கருக்கூட அறையினிலே உருவெடுத்தோம்
கண்மணியவள் மடிதனிலே தவழ்ந்திருந்தோம்
காலங்களின் இடைவெளியில் அவதரித்தோம்
களங்கமில்லா அன்பினிலே தினம் நினைந்தோம்
தெய்வம் இங்கே அன்னையென நம்முன்னே
தேனான தாலாட்டில் துயில் அளந்தோம்
விரல் பிடித்து சின்ன நடை தடம் பழகி
விளையாடி தொட்டிலிலே நாள் தொலைத்தோம்
என் உதிரம் உன் உடலில் சுரப்பதென்ன
என் தாயின் மறு உயிரே என் உடன் பிறப்பே…..