உன்னவனாகிட ஆசை

0
776

 

 

 

பாத சுவடுகள் பதியும் கடற்கரை மணலில்
உன் பாதம் தடங்களின் அருகே
என் பாத தடத்தை பதித்திட ஏங்கும் ஒரு நெஞ்சத்தின் ஆசை

உன் கண்களின் கருவிழி காந்தத்தால்
கவர்ந்திழுக்கும் பார்வை பக்கங்களில்
நானும் ஒரு புலக்காட்சியாய்
உன் தேடலில் வசப்பட ஆசை

மௌன மொழி பேசும் காதல் பேச்சுக்களோடு கலந்து கனவுகளை
நிஜமாக்கி பார்க்கும் கலகலப்பின் மத்தியில்
உன் கவி மொழியில் மட்டும்
கரைந்திட ஆசை

கன்னத்தை தழுவும் ஒற்றை முடியை
கைகளால் வருடி நீ
காதோரம் அணைப்பது பார்த்ததும்
என் கன்னத்தை ஒருமுறை உன்
ஒற்றை முடியாக்கிட ஆசை

என் எதிர்கால ஆசைகளெல்லாம் ஆசைகளாக போகட்டும் ஆனால்
உன்னோடு உன் வருடல்களுக்கு ஏங்கும் ஆசை மட்டும் நிஜமாகட்டும்

உன்னை இறுதிவரை பின்தொடர 
உன் நிழலுக்கு மட்டுமல்ல !!! 
எனக்கும் ஆசை ……

 

 

 

 

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments