச்சிக்கங்க சகோஸ் யோசிச்சி யோசிச்சி மண்ட ஒடஞ்சதுதான் மிச்சம்
ஒரு பெயரும் கிடைக்கல….எங்கம்மாக்கிட்ட கேட்டா ஒரே ஏன்டா பெயரு பெயரா கேட்டுன்னு இருக்கே என்னலே சேதின்னு கேட்டு ஒரு மாதிரி சிரிக்குதுங்க….
இதெல்லாம் தேவையா அதான் நீங்களே ஒரு பெயரு வெச்சிடுங்க….இப்போ நம்ம விசயத்துக்கு வருவம்

அன்று வெள்ளிக்கிழமங்க நான் பாட்டுக்கு செவனேன்னு பார்க்ல தூங்கிட்டு இருந்தேனுங்க அந்த எடுபட்ட பயன்….
அதாங்க எ…நண்பன் பக்கத்துல வந்து இருந்தாப்புடி வா மச்சான் நல்லா இருக்கியான்னு கேட்டு பேசிட்டு நல்லாத்தான் போய்ட்டு இருந்திச்சி பயபுள்ள இடையில கேட்டான் பாருங்க ஒரு கேள்வி…..

என்னங்க எ…வாயயே பாத்துட்டு இருக்கிங்க என்னைய போல அண்ணாந்து விட்டத்த பாருங்க ப்ளஸ்பேக் சொல்லப்போரன்….

“மச்சான்

“சொல்லு மச்சான்

“நீ லவ் பெயிலியராடா…??
கேட்டதுமே வாயில போட்ட தண்ணி மொத்தத்தயும் அப்புடியே கொட்டிட்டங்க கூடவே சேந்து பொறையும் ஏறிட்டுங்க…..
ஒருவழியா என்னைய சமாளிச்சி அந்த கொரில்லாகிட்ட

“எ…டா மூடா இப்புடி ஒரு கேள்வி கேட்டுட்ட

“சும்மா சொல்லுடா நீ லவ் பெயிலியர் தானே

“அட எடுபட்ட பயலே லவ் பண்ணாத்தானேடா பெய்லியர் ஆகும்

“சும்மா சொல்லாத மச்சான் இல்லாதத கேக்கவுமா ஒனக்கு பொற ஏறிச்சி

“ஏன்டா நீ கேட்ட கேள்விக்கு எனக்கு ஹார்ட் அட்டக்க வந்துருக்கனும்டா பொறையோட விட்டுச்சேன்னு சந்தோஷப்படு

“அட ஏ…மச்சான் சும்மா பொய் சொல்ல ட்ரை பன்னுர?? என்னட சொல்லு மச்சான்

“அடேய் நீ லூசா?? இல்ல என்னைய லூசாக்க போரியா??

“அதான் இல்லன்னு சொல்ரேனே….சொல்லு சொல்லுன்னா என்னத்த சொல்ல

“போ….மச்சான் அப்போ ஏன் லவ் ஸ்டேடஸ்ஸா போடுர

“அடேய் எரும இருக்குரததானேடா போட ஏலும் நானும் அவன்ட இவன்ட ஸ்டேடஸ்ஸ ஆட்டய போட்டு போடுரன் அவனுகளும் லவ் ஸ்டேடஸா போடுரானுகள் நா என்னடா பன்னேன் ஸ்டேடஸ பாத்தாட இப்புடி ஒரு கேள்வி கேட்ட..??

“நான் நம்ப மாட்டேன் நீ பொய் சொல்லுர

“அடேய் நெசமாடா

“நோ….நோ… நா நம்ப மாட்டேன்…

எனக்கு பொசுக்குன்னு கோவம் வந்துடுச்சுங்க நானும் எவ்வளவுதான் தன்மையா பேசுர….அதான் கோபத்துல
“ஆமாடா ஆமா நான் லவ் பெயிலியர்தான்னு சொன்னேங்க

பாவி பயல் துள்ளிக்குதிக்குராங்க
பாத்தியா பங்கு பாத்தியா எப்புடி கண்டுபுடிச்சேன்னு…..எனக்கு தெரியும் பங்கு

“ஆமாடா நீ பெரிய சீ.பி.சீ.ஐ.டி…தான் போ…என்று அவனை மனதால் திட்டிக்கொண்டே வெளியேறினேன்….

“பாவி பாவி உண்மைய சொன்னா நம்ப மாட்டானுகள் பொய்ய சொன்னா நம்புரான்வள் என்ன சமூகம்டா என நொந்து கொண்டே இரண்டு நாட்கள் கழிந்தது….



இரண்டு நாளுக்கு பொறவு ரோட்டால போனா எ ஏரியா பயபுள்ளயல் என்னைய பாவமா பாத்துட்டு என்னமோ பேசிட்டு போவுதுகள் எனக்கு ஒன்னுமே புரியலங்க….

சரின்னு வீட்டுக்கு போனா எங்கம்மா வேர என்னைய பாவமா பாக்குராங்க என்ன எலவுடான்னு…

“ஏம்மோ…என்னம்மோ…ஒரு மாதிரி பாக்குர??

“ஏலே என்னப் பெத்த ராசா எவளோ ஒரு பொட்டச்சிறுக்கி ஒன்னைய ஆச காட்டி ஏமாத்திபுட்டாலாமே யாருல அது

“ஒனக்கு ஆரும்மா சொன்னா??

“அதான்ல ஊருல இருக்குர எல்லானும் பேசிக்குரானுவள்…..
யாருல அவ??

அப்போதான் எனக்கு லைட்டா பத்தியது வந்த ஆத்திரத்துக்கு அந்தப்பயல போட்டு மிதிக்கலாம்ன்னு தோனிச்சி வேகமா போய்ட்டு பாத்தா அவன பாத்தா காணோம்…..
சரி வரட்டும்ன்னு பொதுக் கூடத்துல ஒக்காந்து யோசிச்சனுங்க…..

*.அப்போதான் புரிஞ்சிச்சி நம்ம சமூகத்துல வாழல சாக்கடைல வாழுரோம்ன்னு

*.இந்த சமூகத்துல உண்மைக்கெல்லாம் மதிப்பே இல்லங்க பட் பொய்ய சொன்னா ஒடனே நம்பிடுவாங்க

*.இந்த ஒலகத்த ஆளுரது ஸோஸியல் மீடியாதாங்க அத வெச்சித்தான் மனிசன எட போடுராங்க
சில நேரம் மனிசங்களுக்கு பயந்து புடிச்சத கூட பன்ன முடியாம இருக்குது…..

*.கடைசியா ஒன்னுங்க…..அதான் எ நண்பனுக்கு தப்பிக்க ஒரு விசயத்த சொல்லி அது ஊருக்கே பரவிச்சே அப்போவே அப்புடியானவன்ட சவகாசம் வேணாம்ன்னு மனசு சொல்லிட்டுங்க….

அப்புரம் என்ன மெதுவா எழும்பி வீட்டுக்கு போனேன் எவனோட பார்வையும் எனக்கு பெரிசா வெளங்கல ஏன்னா என்னோட மனசு சுத்தம்ன்னு எனக்கு தெரியும்ல….

அப்புரம் என்னங்க எவன்ட கருத்தையும் மண்டக்க போடாம தப்பிக்க கூட பொய் சொல்லாம என் வாழ்க்கை அழகாக நகர்ந்தது..

என் கதைய படிச்ச எல்லாருக்கும் பெரிய தேங்ஸ்ங்க…..

5 2 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
2 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Gobikrishna D
4 years ago
இதை மதிப்பிடுங்கள் :
     

Superb…

வஞ்சிமறவன்
4 years ago
இதை மதிப்பிடுங்கள் :
     

the way of your story telling is superb……